சிம்புவை பிரிந்தார் ஹன்சிகா ட்விட்டர் மூலமாக ஒரு கட்டிங்!

கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்… ரசத்தை எடுத்து குழம்புல ஊத்து கதையாக எப்போதும் யார் காதலையாவது நோட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி அவலாக இருக்குமோ, அனலாக தகிக்குமோ? எதுவாக இருந்தாலும் இருபெரும் நட்சத்திரங்களை பற்றிய பரபரப்பான விஷயம் இது. சமீபத்தில் முக்கிய நாளேடுகளிலும், முக்கிய வார இதழ்களிலும் சிம்பு மாய்ந்து மாய்ந்து கல்வெட்டிக் கொண்டிருக்கிறார். என்னவென்று? நானும் ஹன்சிகாவும் இன்னும் சுட சுட காதலித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று.

ஆனால் இதையெல்லாம் உறுதி செய்ய வேண்டிய ஹன்சிகா கொஞ்ச நாட்களாக சிம்பு பேச்சை எடுத்தாலே ஜில் முகத்தில் கொல் ஆகிறாராம். எங்க காதல் நிறைவேறும் என்று சிம்பு சொல்வதை போல ஹன்சிகாவும் சொல்ல வேண்டுமல்லவா? அதுவும் நடக்கவில்லை. காதலர் தினத்தில் ஏதாவது ஸ்பெஷலாக இருக்கும் என்று ஹன்சிகா ட்விட்டருக்கு போனால் அங்கிருந்தது அதிரடி. வேறொன்றுமில்லை, நான் ‘சிங்கிள்’தான் என்பதை உறுதிப்படுத்துகிற விதத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.

எப்படி தனது காதலை இதே ட்விட்டர் மூலம் உலகத்திற்கு சொன்னாரோ? அதே ட்விட்டரில்தான் தனது காதல் முறிந்த விஷயத்தையும் மிக நாசுக்காக வெளிப்படுத்தியிருக்கிறார் ஹன்சிகா. Happy valentines day to everybody , celebrating my day with my single ladies . இதுதான் ஹன்சிகாவின் ட்விட்.

இனி பதில் சொல்ல வேண்டியது சிம்புதான்.

Has Hansika bids adieu to Simbu’s love?

Simbu and Hansika who declared their love for each other open have not celebrated the Valentine’s Day together. Though Simbu was busy with his shoot and teaser launch, he never forgets to utter his love for Hansika whenever and wherever he gets such an opportunity. In contrast, Hansika in her twitter handle has said, “Happy Valentine’s Day to everybody. Celebrating my day with my single ladies”. Does she mean she is single now? Why can’t she say celebrating with her friends or girl friends? Why single ladies? Will she clarify what happens to her love to Simbu?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
2015 ல் அஜீத்தின் சம்பளம் 50 கோடி!

2015 ல் அஜீத்தின் சம்பளம் 50 கோடி! இப்படி சந்தோஷமாக அறைகூவல் விடுப்பவர் அஜீத்தின் ரசிகர்களில் ஒருவராக இருந்தால் ஆச்சர்யம் இல்லை. ஆனால் சொல்கிறவர் பிரபல தயாரிப்பாளர்...

Close