சிம்பு நயன்தாரா திருமணம்

காலசர்ப்ப தோஷத்தை களைவதற்காக காளஹஸ்தி கோவிலுக்கே போய் கையெடுத்து கும்பிட்டு வந்த நயன்தாராவை மேற்படி கும்பிடு ஒன்றும் காப்பாற்றவில்லை. மாறாக காதலரை பிரித்து கண்ணாமூச்சி ஆடிவிட்டது. தேர்தலில் தோற்று தோற்றே பிரபலம் ஆகிவிடுகிற அரசியல்வாதிகள் மாதிரி, நயன்தாராவும் காதலில் தோற்று தோற்றே பேரழகியாகிவிட்டார். இன்றைய தேதிக்கு நயன்தாராவுடன் சினிமாவில் அறிமுகமான ஹீரோயின்கள் பலர் அக்கா கேரக்டருக்கு டிக் அடிக்கிற நேரத்தில், நயன்தாராவுக்கு மட்டும்தான் மார்க்கெட் முழுக்க மல்லிகை பந்தல். இப்பவும் ‘இரண்டு கோடி சம்பளம் தர்றதுன்னா பேசுங்க. இல்லேன்னா போனை கட் பண்ணுங்க’ என்கிற அளவுக்கு அவரது பேஸ்மென்ட்டும் ஸ்டிராங். பில்டிங்கும் ஸ்டிராங்.

இது ஒருபுறம் இருக்க, நயன்தாராவுக்கு எப்போ கல்யாணம்? யாரை லவ் பண்றாரு? போன்ற நாட்டிற்கு இன்றியமையாத விஷயங்களை விவாதிக்காத பத்திரிகைகளே இல்லை என்றாகிவிட்டது. சிம்புவுடன் அவர் இணைந்து நடிக்கும் படத்தில் கெமிஸ்ட்ரி எப்படியிருக்கிறது என்பதை அறியவும் துடியாய் துடிக்கிறார்கள் இங்கே.

பாண்டிராஜ் இயக்கி அவரே இணைத் தயாரிப்பாளராக இருக்கும் புதிய படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. (டைட்டிலை எப்பண்ணே அறிவிக்கிறீங்க? ) நடுவில் சில நாட்கள் பாண்டிராஜிடம் சொல்லாமலே அவர் ஹன்சிகாவை பார்க்க அமெரிக்க போயிருத்ந விஷயமெல்லாம் நாடறிந்த கதை. தற்போது பரபரப்பாக நடக்கும் இந்த படப்பிடிப்பில் சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடப்பது போல காட்சி இருக்கிறதாம். அதுவும் ஒருமுறையல்ல, இருமுறையல்ல, நான்கு முறை.

இருவரும் தனியே இருக்கும் போது ஒரு தாலியை எடுத்து நயன்தாராவுக்கு கட்டுவாராம் சிம்பு. அதற்கப்புறம் அப்பா அம்மாவுக்கு தெரியாமல் ரிஜிஸ்தர் ஆபிசில் ஒருமுறை திருமணம் செய்து கொள்வார்களாம் இருவரும். ஒருவர் இந்து, இன்னொருவர் கிறிஸ்டியன். அதற்காக கிறிஸ்துவ முறைப்படி ஒரு திருமணம் நடக்குமாம். இந்து முறைப்படி ஒரு திருமணம் நடக்குமாம். இப்படி ஒரே படத்தில் நான்கு முறை திருமணம் செய்து கொள்வார்களாம் இருவரும்.

சிம்பு நயன்தாரா விஷயத்தில் ஒரு பேப்பரை கிழித்து எறிந்தால் கூட அதை பரபரப்பாக படித்து இன்புறுகிற மக்களும் பார்த்து சந்தோஷப்படுகிற ரசிகர்களும் இருக்கிறபோது நான்கு திருமணம் என்ன, நாற்பது திருமணம் கூட செய்வதாக காட்டலாம். படம் பார்க்க மொத்த தமிழ் சனமும் ஆவலோடு காத்திருக்குஃபையிங்.

 

Simbu weds Nayan not once but 4 times!

Nayanthara’s market in south Indian film industry is on the up only with every passing day. Day in and day out, whatever little story that makes substance or not, makes a grand news for the fans. And she is literally enjoying the phase in her own way!

The latest buzz in Kollywood is about the Pandiaraj’s untitled film which has Simbu and Nayan playing the lead. By posting a photo of Nayan and Simbu during the shoot, director Pandiaraj made sure that he hit the right chord to hype his film amongst audience, and he has succeeded in its handsomely, as the networking sites go gaga over the photo.

Now we have another piece of information. In the film Simbu ties the knot to Nayan not once, but 4 times, say sources close to the unit. Simbu ties a ‘Thali’ when they were alone will be once. On another occasion both will get the marriage registered at Sub-Registrar office. On the third occasion, Simbu weds Nayan as per Christian customs and on the 4th occasion he weds her again as per Hindu customs.

Pandiaraj knows the pulse of our audience and trying to milk as much as possible the revenue milking cow!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
என்னய்யா ஊரு இது? கே.பாக்யராஜ் கலகலப்பு

‘தமிழ்த்தாய் வாழ்த்து, கொஞ்சம் எல்லாரும் எந்திரிங்க’ என்று தொகுப்பாளர் சொன்ன பிறகுதான் எழுகிற வழக்கம் நமக்கு. அப்படி எழுந்த பின்பு ஒலித்தது வழக்கமாக நாம் கேட்கும் வாழ்த்தல்ல......

Close