சிம்பு- பாண்டிராஜ் மோதல்! -ஷுட்டிங் நிறுத்தம்

சண்டை சேவலுக்கு கொண்டையிலயும் ரோசம் இருக்கும் என்பது போல, சிம்பு நடிக்கிற படம் என்றாலே பஞ்சாயத்துக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. இதையெல்லாம் தெரிந்தேதான் தலையை கொடுத்தார் டைரக்டர் பாண்டிராஜ். இப்போது ஆயிரம் அனாசின்களை ஒரே நேரத்தில் விழுங்கினாலும் மண்டை வலியும் நிற்காது. படப்பிடிப்பும் நடக்காது போலிருக்கிறது. ஏன்?

சிம்புவின் தலையீடு அதிகம் இருந்ததாம். இவர் அதற்கெல்லாம் மசியாமல் தன் போக்கிலேயே அந்த படத்தை எடுக்க, இது சரிப்பட்டு வராது என்று படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார் சிம்பு. பாண்டிராஜுக்கு கொடுத்திருந்த தேதிகள் அத்தனையையும் அப்படியே எடுத்து கவுதம் மேனனுக்கு வழங்கிவிட்டாராம். இந்த படம் முடிந்தபின் பாண்டிராஜ் படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று சிம்பு கூறிவிட்டதால், எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கிறதாம்.

ஐம்பது நாட்களில் படத்தையே முடித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்த பாண்டிராஜுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல் எப்போது எப்படி தீருமோ? இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சு வார்த்தை மட்டும் நடந்து கொண்டேயிருக்கிறதாம்.

All is not well between Simbu and director Pandiaraj

Simbu after dropping Vettai Mannan was focussing on the new film with director Pandiaraj and the film was progressing well. However recently nothing was moving right for the director Pandiaraj. It appears that there was too much intervention by Simbu in the making of the film to the utter discomfiture of the director Pandiaraj, who however go on to make the film in his own way. Angered by it Simbu stopped the shoot and has given the call sheets now to Gautham Menon who started his film with Simbu recently. Though talks are going on between them, nothing so far has emerged.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
படப்பிடிப்பில் பாதியில் ஓடிய நடிகை! நாங்க எந்த வம்பும் கூட பண்ணலையே? டைரக்டர் கவலை!

ஓடிப்போகிற நடிகைகளை, தேடிப் போய் கெஞ்சுகிற டைரக்டர்கள் இருக்கிற வரைக்கும் ஒட்டமும் இருக்கும். நடிகைகளின் ஆட்டமும் குறையாது. ஆனால் டைரக்டர் பாலு ஆனந்த் அது கெடக்கு போ...

Close