சிம்பு- ஹன்சிகா காதல் முறிந்தது எப்படி? வெளிவராத பின்னணி தகவல்களுடன் எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்!

யெஸ்… மூணாவது மாடியிலிருந்து விழுந்த முட்டையாகிவிட்டது சிம்புவின் காதல். இந்த முட்டை உடைவது இது மூன்றாவது முறை.

முதல் காதல் எதுவென்று நாம் இப்போது நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. யூ ட்யூபில் அது இன்னும் ஆடியோ வடிவ அடையாளமாகவே இருக்கிறது. அதற்கப்புறம் நயன்தாராவுடனான காதல்! ஒரு கொழுத்த ராவு காலத்தில் இவரும் அவரும் இருக்கிற ஏடாகூட ஸ்டில்களை சிம்பு யூ ட்யூபில் வெளியிட, ‘அட… இவ்வளவுதானா உன் மனசு?’ என்று வெறுத்துப்போன நயன்தாரா, வெகு சீக்கிரத்தில் உதறித் தள்ளினார் சிம்புவின் நினைவுகளை. இப்போதும் பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பில் இவரிடம் முகம் கொடுத்துக் கூட பேசுவதில்லை நயன்தாரா.

அருகருகே ஒரு மணி நேரம் உட்கார்ந்திருக்கக் கூடிய சூழ்நிலையில் கூட சிம்புவை திரும்பி பார்ப்பதில்லையாம் அவர். ஆனால் ஷாட்டில் மட்டும் சிரித்து… காதலித்து… கட்டிப்பிடித்து… என்று மெக்கானிக்கலாக போய் கொண்டிருக்கிறது சிம்பு நயன் உறவு. இந்த நிலையில் ‘நான் சிங்கிள்தான்’ என்று காதலர் தினத்தன்று ஓப்பனாக அறிவித்திருந்தார் ஹன்சிகா. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஸ்டேட்டஸ்சை தொடர்ந்து இன்று சிம்புவும் ஒரு அறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில் எனக்கும் ஹன்சிகாவுக்கும் இடையே ஒட்டும் இல்லை. உறவும் இல்லை என்று கூறிவிட்டார். இனிமேல் நானும் சிங்கிள்தான். என் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கும் என்கிறது அந்த அறிக்கை.

இந்த காதல் கண்ணாடி சில்லுகளாக உடைந்தது எப்படி? அதன் பின்னணி என்ன?

மும்பையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். எத்தனையோ ஆண்கள், எத்தனையோ பெரியப்பா, சித்தப்பாக்கள், மாமாக்கள் என்று சினிமாவில் அவர் சந்தித்திராத உறவுகளே இருந்திருக்க முடியாது. அப்படிப்பட்டவருக்கு காதல் வருகிறதென்றால், அவர் எந்தளவுக்கு சிம்புவை நேசித்திருக்க வேண்டும்? நேசித்தார். ஆனால் அந்த காதலை தன் அதிகப்படியான பொஸசிவ் காரணமாகவே காலி பண்ணியிருக்கிறார் சிம்பு.

இன்று தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகை ஹன்சிகா. ஆனால் சிம்பு தமிழ்சினிமாவிலேயே தர வரிசைப்படி எத்தனையாவது இடத்திலிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். காதலுக்கு ஏற்ற தாழ்வு இல்லை. எளிமை பெருமை இல்லை என்பதை போலதான் இந்த காதலும் அமைந்தது. ஆனால் அந்த உரிமையை வைத்துக் கொண்டு ஹன்சிகாவை தாலி கட்டிய மனைவி போலவே நடத்த ஆரம்பித்தார் சிம்பு. தனது சினிமா கேரியரில் சிம்பு தலையிடுவதை அரசல் புரசலாக அனுமதித்தாலும், அதுவும் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போகிற அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறார் சிம்பு. எப்படி? ஒரு சின்ன உதாரணம்தான் இது.

‘மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கப் போகிறார் என்றதுமே அலறி அடித்துக் கொண்டு ஹன்சிகாவை தடுத்தார் சிம்பு. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் நாங்க ஏற்கனவே கையெழுத்து போட்டுட்டோம். இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சமாளித்தார் ஹன்சிகாவின் அம்மா. அதோடு விட்டாரா இவர்? கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த பிரச்சனை இது. மான் கராத்தே படத்தின் டீஸர் பிப்ரவரி 14 ந் தேதியான காதலர் தினத்தன்று வெளியிட தீர்மானித்தது தயாரிப்பாளர் தரப்பு. இதை கேள்விப்பட்ட சிம்பு, உடனடியாக அந்த தயாரிப்பாளருக்கு போன் அடித்தாராம். ‘காதலர் தினமும் அதுவுமா என் காதலி ஹன்சிகா யார் கூடவோ இருக்கிற ட்ரெய்லரை வெளியிட்டால் என் மனசு தாங்காது. அதனால் இந்த டீஸரை இன்னும் ஒரு வாரம் கழிச்சு வெளியிடுங்க’ என்றாராம்.

கோடி கோடியாக கொட்டி படமெடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கு இவர்களின் தகர டப்பா காதல் ஒரு பொருட்டேயில்லை அல்லவா? அவர்கள் சிம்பு சொல்வதை காது கொடுத்துக் கூட கேட்க தயராக இல்லை. சொன்னபடியே காதலர் தினத்தன்று அந்த டீஸரை வெளியிட்டு விட்டார்கள். இதில் கோபமுற்ற சிம்பு ஹன்சிகாவிடம், ‘நான் அப்பவே இந்த படத்தில் நடிக்காதேன்னு சொன்னேன், கேட்டியா?’ என்று கொதிக்க, ‘இதெல்லாம் உங்க வேலையில்ல . என் கேரியர்ல நீங்க தலையிடாதீங்க’ என்று கூறியிருக்கிறார் ஹன்சிகா.

இது ஒருபுறமிருக்க, தற்போது ஹன்சிகா நடித்துக் கொண்டிருக்கும் ‘உயிரே உயிரே’ படத்தில் ஜெயப்ரதா மகனுடன் இவர் சிரித்துப் பேசுவதையும், வேறு சில ஆண் ஹீரோக்களிடம் ஹன்சிகா வெள்ளந்தியாக பழகுவதையும் கூட துப்பறிந்து கண் சிவந்தாராம் சிம்பு. இந்த நேரத்தில்தான் பிரபல வார இதழில் சிம்புவின் பேட்டி வந்தது. அதில் ‘ஹன்சிகா என் காதலி. நயன்தாரா என் தோழி’ என்று சிம்பு கூற, அதுவும் கடுப்பேற்றியதாம் ஹன்சிகாவை.

இவர்கள் காதலிக்கட்டும். இல்லை குரங்கு கையில் பூமாலை கிடைத்த மாதிரி அந்த காதலை பிய்த்து கூட வீசட்டும். அது அவர்கள் இருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால் இந்த கேலி கூத்துகளுக்கு பின்னால் ஒரு தயாரிப்பாளரின் வலி இருக்கிறது என்பதை ஏன் இருவருமே புரிந்து கொள்ளவில்லை? இவர்களுக்கு ஸ்டார் ஓட்டலில் ரூம், சாப்பாடு, கேரவேன் என்று கொட்டி அழுதவர் ‘வாலு’ பட தயாரிப்பாளர் சக்கரவர்த்தி. இந்த படத்தின் இயக்குனர் எங்கோ ஒரு குக்கிராமத்திலிருந்து கனவுகளை சுமந்து கொண்டு வந்தவர். இவர்களது கனவுகளை ஒரு நொடியில் உடைத்து தள்ளுகிற அதிகாரத்தை இன்னும் சில மாதங்களுக்காவது தள்ளிப் போட்டிருக்கலாமே ஜோடிகளே… ஒரு வேளை படத்தில் உங்களின் காதல் வெற்றி பெறுவதை போல காட்சி அமைக்கப்பட்டிருந்தால், இந்த களேபர செய்திகள் அந்த க்ளைமாக்சை எந்தளவுக்கு சிதைத்து வைக்கும்? யோசித்தீர்களா?

வருகிற மார்ச் 3 ந் தேதி ‘வாலு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறப் போகிறது. நேற்று வரைக்கும் படத்தில் வரும் ஜோடிகள் ரெண்டும் ஆடியோ விழாவுக்கும் கைகோர்த்து வரும் என்று கனவு கண்டிருப்பார் தயாரிப்பாளர். அப்படி இருவரும் வருகிற காட்சி ஒன்று போதும், படத்தின் பப்ளிசிடிக்கு என்று நினைத்திருப்பார் அவர். அந்த கனவில் இவர்கள் இருவரும் சேர்ந்து வீசியிருப்பது கல் அல்ல, நம்பிக்கை துரோகம். இப்போது அந்த விழா நினைத்தபடி நடக்குமா என்பதே சந்தேகமாக போய்விட்டது.

உங்களின் விளையாட்டு காதலுக்கும், வெட்டி துரோகத்திற்குமான சம்பளத்தை வெகு சீக்கிரம் உங்கள் இருவரின் கணக்கிலும் வரவு வைப்பாள் எங்கள் கலைத்தாய்! அதுமட்டும் நிச்சயம்.

-ஆர்.எஸ்.அந்தணன்

Simbu announces the breakup in relationship with Hansika

Giving credence to the rumours about the imminent break-up of ‘love’ affair between Simbu and Hansika, Simbu has issued a press release confirming the same. While it is purely personal for their break-up in relationship, we out of curiosity investigated the possible reasons. Simbu as always is possessive about everything in life. This was evident from his first love to till the break-up. It is perhaps the most important reason behind the breakup in relationship.

Simbu did not want Hansika to act in Maan Karate opposite to Siva Karthikeyan. He is said to have told Hansika about it, but Hansika told him that it was too late as she had already signed on dotted lines. It was also learnt that he was unhappy and annoyed as Hansika was speaking and spending time with her co-star actress Jayaprada’s son, during the shoot of Uyire Uyire.

When he learnt that Maan Karate teaser was to be released on Valentine ’s Day he rang up the producer of Maan Karate to delay the teaser by about a day or two, as he did not want to see his love Hansika with another male on Valentine’s Day. The producer went ahead and released the teaser due to which he burst out at Hansika. She coolly responded saying not to interfere in her career matters, which must have sealed the fate on the affair.

As long as it is their personal matter it does not matter much. However due to the sudden announcement by Simbu about the break in his relationship with Hansika must be very cruel for his producer NIC Arts Chakravarthy who must have thought of exploiting their relationship for a wide publicity to his film, Vaalu, which has both as the lead pair. Debutant director Vijay Chandar banks on the film for his career graph to go upwards. Without giving any thought to these small but important matters for them, would put them in piquant situations about their venture. Already the film was coming out after a long delay. Would not it be prudent to think about them and the film before announcing the breakup, Simbu?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Aal Movie Stills with Press Release

[nggallery id=143]

Close