சிவகார்த்திகேயனின் ஜில் ஜில் திட்டம்! சந்தோஷத்தில் புது தயாரிப்பாளர்கள்

சிவகார்த்திகேயன் கால்ஷீட் வேணுமா? இருபது கோடி இருந்தால் யார் வேண்டுமானாலும் அணுகலாம். அணுக வேண்டிய முகவரி- செல்லக் கை, கேர் ஆஃப் சிவகார்த்திகேயன். சென்னை மற்றும் தமிழகமெங்கும்….

அல்லக்கை கேள்விப் பட்டிருப்போம். இது என்ன செல்லக் கை? சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உயர்த்திவிட்ட கை. அதனால்தான் இது செல்லக் கை. நடிப்பில் சிகரம் தொட்டாச்சு. நகைச்சுவையில் மனசை தொட்டாச்சு. அடுத்து தயாரிப்பாளராக புரமோட் ஆக வேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாம். ஆனால் நேரடியாக படம் தயாரித்து அதில் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு பொறுப்பேற்பதை விட தன் வளர்ச்சியில் அக்கறை காட்டும் சில தயாரிப்பாளர்களை அருகில் வைத்துக் கொண்டு லம்ப்பாக அடிக்க வேண்டும். அதே நேரத்தில் தயாரிப்பு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற திட்டத்தோடு காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவரை வைத்து படம் தயாரிக்க விரும்பும் புது தயாரிப்பாளர்களுக்கென்றே ஒரு திட்டம் வைத்திருக்கிறார்களாம் சிவா கோஷ்டியினர். முதலில் இந்த இருபது கோடி பணத்தை இரண்டு தவணைகளாக கொடுக்க ஒப்புக் கொள்ள வேண்டும். இதில் யார் யாருக்கு எவ்வளவு தொகை என்பதெல்லாம் பணம் கொடுக்கிறவருக்கு சொல்லப்பட மாட்டாது. கதை கேட்பதிலிருந்து, அன்றாட கூலியை வழங்கி படப்பிடிப்பை முடிப்பது வரை சிவா அண் கோஷ்டியே பார்த்துக் கொள்ளும். பின்பு இதே படத்தை இருபது கோடிக்கும் மேல் விற்று அந்த லாபத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு சேர்த்து கொடுப்பார்கள். அந்த லாபத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை கடைசியாக இந்த மறைமுக தயாரிப்பாளர் வழங்க வேண்டும்.

இப்படியொரு அற்புதமான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறாராம் அவர். இப்படி கெடுபிடிகள் செய்தாலும் க்யூ கட்டி நிற்கிறார்களாம் சிவாவின் கால்ஷீட் பெற. அதுதான் யோகம்ங்கறது…

Siva Karthikeyan to try his hands in production?

Siva Karthikeyan is one of the two popular heroes who made it big in the film industry, over night. Having given hat-trick hits, his focus is now on producing films. While his advisors push him to produce film, he decides to go slow with a plan in this too. While he will produce the film by himself, he would do it with others money, so that he can avoid the ignominy of avoiding any loss in the business. Those who seek Siva’s call sheet should be prepared to pay Rs.20 crores in two instalments which Siva and Co will handle in producing the film without divulging details of payment made and to whom. After the release of the film, the producer would get a share in the profit. Despite these conditions, people crowd Siva for his call sheet.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நயன்தாராவுக்கு ஒரு நீதி, தமன்னாவுக்கு ஒரு நீதி… அஜீத்திற்கு தெரிந்தே ஒரு அநீதி!

அஜீத்தின் ஆரம்பம் வருவதற்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி. அப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த நயன்தாராவின் புகைப்படத்தை தப்பி தவறி கூட வெளியிடவில்லை அப்படத்தின் டைரக்டர் விஷ்ணுவர்த்தன்....

Close