சிவகார்த்திகேயனின் ரஜினி ஃபார்முலா! -சந்தோஷத்தில் கலையுலகம்

‘ஆண்டவன் கொடுக்கறதை தடுக்கவும் முடியாது. ஆண்டவன் தடுக்கறதை கொடுக்கவும் முடியாது’ என்பதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உணர்ந்து ரசிப்பதும், அல்லது உணர்ந்து தவிப்பதும் சினிமாக்காரர்கள்தான். சிலரது சினிமா கேரியர் கோழிக் காலில் சிக்கிய குப்பையாகிப் போவதும் உண்டு. யானை முதுகில் ஏறிய அம்பாரியாக மாறியதும் உண்டு இந்த மரியாதைக்குரிய வெள்ளிக்கிழமைகளில்.

கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வதே ஒரு கலை. அதை மிக பிரமாதமாக உள்வாங்கி அதற்கேற்ப வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார் இளம் ஹீரோ சிவகார்த்திகேயன். அதுவும் எப்படி? ரஜினி தொடர்ந்து சூப்பர் ஹிட் அடித்து வந்தாரே, அந்த மாதிரி. ரஜினி ஃபார்முலாவை பின்பற்றினால் போதும். அது நம்மை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடும் என்கிற நம்பிக்கையின் காரணமாக தனது பட வியாபாரம் குறித்து சில சட்ட திட்டங்களை போட்டிருக்கிறாராம். இதற்கு ஒப்புக் கொள்கிறவர்களுக்குதான் கால்ஷீட். இல்லையென்றால் இல்லை. சிவகார்த்திகேயனின் இந்த வியூகம் அவருக்கு மட்டுமல்ல, தமிழ்சினிமாவுக்கே ஆரோக்கியம் என்பதுதான் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா? ஒரு ஹீரோவின் வெற்றியை வைத்துதான் அவரது சம்பளம் ஏறும். அவரது படங்களுக்கான வியாபாரமும் ஏறும். பொதுவாக அந்த ஹீரோவின் முந்தைய படம் எந்தளவுக்கு வசூல் செய்கிறதோ, அதைதான் அடுத்த படத்தின் வியாபாரமாக்குவார்கள் இங்கே. பத்து கோடியில் தயாராகிற படம் பனிரெண்டு கோடிக்கு விற்கப்பட்டு இருபது கோடி வசூல் செய்தால், அடுத்த படத்தை இருபது கோடிக்கு விற்பார்கள். இதுதான் நடைமுறை. இப்படி செய்யும்போதுதான் சிக்கலே வரும். அடுத்த படமும் அதே இருபது கோடி வசூல் செய்தால் போச்சு. இல்லையென்றால் வாங்கியவர்களுக்கு லாஸ். சிவகார்த்திகேயனின் புதிய ஃபார்முலா இங்குதான் வேறுபடுகிறது.

முந்தைய படம் இருபது கோடி வசூலானதே என்பதற்காக அடுத்த படத்தை இருபது கோடிக்கு விற்காதீர்கள். எப்படி பனிரெண்டு கோடிக்கு விற்றீர்களோ, அதைவிட ஒரு கோடி மட்டும் அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் வசூல் குறைந்தாலும் அந்த படம் நஷ்டத்தில் யாரையும் தள்ளிவிடாது என்கிறாராம். இவரது கடைசி படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் 26 கோடி ரூபாய் வசூல் என்கிறார்கள். அப்படியென்றால் அடுத்து அவர் நடித்து வெளிவரப்போகும் மான்கராத்தே படத்தின் வியாபாரமும் 26 கோடி ரூபாயாகதானே இருக்க வேண்டும்? ஆனால் பதினாறு கோடிக்கு மேல் அந்த படத்தை விற்க வேண்டாம் என்கிறாராம் அவர்.

அப்படி விற்றால் தயாரிப்பாளருக்கு சிறிது லாபமும், விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கணிசமான லாபமும் கிட்டும். யாரும் லாஸ் என்று வாயை திறக்கவே மாட்டார்கள். இப்படிதான் ரஜினியும் சூப்பர் ஸ்டார் லெவலுக்கு உயர்ந்தார். சிவகார்த்திகேயனின் இந்த ஃபார்முலா யார் மனசையும் நோகடிக்கவில்லை. மாறாக சந்தோஷத்தையே கொடுத்திருக்கிறதாம்.

தலைகுப்புற ஆடும் ஹீரோக்கள் சிவகார்த்திகேயனை பின் பற்றுங்கப்பா…

Siva Karthikeyan follows Rajini’s policy to sustain his success rate?

Super Star Rajinikanth has established a niche for himself not only in K-town but throughout India as well. He was careful and meticulous in following his strategy to ensure that his career graph goes up and upwards only. Siva Karthikeyan has understood the formula adopted by the super star and is implementing his for his career growth as well.

What is so special in that strategy Rajini has adopted and now Siva Karthikeyan is following now? Simple. Don’t escalate the film price after a hit and maintain reasonable increase in the price for subsequent films. Rajini had never demanded a price equivalent to the collections of his previous films. If his previous film had collected Rs.20 crores for example, he would not allow his producers to sell his next film to sell for 20 crores plus, instead he would advice them to increase the price by about couple of crores only so that everyone in the industry right from producer to theatre owners will be happy to get reasonable profit. It is because of this he was able to sustain his success throughout his career. Likewise Siva Karthikeyan seems to have understood the strategy and is adopting the same policy now. His previous hit Varuthapadatha Valibar Sangam which fetched Rs.26 crores. He has now asked his producer not to raise the price of his upcoming film Maan Karate to 26 crores, instead he ensured that the film was sold for Rs.16 crores. Though it might give less profit to its producers, still everyone in the industry will enjoy the profit by distributing the film.

Well, if every hero understands this simple strategy then K-town will be a happy place for everyone, is it not?

Read previous post:
தமிள் ரசிகர்கள் குண்டு குண்டுன்னு கேட்குது… தளதள சஞ்சனா சிங் சந்தோஷம்

பூக்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. பொற்றாமரைக்குளம் அப்படியேதான் இருக்கிறது. நமீதா போனால் என்ன? ஒரு சஞ்சனா சிங் வந்துவிட்டு போகட்டுமே என்கிற பெரிய மனசுக்காரர்கள் இருக்கிற வரைக்கும் பூக்களுக்கும்...

Close