சிவகார்த்திகேயனுக்கு ஸ்ருதி சிக்னல்…
அதென்னவோ தெரியவில்லை. உலக நாயகனின் மூத்த மகளுக்கு உள்ளுர் சினிமா கைகொடுக்கவே இல்லை. அவர் தமிழில் நடித்த படங்கள் இரண்டுமே அவருக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி, உற்சாகத்தை கொடுக்கவில்லை. தெலுங்கு இந்தி என்று திசைமாறினாலும், தமிழின் மீது ஓரு தீராக்காதல் இருந்து கொண்டேயிருக்கிறது அவருக்கு. இந்த நேரத்தில் நயன்தாரா, அமலாபால் என்று இரண்டு டாப் ஹீரோயின்களுடன் நடிக்க கமிட் ஆகியிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஸ்ருதியுடனும் நடித்துவிட்டால், புகழின் உச்சியில் பூ வைச்ச மாதிரி இருக்குமே என்று தோன்றியிருக்கிறது. முறையாக தகவல் அனுப்பினாராம். கதை சரியா இருந்தா நான் ரெடி என்று பச்சை சிக்னல் விழுந்திருக்கிறதாம்.
அது சிவப்பாவதற்குள் அட்வான்சை கொடுத்துருங்க பிரதர்…
Shruti gives in principle nod to Siva Karthikeyan
Siva Karthikeyan is flying high as his popularity is soaring with leading heroines from the industry are vying to pair with him. We hear that Nayan and Amala Paul are likely to play his love interest in his films. Meantime, Siva Karthikeyan eyes Shruti Hassan to play his lead in a film and has communicated to her. She seems to have given Siva ‘in principle’ nod to the proposal. In other words if the script is ok she is ready to proceed, she had indicated to Siva.
nice