சிவகார்த்திகேயனை டென்ஷன் ஆக்கும் தனுஷ்….

எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தே வந்தது. அதை உருவாக்கிக் கொடுத்தவர் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். அதற்கப்புறம் படமெடுத்த பாம்பு, சொந்த புற்றையே சுரண்டி தள்ளியது போல, தனுஷின் இடத்தை மிக சுலமாக பிடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

தனுஷ் இதுகுறித்து கவலைப்பட்டாரோ இல்லையோ? உசுப்பேற்றும் கூட்டம் ஒன்று தனுஷை விஷமாக்கியது. முந்தைய ஒப்பந்தப்படி தனுஷ் படத்தில் மீண்டும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஹன்சிகா மோத்வானியுடன் நடிக்கும் அவருக்கு அடுத்த படத்தில் நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறையவே உண்டு. இப்போது சிவாவுக்கு இருக்கும் மார்க்கெட் லெவலுக்கு நயன்தாராவிடம் கேட்டாலும் தப்பில்லை. ஆனால் தனுஷ் என்ன செய்தார் தெரியுமா?

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் போனா போவுது என்று நடிக்க வந்து இன்று ஸ்டாராகிப் போன ஸ்ரீதிவ்யாவைதான் அழைத்தார்! என்னதான் அது ஊதாக்கலரு ரிப்பனாக இருந்தாலும் அதை வெளுத்துப்போன ரிப்பனாகவே பார்க்கிறாராம் சிவா. தனுஷ்ட்ட சொன்னா கேட்கவா போறாரு?

Siva Karthikeyan aspires for Nayanthara but Dhanush has other ideas!

Siva Karthikeyan has become a star with Edhirneechal produced by Dhanush. From then on there is no turning back for Siva and his salary rate is increasing like his success rate in the market. Siva who is doing Maan Karate with Hansika Motwani is desirous to have Nayanthara as his heroine in the new film to be produced by Dhanush, with Siva in the lead. He seems to have expressed his desire to Dhanush too. However the smart producer he is, Dhanush simply cast Sri Divya who paired with Siva Karthikeyan in Varuthapadatha Valibar Sangam. Siva will have to wait a still longer to have his say in the choice of heroine, especially from the producer who made him a star. Till then Siva’s wish will remain as wish only.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜில்லா விமர்சனம்

‘நான் போலீஸ் இல்ல... பொறுக்கி’. ‘நான் பொறுக்கியில்ல... போலீஸ்!’ இப்படி போலீசை ‘பொறுக்லீஸ்’ ஆக்கிய படங்கள் தமிழில் சரமாரியாக வந்ததுண்டு. அப்படியொரு ஒரு துண்டுதான் இந்த ஜில்லாவும்....

Close