சிவகார்த்திகேயன் ஷுட்டிங்… கிராஸ் ஆன முதல்வர்!

சென்னை போக்குவரத்து சீராகும் காலம் எப்போது என்றே தெரியவில்லை. ஆனால் அரிப்பெடுத்த முதுகுக்கு சொறியும் விரல்கள் பகையில்லை என்பது போல நெளிவு சுளிவுக்குள் வாழ பழகிவிட்டான் மிஸ்டர் சென்னைவாசி. இருக்கிற வேதனை போதாதென்று ரோட்ல படம் எடுக்கணும். பர்மிஷன் தர்றீங்களா என்று தலையை சொறிந்தால் என்ன கிடைக்கும்? ஏமாற்றம்தான் பல இயக்குனர்களுக்கு. இந்த விஷயத்தில் சென்னை நகர போலீசாரின் பிடிவாதத்தை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் படமும் எடுத்தாகணுமே?

பலரும் பாண்டிச்சேரிக்கு கிளம்பிவிடுகிறார்கள். அதிகம் வித்தியாசமும் தோன்றுவதில்லை ரசிகர்களுக்கு. இந்த வரப்பிரசாதத்தை எந்நேரமும் அளிக்கும் பாண்டி அரசுக்கு ‘ஸ்டடியாக’ நின்று சல்யூட் அடிக்க வேண்டிய கடமை நம்முடைய ஒவ்வொரு இயக்குனருக்கும் இருக்கிறது. சிவகார்திகேயனின் மான் கராத்தே குழுவினருக்கு இன்னும் அதிகமாக இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் பாண்டிச்சேரியில் ஒரு பரபரப்பான சாலையில் மான் கராத்தே ஷுட்டிங் நடந்து கொண்டிருந்தது. இத்தனைக்கும் அது முதலமைச்சர் போகிற வழி. சொல்லி வைத்தாற் போல அவரும் அந்த சாலையில் அந்த நேரம் பார்த்து வர, பாதுகாப்பு அதிகாரிகள் ‘முதல்வர் வர்றாரு. கொஞ்சம் நேரம் ஷுட்டிங்கை ஏற கட்டுக்கங்கப்பா’ என்றார்களாம். அதற்குள் விஷயம் முதல்வர் ரங்கசாமிக்கு தெரியவர, ‘அவங்களை தொல்லை பண்ணாதீங்க. நான் ரூட்டை திருப்பிக்கிறேன்’ என்று கூறிவிட்டு வண்டியை வேறு பாதையில் விட சொல்லிவிட்டாராம்.

கொய்யாப்பழ சைசுக்கு மாநிலம் இருந்தாலும் பலாப்பழ இனிப்போட ஒரு முதல்வர் இருக்கறதால கூட்டம் கூட்டமா கிளம்பி பாண்டிக்கு போவுது தமிழ்சினிமா. சென்னை டிராபிக் குறையுற நேரத்தில் இங்கேயும் அந்த இனிப்பு கிடைக்கலாம். அதுக்கு ஊரும் சேர்ந்து ஒத்துழைக்கணும்….

CM changes route for cinema shooting!

Yes. It is unheard of. That too in India. When small and sundry are showing off their authority, here is a Chief Minister, asked his police and security not to disturb the cinema shooting and changed his route.

It happened in Pondy. Few days ago Sivakarthikeyan and Hansika were shooting for a song sequence in Pondy. A scene was shot on a busy road there in Pondy. It was the road frequented by Puduchery CM. CM was on his way via that road, when he came to know that a cinema shooting is happening, told his security and police not to disturb the shoot, and he would change the route!

No wonder why film makers and producers prefer to go to Pondy for shooting instead of Chennai or in any other districts, where getting the police permission to shoot is next impossible, given the traffic congestions on the roads.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஐந்து கோடி பில்டிங், அடுத்த பட சம்பளம்…. கணக்கை நேர் செய்தார் செவ்வராகவன்?

நாட்டாமை, சொம்பே நசுங்கி போற அளவுக்கு அபாரதம் போட்டதால் ஆடிப் போயிருக்கிறார் செல்வராகவன். இரண்டாம் உலகம் படத்திற்கு சொன்னதை விடவும் பல கோடி ரூபாய் பட்ஜெட்டை ஏற்றிவிட்டதால்...

Close