சிஷ்ய இயக்குனரே… இது மட்டும் சரியா?

“நீங்க எனக்குத் தாலி கட்டவேண்டாம். உங்க காசு, பணம், சினிமா எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் மூலமாக ஒரு குழந்தைகூட வேண்டாம். நீங்கள் என்னருகில் இருங்கள். அது போதும்!’ என்று சொன்னவள் மௌனிகா . என் உறவு காரணமாகப் பழிச்சொல், அவமானம் அடைந்தவள் அவள். நான் வேலை இன்றி இருந்த மாதங்களில், தான் மட்டும் மாங்கு மாங்கென்று உழைத்து, பொருளாதார ரீதியாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள். எனக்கு மூளை ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டபோது, எனக்காக மாங்காடு அம்மன் கோயிலுக்கு வீட்டிலிருந்தே நடந்து போய், அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறாள்.

என் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு நல்ல துணையாக, நல்ல சிநேகிதியாக, சமயங்களில் தாயாகக்கூட என்னைப் பாதுகாக்கிற பெண்ணை சினிமா வட்டாரத்தில், ‘பாலுமகேந்திரா வெச்சுகிட்டிருக்கிற பொண்ணு’ என்று கொச்சையாகக் குறிப்பிடுவதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் 1998ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவளுடன் நான் அடிக்கடி செல்லும் ஒரு சிவன் கோயிலில் வைத்துத் தாலி கட்டினேன்.மௌனி கழுத்தில் இருப்பது நான் கட்டிய தாலிதான்”

— ஒரு வார இதழில் நடிகை மவுனிகாவுடனான தனது குடும்ப வாழ்க்கை பற்றி மறைந்த மாபெரும் கலைஞன் பாலுமகேந்திரா சொன்ன வார்த்தைகள் இவை.

” நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா (பாலுமகேந்திராவின் முதல் மனைவி ) எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது.

இன விருத்திக்காக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவலை இயற்கை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அழுத்தமாகவே வைத்திருக்கிறது. அந்த ஆசையும் அதற்கான வயசும், குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்கான சம்பாத்தியமும் ஆரோக்கியமும் எனக்கிருந்தும் குழந்தை வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். காரணம் பிற்காலத்தில் எனக்கும் அவருக்கும் பிறக்கும் குழந்தையால் அவரது குடும்பத்தில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று நான் கருதியதன் காரணமாக மட்டும்தான்.

எனக்கும் அவருக்குமான உறவில், எந்த எதிர்பார்ப்புகளும் எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை. இனி இருக்கப்போவதும் இல்லை.

எனவேதான் அகிலாம்மாவின் முகவரியாகவும் அடையாளமாகவும் இருக்கும் திருமதி பாலுமகேந்திரா என்ற பெயரால் நான் குறிப்பிடப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. பாலுமகேந்திரா இருக்கும்போது மட்டுமல்ல, அவரது மறைவுக்குப் பின்பும்கூட, திருமதி பாலுமகேந்திரா என்றால் அது அகிலாம்மாவைத்தான் குறிக்கும்.என்னை பாலுமகேந்திராவின் துணைவி என்றோ அல்லது திருமதி மௌனிகா என்றோ குறிப்பிடுங்கள்”

—இதுதான் பாலு மகேந்திரா பற்றி மௌனிகா கூறியது.

இப்படி இருக்க, பாலு மகேந்திரா இறந்த நிலையில் , மௌனிகா வந்து இறந்து போன பாலு மகேந்திராவின் உடலைப் பார்க்கக் கூடாது என்று பாலுமகேந்திராவின் சிஷ்யரான அந்த இரண்டெழுத்து இயக்குனர் பிடிவாதமாக இருந்தார். பாலுமகேந்திரா மருத்துவமனையில் இறந்த உடனேயே மௌனிகாவின் பேரைக் குறிப்பிட்டு அவள் இவள் என்று பேசியதோடு “அவ வந்தான்னா வெட்டுவேன் குத்துவேன்” என்று வசை பாடினார் அந்த சிஷ்யர் . பாலு மகேந்திராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்துக்கும் மௌனிகா வரக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தார் .

ஒரு மூத்த இயக்குனர் அவரிடம் போய் “மௌனிகா வந்து ஒரு முறை பார்த்து விட்டாவது போய் விடட்டும் ” என்று கேட்டபோது கூட “நீங்க என்ன … நான் கடவுளே சொன்னாலும் கேட்கமாட்டேன் ” என்று கொந்தளித்தார்.

பாலு மகேந்திராவின் முதல் மனைவி அகிலா அம்மையாரே “அவள் வந்து பார்த்து விட்டுப் போகட்டும்” என்று சொன்னபோதும் பாலுமகேந்திராவின் மகன் ஷங்கியும் “அவங்க வரட்டும் ” என்று சம்மதித்த பிறகும் கூட அந்த சிஷ்ய இயக்குனர் பிடிவாதம் பிடித்ததுதான் விந்தையிலும் விந்தை.

கடைசியில் பாலு மகேந்திராவின் இறுதி ஊர்வலம் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு போலீஸ் பாதுக்காப்போடு கண்ணீரில் கரைந்தபடி வந்து, இரண்டு நிமிடம் பாலு மகேந்திராவின் உடலைப் பார்த்து விட்டு நடைப்பிணமாக வெளியேறினார் மௌனிகா . அவரது நிலைமை ரொம்பவே பரிதாபமாக இருந்தது.

மௌனிகா உடனான பாலுமகேந்திராவின் திருமணம் முதல் மனைவி அகிலா அம்மையாருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்ற வகையில் அகிலா அம்மையார் மீது விசுவாசம் மிக்க அந்த சிஷ்யருக்கு மௌனிகா மீது கோபம் இருக்கிறது எனில் அவரது கோபம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல. இது உண்மை.

ஆனால் அகிலா அம்மையாரின் மனக் குமுறல் காரணமாக மேற்படி சிஷ்யருக்கும் பாலு மகேந்திராவுக்கும் முதன் முதலில் பிரச்னை வரக் காரணமான இன்னொரு நடிகை ஒரு நிமிடம் கூட விட்டு விலகாமல் அங்கேயேதான் இருந்தார். அவர் மீது சிஷ்ய இயக்குனருக்கு வராத கோபம் மௌனிகா மீது மட்டும் வந்ததற்கு காரணம் புரியவில்லை

பாலு மகேந்திரா இறந்த மறுநாள் காலை அவரது உடல் அருகே அந்த சிஷ்ய இயக்குனர் கண் கலங்க , பாலு மகேந்திராவின் படங்களில் நடித்த வேறொரு நடிகை, சிஷ்ய இயக்குனரின் அருகில் வந்து தனது முந்தானையை எடுத்து சிஷ்ய இயக்குனரின் முகத்தை நிறுத்தி நிதானமாக அழகாக துடைத்து விட்டார் இரண்டு மூன்று முறை! சட்டென்று பத்திரிக்கையாளர்கள் இருப்பதை பார்த்த பிறகு அந்த சிஷ்ய இயக்குனர் கர்ச்சீப் கேட்க, அப்புறம் கர்ச்சீப் கொண்டு வந்து கொடுக்கிறார் அந்த நடிகை .

குருநாதரின் இறந்த உடல் முன்னால் குருநாதரின் படத்தில் நடித்த ஒரு நடிகையின் முந்தானைக்கு தனது முகத்தில் அனுமதி கொடுத்த அந்த சிஷ்ய இயக்குனர் “பாலு மகேந்திராவின் சொத்தில் பங்கு வேண்டாம் . அவர் மூலம் குழந்தை வேண்டாம். திருமதி பாலு மகேந்திரா என்று கூட என்னை சொல்ல வேண்டாம். எனக்கு அவர் அன்பு மட்டுமே போதும்” என்று வாழ்ந்த ஒரு காதல் துணைவியை, அவரது கணவரின் உடலை பார்க்கக் கூட அனுமதிக்காதது ஏன் என்பதுதான் புரியவில்லை .

– தின இதழில் சு.செந்தில்குமரன் எழுதியது

Is it fair for disciple director to prevent Mounika to pay homage?

When veteran director Balu Mahendra died the entire film fraternity assembled at Balu Mahendra’s acting school to pay homage. But couple of disciple directors of late Balu Mahendra did not allow Mounika the second wife of Balu Mahendra to pay homage to her husband, either as an actor or as his second wife. More cruel was the two lettered director called her in singularly without any respect. Incidentally the ‘guru’ was unequivocal in his praise on Mounika about her sacrifices during his hardships and how his conscious pushed him to tie the knot on her. Mounika from her angle expressed long back how she sacrificed her life despite having everything including wealth, not to have a child through Balu Mahendra purely to avoid clashes with Balu Mahendra’s legitimate family at later stage.

Thankfully Mounika was allowed to visit couple of hours before the body was laid to rest, after she spoke to Balu Mahendra’s son Shanky to allow her to pay homage to Balu Mahendra. She came with police protection stood behind the body for few minutes expressed her feelings in her tears and returned back.

There are certain things human beings are to follow and that is ethics. It is not just adequate to show those things in screens but to follow them is much more important. Hope those who diminished themselves would understand and practice them henceforth.

– NaSu

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Jigarthanda Movie First Look Tease

http://youtu.be/ZFFxDE_jb5g

Close