சீயான் வீட்டு பிரியாணிக்கு சீரகம் வாங்க காசில்லையோ? ஐ பட குடைச்சல்கள்…

ஒரே நேரத்தில் ஐந்து படங்களை தயாரித்தால், ‘வண்டியில பாரம், வழியெல்லாம் துயரம்’ என்பது மாதிரியே பிரச்சனைகள் வரும். கார்ப்பரேட் கம்பெனிகள் வருவதற்கு முன்பே கார்ப்பரேட் லெவலில் பணத்தை வாரியிறைத்து படம் எடுத்தவர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவருக்குதான் இந்த துயரமாம். அவரது சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் வருவதாக ஒரு தேதியை அறிவித்துவிட்டு அந்த தேதியில் படத்தை கொண்டு வர முடியாமல் போனது வல்லினம் படத்திற்குதான் என்கிறது சினிமா வட்டார தகவல்கள்.

அதிருக்கட்டும்… அவரது தயாரிப்பில் உருவாகும் ஐ படத்திற்கு விக்ரம் கொடுத்த குடைச்சல்கள் பற்றிதான் நாம் சொல்லப் போகிறோம். இந்த படத்தை துவங்கும்போதே ஒரு அட்வான்ஸ் தொகையை கொடுத்துவிட்டு ‘மீதிப்பணத்தை நானே தருவேன். நடுவில் கேட்கக் கூடாது’ என்று கூறியிருந்தாராம் ரவிச்சந்திரன். அதன்படி நடுவில் வாயை திறக்காமலிருந்த விக்ரம், படம் முடிகிற இந்த நேரத்தில் குடைச்சலை ஆரம்பித்துவிட்டார். அதிலென்ன தவறு என்கிறீர்களா? பொதுவாக ஷங்கர் படத்தின் பட்ஜெட் யானை தீனியாக இருக்கும். முடிந்தளவுக்கு போட்டு சமாளித்த ரவிச்சந்திரனுக்கு இன்னும் இன்னும் என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறதாம் அது.

ஐ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டால் போதும். நாலாபுறத்திலிருந்தும் பணத்தை கொண்டு வந்து கொட்டிவிடுவார்கள் விநியோகஸ்தர்கள். அந்த நேரத்தில் வாங்கிக் கொள்ளலாமே என்று தயாரிப்பாளர் சொல்வதை, தாங்கொணா துயரத்தோடு தட்டிக் கழிக்கிறாராம் விக்ரம். நடுவில் இந்த படத்திற்காக தனது சொந்தப்பணத்தையே கூட போட்டிருக்கிறாராம் டைரக்டர் ஷங்கர். உண்மை அப்படியிருக்க, ரிலீசுக்கு சில வாரங்கள் முன்னாடி வரைக்கும் பொறுமையா இருக்கக் கூடாதா என்கிறதாம் படத்தரப்பு.

சீயான் வீட்டு பிரியாணிக்கு சீரகம் வாங்க காசில்லையோ என்னவோ?

Vikram pesters for balance salary as Producer Aascar Ravichandran faces herculean task in feeding ‘Ai’

Aascar Ravichandran has established a name for himself in producing films. Whether actors or technicians, no one fears for their salary as everyone’s account will be settled before the release of the film. For a man of that stature, he now grumbles and frustrates. Because he is feeding Shankar’s ‘Ai’ like that of feeding a bunch of elephants. In fact it is heard that Shankar himself has put in his money in order to avoid any delay in completing the film.

Vikram who is playing the lead in the film, was given an advance and was told by the producer that he himself would pay the balance when the film is completed. Vikram scrupulously followed the advice. Now the film is nearing completion, he started pestering Aascar to settle the balance salary. Aascar has already put in all his money apart from tapping all known sources is a frustrated man. The unit says the producer has already spent a lot of money and still some more has to be spent on post production and CG work. If the release date is announced he may get money to settle the dues of everyone. So why not Vikram wait till such time to take his salary balance, asks the members of the team who do not wish to be identified.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆட்டுப்பாறையில் சூறையாடல்…

திரிலோக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரிலோக் சுரேந்திரன் பிள்ளை பந்தலம் தமிழில் முதல்முறையாக தயாரித்துள்ள படம் தான் 'சூறையாடல்'. கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற ஸ்ரீபாலாஜி ஹீரோவாக அறிமுகமாகும்...

Close