சீரடி சாய்பாபாவாக தலைவாசல் விஜய்  நடிக்கும் “ அபூர்வ மகான் “

டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.N.S.செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகும் படம் “ அபூர்வ மகான் “

இந்த படத்தில் தலைவாசல் விஜய் சாய்பாபா வேடமேற்று நடிக்கிறார். மற்றும் இளம் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள். மற்றும் சுமன், பவர்ஸ்டார், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், பிரேம்குமார், அஜெய்ரத்னம், பாண்டு, சிசர்மனோகர், வடிவுக்கரசி, மீராகிருஷ்ணன், அவன் இவன் ராமராஜன், நெல்லை சிவா, போண்டா மணி, ஜோதி முருகன், விஜய் கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வினுசக்கரவர்த்தி நடிக்கிறார்.

எடிட்டிங்   –  சுரேஷ்அர்ஷ்   /  இசை      –  V.தஷி   /  ஸ்டன்ட்   –   சூப்பர் சுப்பராயன்

ஒளிப்பதிவு   –  G.சீனிவாசன்   /   கலை   –    S.S.சுசி தேவராஜ்  /    நடனம்   –  பவர் சிவா, மாமு சரவணன்  /    பாடல்கள்   –  அண்ணாமலை, தமிழமுதன், சினேகன். ஏம்பல் ராஜா, வேலாயுதம்.

தயாரிப்பு மேற்பார்வை   –  ராம்பிரபு  /   இணை தயாரிப்பு    –  K.P.செல்வம்

தயாரிப்பு   –   T.N.S.செல்லத்துரை தேவர்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் –  கே.ஆர்.மணிமுத்து.

படம் பற்றி இயக்குனர் கே.ஆர்.மணிமுத்துவிடம் கேட்டோம்…

பாபாவின் அபூர்வ செயல்களை பற்றி நிறைய பேர் நிறைய சம்பவங்களை சொல்வார்கள். அவர் வாழ்கையையும், இன்றைய காலகட்டத்தையும் இணைத்து கதை உருவாக்கப் பட்டுள்ளது.

படத்தை பார்க்கிற யாருமே உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியாது. ஒரு கதாப்பாத்திரத்திற்காக  வினு சக்கரவர்த்தியை பார்க்க போனோம். அவரால் நடக்கவே முடியாது எப்படி நடிக்க வைப்பீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். நான் போனபோது அவர் படுக்கையில் படுத்திருந்தார்.நான் கதாப்பாத்திரத்தை சொல்லி விட்டு, பாபா உங்களுக்கு நல்லதே செய்வார் என கூறிவிட்டு வந்தேன்.

சில நாட்கள்  கழித்து அவரே போன் செய்து படப்பிடிப்பு தேதியையும், இடத்தையும் கேட்டார். சொன்னேன் அந்த தேதியில் அவரே காரை விட்டு இறங்கி நடந்து வந்து நடித்துக் கொடுத்தார். டப்பிங்கும் அவரே பேசினார்.நடக்கவே முடியாதவர் பாபாவின் ஆசியால் நடித்தது  அபூர்வம் தானே. பணம் எதுவுமே வாங்க வில்லை அவர்.  நிஜமாய் நடந்த அந்த சம்பவம் எங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தித்  தந்தது என்றார் இயக்குனர் கே.ஆர்.மணிமுத்து.

Read previous post:
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின்  கே.பாலசந்தர் திரையரங்கம் திறப்பு விழா

தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் பாலசந்தர் அரங்கம் திறக்கப் பட்டது   உதவி இயக்குனர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய  குறும்படங்களை திரையிடுவதற்க்...

Close