சீரியலை மிஞ்சும் பழிவாங்கல்? அடடா… இது ஆர்யாடா!

வரவர கல்யாண பத்திரிகையை புரட்டினால் கூட அதிலும் ஆர்யா-நயன்தாரா காதல் செய்தி இடம் பெற்றிருக்குமோ என்று அதிர்கிற அளவுக்கு மலர்ச்சியான நயன்தாராவை அலர்ஜியாக்கிக் கொண்டிருக்கிறது மீடியா.

நேற்று நடந்த இரண்டாம் உலகம் படத்தின் பிரஸ்மீட்டில் உங்களுக்கு பிடித்த நடிகை யாரென்று கேட்ட பிரஸ்சிடம், நயன்தாரா என்று ஆணித்தரமாக பதிலளித்தார் ஆர்யா. இத்தனைக்கும் இவரது பக்கத்தில் அனுஷ்கா இருந்தார். அப்படியிருந்தும் அவர் நயன்தாரா பெயரை சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது?

சில மாதங்களுக்கு முன் தனது புதிய வீட்டின் கிரஹப் பிரவேசத்திற்கு நயன்தாராவை அழைத்து வந்த ஆர்யா, அந்த பிரமாண்டமான விழாவில் கேக் வெட்டி அமர்க்களப்படுத்தினார். தனது காதலையும் கல்யாண எண்ணத்தையும விட்டுவிட்டு நயன்தாரா சினிமாவில் மறுபிரவேசம் செய்ததற்காகதான் இப்படி ஒரு அமர்க்களமான கேக், என்று ‘கேக்’காமலேயே அதற்கு விளக்கமும் கூறினார் அவர். இதை தொடர்ந்துதான் இருவருக்கும் நடுவில் காதல் இருக்குமோ என்று ஐயுற ஆரம்பித்தார்கள் சுற்று வட்டாரத்தினர்.

நயன்தாரா இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிக்கட்டும்… அதை கேட்டு இன்புறதான் நாங்கள் இருக்கிறோமே என்று ரசிகர்களும் விழுந்து விழுந்து இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

இது போதாதா? நயன்தாரா சென்னைக்கு வந்தால் ஆர்யா வீட்டில்தான் தங்குகிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு கூட அவர் வீட்டிலிருந்துதான் கிளம்புகிறார் என்று அடுக்கடுக்காக அல்லல்கள், துள்ளல்கள்! இதையெல்லாம் மேலோட்டமாக மறுத்து வந்தாலும், ஆர்யாவின் உதட்டோர புன்னகைக்கு பின்னே ஒரு கள்ளச் செடி பூ பூப்பதாக கிசுகிசுக்கிறார்கள் இதே கோடம்பாக்கத்தில்.

நம்மிடம் பேசிய பல முக்கியஸ்தர்களின் அலசல் கருத்துகளை கூட்டி கழித்து பெருக்கி பீராய்ந்து பார்த்ததில் இறுதியாக நமக்கு கிடைத்த தகவல், ஒரு சீரியலில் வரும் சீரியசான பழிவாங்கலுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல.

அதை சொல்வதற்கு முன்பு நாம், சில வருடங்ககளுக்கு முன் ஃபிளாஷ்பேக்க வேண்டும். அது பிரபுதேவாவும் நயன்தாராவும் ரொம்ப ரொம்ப காதலில் கரைந்து உருகி ஓடிக் கொண்டிருந்த நேரம். ஆர்யாவும் நயன்தாராவும் இணைந்து நடித்துக் கொண்டிருந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படப்பிடிப்பு திடீரென்று நின்று போனது. காரணம், பைனான்ஸ் பிரச்சனை. ஒருகட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர் படத்தை தொடர முடியாமல் கையை விரித்துவிட்டார். வேறு வழியில்லாமல் பாஸ்கரனை தமது கஸ்டடிக்கு கொண்டு வந்து விட்டார் ஆர்யா. இந்த கைமாற்றலில் சில வாரங்கள் ஷுட்டிங் நின்று போனது. நயன்தாரா கால்ஷீட் அத்தனையும் வேஸ்ட்.

மறுபடியும் அவரிடம் கால்ஷீட் கேட்க வேண்டிய இக்கட்டான தருணம் ஆர்யாவுக்கு. இவரது போதாத காலம் அந்த நேரத்தில் தனது ஆஸ்தான மேனேஜரான அஜீத் என்பவரை வேலையை விட்டே நிறுத்தியிருந்தார் நயன்தாரா. அஜீத் இடத்தில் பிரபுதேவா இருந்துதான் நயன்தாராவின் கால்ஷீட்டுகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அஜீத் இருந்திருந்தால் சுலபமாக முடிந்திருக்கும். மாஸ்டரிடம் பேச வேண்டுமே? ஏகப்பட்ட தயக்கம் இருந்தது ஆர்யாவுக்கு. அப்போது பிரபல துணிக்கடை ஒன்றின் விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்தார் நயன்தாரா. கேரவேன், பிரமாண்ட ஜெனரேட்டர்கள் என்று ஷங்கர் படம் ரேஞ்சுக்கு களைகட்டியிருந்தது ஏரியா.

முறையாக போன் செய்து முன் அனுமதி வாங்கிக் கொண்டுதான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார் இவர். கேரவேனுக்கு வெளியே நின்று கொண்டு நான் வந்துட்டேன் என்று ஆர்யா சொன்ன பிறகும் கதவை திறக்க அரை மணி ஆனதாம். விளம்பரமாகட்டும், சினிமாவாகட்டும். தொழிலாளர்கள் பெப்ஸியை சேர்ந்தவர்கள்தானே? ஆர்யா கேரவேனுக்கு வெளியே அரை மணி நேரமாக நிற்பதை கவலையோடு கவனித்தார்கள். ஆர்யாவுக்கும் வெட்கம் பிடுங்கி தின்றது. அந்த நேரத்தில் அவர் பாலாவின் அவன் இவன் படத்திலும் கமிட் ஆகவில்லை. ஆகியிருந்தால் மரியாதை வேறு மாதிரி இருந்திருக்கும்.

ஒரு வழியாக சொர்க்க வாசலின் கதவு திறந்தது. உள்ளே அழைக்கப்பட்டார் ஆர்யா. மாஸ்டரை பிரண்ட்லியாகவே கேள்விப்பட்டிருந்தவர், அன்று வேறொரு முகத்தை பார்த்தாராம் அவரிடம். படப்பிடிப்பில் நயன்தாராவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கிளாஸ் எடுக்காத குறையாக விவரித்தாராம் மாஸ்டர். சுருக்கமாக சொன்னால் டூயட்டில் கூட ஒரு சாண் இடைவெளி வேண்டும் என்பது மாஸ்டரின் கட்டளை.

இன் முறுவலோடு உள்ளே போன ஆர்யா மென் கருகலோடு வெளியே வந்தார். தொல்லை அத்தோடு நின்றபாடில்லை. பாஸ்கரன் படப்பிடிப்பில் அவ்வப்போது வந்து நின்று கொள்வாராம். நெருக்கமான காட்சிகளில் கூட நயன்தாராவை ஒரு வித வெறுப்போடு தொட வேண்டியிருந்தது ஆர்யாவுக்கு. இங்கே சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போதுதான் இப்படி என்று நினைத்திருந்தவருக்கு, வெளிநாட்டில் எடுக்கப்பட்ட டூயட்டிலும் இதே பிரச்சனை.

மனசுக்குள் கருவிக் கொண்டிருந்த ஆர்யாவின் பக்கம்தான் இப்போது காற்று பலமாக வீசிக் கொண்டிருக்கிறது. யாரோடு நெருக்கமாக பழகக் கூடாது என்று மாஸ்டர் நிபந்தனை விதித்தாரோ, அதே ஆர்யாவிடம்தான் அதிகம் சிரித்து பேசுகிறார் நயன்தாரா. ஆனால் இது காதல் வரைக்கும் போகுமா என்றால், பீர் பாட்டிலை குலுக்கிய மாதிரி பொங்கி பொங்கி சிரிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

நயன்தாரா விவரமான பொண்ணுங்க. ஆந்திராவில் நாகார்ஜுன், வெங்கடேஷ் ரெண்டு பேரும் இவருக்கு அதிக சப்போர்ட் பண்ணுறாங்க. இன்னொரு ஹீரோ வீட்டில் தங்கிதான் படப்பிடிப்புக்கு அவர் போறார்னு தெரிஞ்சா, தனது கடையின் ஆந்திரா பிராஞ்சை நயன்தாரா மூட வேண்டியதுதான். இதெல்லாம் தெரிந்துதான் சென்னை மவுண்ட் ரோட்டில் இருக்கும் அந்த நட்சத்திர ஓட்டலில் பர்மனென்டாக ஒரு ரூம் போட்டிருக்கிறார் அவர்.

இப்படி நயன்தாரா தன் வழியில் போனாலும், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவரை தன்னுடன் சேர்த்துக் கொள்வது ஆர்யாவின் வழக்கமாக இருக்கிறது. எங்கேயோ போய் எல்லாவற்றையும் மறந்துவிட்டார் பிரபுதேவா. ஆனால் தான் அவரால் அவமானப்படுத்தப்பட்டதை இன்னும் மறக்கவில்லை ஆர்யா. அதன் விளைவுதான் அனுஷ்கா இருக்கும்போதே நயன்தாராவை பிடிக்கும் என்று ஆர்யாவை பேச வைக்கிறது…

நயன்தாரா என்ற பயாஸ்கோப் படம் எவ்வளவுதான் ஓடி தேய்ந்தாலும் அடிக்கடி பார்த்து ரசிக்கதான் நாம் இருக்கோமே? அப்புறமென்ன… நடத்துங்க ஆர்யா!

Is Arya using Nayan’s closeness as hidden agenda?

Couple of days ago Arya told the reporters that his all-time favourite will be Nayanthara, though Anushka was by his side. According to Kollywood sources Nayanthara seems to be happy in the company of Arya and she used to go to his house whenever she was in Chennai. Arya would also be in the company of Nayan at whenever opportunity comes his way. This has made the gossip mongers to strengthen their claims. Perhaps true? Perhaps Not?

When Arya does something it is common knowledge that he would do it with a purpose. It is said there is a story behind Arya’s closeness to Nayan which dates back to the time of Boss Engira Baskaran. During the making of Boss Engira Baskaran, the film production changed hands due to financial difficulty and Arya took the mantle and averted the film going into the shelf. During the mess and later change over the production team lost the call sheets of Nayan. It was the time Nayan was very close to Prabhudeva, as their affair was at its peak. Arya was put into lot of insults and difficulties when he approached ‘master’ for rescheduling of Nayan’s call sheet. Master has said to have given lot of instructions about shooting with Nayan, especially in love scenes and songs sequences. With no other go Arya obliged and completed the film, which went on to make a huge hit. But the scars he received from the master remained in his heart.

Now the situation has turned full circle with Arya cosying independent Nayan to his delight, more as balm to his hidden scars. Nevertheless, the closeness of Arya-Nayan is more like a journey-mate than anything else, say insiders who knew the background. Prabhudeva may not remember or not wished to remember, but the feelings of hurt perhaps gets diluted in the company of Nayan, for Arya!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இவரல்லவோ பெண்…! நெகிழ வைத்த நடிகை

பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் பாலியல் பயில்வான்களுக்கு ஒரு பெண் தருகிற தண்டனைதான் மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் கதை. அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து...

Close