சுசீந்திரனை போனில் பாராட்டிய விஜய்

திருட்டு கோழியோ, குருட்டு கோழியோ, கொழம்பு ருசியா இருந்தா போதும்ங்கற நினைப்புதான் எல்லா ஹீரோக்களுக்கும் இருக்கிறது. சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு படம் எல்லா ஏரியாவிலும் கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்க, ‘அந்த கதையே என்னோடது தெரியுமா? என்றொரு உதவி இயக்குனர் புகார் கொடுத்து அவ்வளவு பெருமையிலும் கருப்பு மையை பூசிவிட்டார். இந்த திருட்டுக்கதை பிரச்சனையை கையில் எடுத்த இயக்குனர் சங்கம், சம்பந்தப்பட்ட உதவி இயக்குனரையும் சுசீந்திரனையும் விசாரித்து வருகிறது.

இவ்வளவு பஞ்சாயத்துக்கு நடுவிலும் படத்தின் ஹீரோவான விஷால் மவுனம் காப்பதுதான் ஆச்சர்யம். அவர் வாயை திறந்து நியாயம் பேசுவார் என்று நினைத்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமும் கூட. இந்த பிரச்சனையை உங்களோட பேசி தீர்த்துக்குங்க. இங்க எங்கிட்ட வராதீங்க என்று கூறிவிட்டாராம் அவர். அது மட்டுமல்ல, சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்தார் அல்லவா? அதில் உறுதியாக இருக்கிறாராம். இதற்கிடையில் ஒருநாள் சுசீந்திரனுக்கு ஒரு பேன்ஸி நம்பரிலிருந்து போன்.

எடுத்து பேசியவருக்கு எதிர்முனை தந்தது ஆச்சர்யமும், அதிர்ச்சியும். நான் விஜய் பேசுறேன். பாண்டியநாடு படம் நல்லாயிருக்கு. எனக்கும் ஒரு கதை தயார் பண்ணுங்க. ஜில்லா முடிச்சுட்டு கேட்போம் என்று கூறினாராம். யாராவது உதவி இயக்குனர்கள் நல்ல கதை வைத்திருந்தால் சுசீந்திரனை அணுகலாம். அதற்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு குமுதத்துல இன்டர்வியூவும் கொடுக்கலாம். வசதி எப்படி?

Vijay congratulates director Suseendhiran

Suseendhiran’s Pandia Nadu has been appreciated by everyone including biggies from Kollywood (e.g. director Shankar, who also has called up the hero Vishal and appreciated him for his work, while hinting that he would cast him in his film in future). Ilayathalapathi Vijay too saw the film and dialled Suseendhiran and congratulated him. He also asked the director to make ready a story for him so that he would work with him after Murugadoss’ project. Suseendhiran was very excited on hearing those words from Vijay.

His happiness however was short-lived, as his (former?) assistant director has made a revelation that what Suseendhiran had shown in Pandia Nadu was in fact his story. The news spread like a wildfire in the media. Vishal who normally takes bold stand by talking forthright has washed his hands off requesting the director to sort out the issue by himself without involving the actor’s name. Meanwhile, Directors’ Union has called both the persons and are looking into the complaint. Who gets what only time will answer.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘அம்மா… காப்பாத்துங்க! ’ தட்ட வேண்டிய இடத்தில் கதவை தட்டிய அஞ்சலி…

தட்ட வேண்டிய இடத்தில் கதவை தட்டினால், கெட்ட கனவாக இருந்தாலும் கிட்ட வராது என்பதை சற்று காலம் கடந்து உணர்ந்து கொண்டிருக்கிறார் அஞ்சலி. சினிமாக்காரர்களுக்கு ஏதாவது பிரச்சனை...

Close