சும்மா கிடந்த சங்கை ஊத நினைத்து ஒன்றரை கோடி நஷ்டம்! அதிர்ச்சியில் விஜய் சேதுபதி
‘சிவனே’ன்னு போனாலும், ‘மவனே’ன்னு கூப்பிட்டு வம்பிழுக்குமாம் விதி. அப்படியொரு சிக்கலில்தான் இருக்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த இரண்டு படங்களுமே வசூலில் காலை வாரிவிட்டிருக்கிறது. இதில் செம அப்செட்டாகியிருந்த அவரை மேலும் அப்செட் ஆக்கியிருக்கிறது இன்னொரு கணக்கு. இந்த கணக்கின்படி வேகாத சோற்றுக்கு வெஜிட்டபிள் பிரியாணி என்று பெயர் வைத்து, அதையும் மென்று செரித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம் அவர்.
நல்ல கதைகளை, வித்தியாசமான முயற்சிகளை வரவேற்பவர் விஜய் சேதுபதி. கொஞ்சம் எளிமையான ஹீரோ என்றும் பெயரெடுத்துவிட்டார். கதை கேட்கிற விஷயத்தில் ரொம்பவே கவனமும் அக்கறையும் எடுத்துக் கொள்ளும் அவர், ஒரு கதை மிகவும் பிடித்திருந்த காரணத்தால் அதை தானே முன்னின்று படமாக முடித்துத்தர முன் வந்தார். அதுதான் சங்குதேவன். படத்தின் இயக்குனர் செய்த பந்தாவின் காரணமாக படத்தை போட்டது போட்டபடி ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அவருக்கு.
இந்த படத்தை முதல் பிரதி அடிப்படையில் முடித்துத்தர ஜே.எஸ்.கே நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்தாராம் விஜய் சேதுபதி. படம்தான் முதல் கட்ட படப்பிடிப்போடு நிறுத்தியாச்சே, நமக்கொன்றும் பெரிய நஷ்டம் வராது என்று நினைத்திருந்தவருக்கு பேரதிர்ச்சி. இவருக்கு கணக்கு அனுப்பி வைத்த பட நிறுவனம், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நீங்கள் தர வேண்டும் என்று கூறிவிட்டதாம்.
கதை மீது ஆசைப்பட்டு களத்தில் இறங்கினேன். இப்படி கண்ணா பின்னான்னு கடிச்சுருச்சே… என்று கவலைப்படும் விஜய் சேதுபதி, இப்போது வராத படத்திற்கு ஒன்றரை கோடி கடனாளி.
ஆமா… இந்த சினிமா கணக்குதான் அல்ஜீப்ராவையும் தாண்டிய அலர்ஜிப்ராவாக இருக்கு!
Vijay Sethupathi shocked at the demand for ‘extra-ordinary’ loss demand!
Vijay Sethupathi the maverick of Kollywood currently having earned the name ‘bankable’ hero from small time producers is in a shock now. At a time, when his two films have not worked good at the Box Office, he has now received the demand slip for compensation for ‘extra-ordinary’ loss situation.
Vijay, who put the wrong foot in film production earlier, with Sangudevan, producing jointly with JSK Corporation, (which has been abandoned due to the over enthusiastic director), is in a rude shock when he received a claim for loss compensation of Rs.1.50 crores, from JSK. Vijay did not expect such a huge loss since he stopped the film at the first schedule stage itself. Now, he is liable to pay the compensation to the film company.
விஜய்சேதுபதி திரையுலகில் கண்டிப்பாக பெயர் சொல்லும் பிள்ளையாக வளம் வருவார்.