சூர்யபிரகாஷ் இயக்கத்தில் குமரன் – சிருஷ்டி டாங்கோ நடிக்கும் “ வருசநாடு “
ஆகாஷ் அர்ஜுன் பிக்சர்ஸ், ஸ்ரீ மாயி பிலிம்ஸ் ஆர்,.கருப்பையா பிரதர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ வருசநாடு “ இந்த படத்தில் குமரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கோ நடிக்கிறார்.மற்றும் சிங்கமுத்து, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, ராஜ்கபூர், சந்தானபாரதி ஆகியோர் நடிக்கிறார்கள்.
திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சூர்யபிரகாஷ்…இவர் சரத்குமார் நடித்த “ மாயி” உட்பட பல படங்களை இயக்கியவர். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்….
ராமேஸ்வரம் பகுதியில் நடக்கும் மாதிரியான கதை! எவ்வளவோ சோகங்களை சுமந்துகொண்டிருக்கும் சோக பூமியான ராமேஸ்வரத்தில் சுகமான தனது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த ஒரு காதல் ஜோடியின் காதல் கதைதான் “ வருசநாடு” சுகமும் – சோகமும் கலந்து தான் காதல்! இதைத்தான் கதைகருவாக கொண்டிருக்கிறோம்! இதில் அடிதடி, ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்து படமாக்கி இருக்கிறோம்.மாயி படம் எப்படி என்னக்கு நல்ல திருப்பு முணையைத் தந்ததோ அது மாதிரியே வருசநாடும் நல்ல திருப்பு முணையைத் தரும் என்கிறார் சூர்யபிரகாஷ். விரைவில் படம் திரைக்கு வருகிறது.
ஒளிப்பதிவு – T.பாஸ்கர்
பாடல்கள் – அண்ணாமலை, வால்மீகி, கவிகார்க்கோ, தமிழமுதன்.
இசை – யத்தீஷ்மகாதேவ்
கலை – எம்.ஜி.சேகர். ஸ்டன்ட் – கனல்கண்ணன்
நடனம் – அசோக்ராஜா, பாபி, ரமேஷ்ரெட்டி எடிட்டிங் – தியாகராஜன்
நிர்வாக தயாரிப்பு – ஆர்.ராமனுஜம்
தயாரிப்பு மேற்பார்வை – ஜெயகுமார்
தயாரிப்பு – ரோசன், ஆர்.செந்தில்குமார்.