சூர்யாதான் கமலாம்… கார்த்திதான் ரஜினியாம்… -குட்டையை குழப்பிய பிரபலம்

ஒரு மாம்பழத்தை வைத்துக் கொண்டு அண்ணன் தம்பிகளை அல்லாட விட்ட நாரதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அப்படியொரு நவீன நாரதராக மைக்கை பிடித்தார் திருப்பூர் சுப்ரமணியன். பிரபல விநியோகஸ்தரான இவர் சொன்னால் அது சரியாகதான் இருக்கும் என்பது வேறு விஷயம்.

ரஜினியையும் கமலையும் ஒரே குடும்பத்துல வச்சுருக்காரு சிவக்குமாரண்ணன். சிக்ஸ்பேக், எய்ட் பேக், வித்தியாசமான மேக்கப்புன்னு கமல் மாதிரியே ட்ரை பண்ணி ஜெயிச்சுட்டு இருக்காரு சூர்யா. ஆனால் அவ்வளவு ரிஸ்கெல்லாம் எடுக்கறதில்ல கார்த்தி. ரஜினி மாதிரி சும்மா அப்படி வந்து நின்னு நாலு டயலாக்கை பேசிட்டு அவரையே பீட் பண்ணிட்டு போயிடுறாரு என்று இவர் சொல்ல, அங்கு கூடியிருந்த சூர்யா ரசிகர்கள் அதற்கப்புறம் அவரை பேச விட்டால்தானே?

sms. ok ok ன்னு ராஜேஷ் சார் இயக்கிய ரெண்டு படங்களை பார்த்துட்டு இவரை மிஸ் பண்ணவே கூடாதுன்னு நினைச்சிருக்கேன். சிரிக்கவே சிரிக்காத எங்கம்மாவே பாஸ் என்கிற பாஸ்கரன் பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சாங்க. அப்புறம் அவரை வரவழைச்சு கதை கேட்டேன். பொதுவா அவரோட கதையில ஹீரோ வெட்டியா ஊர் சுத்தறவரா இருப்பாரு. ஆனால் இந்த படத்துல எனக்கு ஒரு வேலை இருந்துச்சு. என்ன சார் இப்படின்னு பயந்துட்டேன். நல்லவேளை, அதற்கு ஒரு காரணமும் வச்சுருந்தார். படத்துல காஜல் அகர்வாலுக்கு சித்ரா தேவிப்ரியான்னு பேரு. அவங்களுக்கு தமிழ் தெரியல. அதனால் இதில் நடிச்சுட்டாங்க என்று சஸ்பென்ஸ் வைத்தார் கார்த்தி.

ரெண்டு நாளா அவனுக்கு பயங்கர ஜுரம். அவன் களைப்பா துங்கி நான் பார்த்ததேயில்ல. ஆனால் இன்னைக்கு ஆடியோ ரிலீஸ் விழான்னதும் உற்சாகமா எழுந்து வந்துட்டான். அந்தளவுக்கு இந்த படம் கார்த்தியை உற்சாகமாக வச்சுருக்கு. நானும் ராஜேஷும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டியதா இருந்துச்சு. கடைசி நேரத்தில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்து கெடுத்துருச்சு என்று இவரும் ஒரு சஸ்பென்ஸ் வைத்தார்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரே விஷயம், எங்கும் யாரும் தம்மடிப்பது போல ஒரு சீன் கூட வைக்கவில்லையாம் ராஜேஷ். உங்க படத்துல ‘தம்’மை விட ‘தண்ணி’தானே வெள்ளமா ஓடும்?

All In All Azhagu Raja audio launched

Karthi starrer All in All Azhagu Raja audio was launched today with Suriya as the Chief Guest. All cast and crew were present except for Kajal Aggarwal. Speaking on the occasion a distributor from Thiruppur compared Suriya and Karthi as Kamal and Rajini, which did not go well with Suriya fans present there. Suriya in his address said that he was to have worked with Rajesh but the opportunity was lost. He expressed his hope to work with him in future. He also said that Karthi was unwell for the past 2 days, but he was swift and fresh, from the morning; to that extent the film has influenced Karthi, he opined. Karthi in his address said that he wanted to work with director Rajesh, since his mother laughed whole heartedly by seeing his film Boss Engira Baskaran. He met the director who told him the story of AAA. He exuded confidence that the audience too would like the film. It also to be noted that Rajesh has not included any scene showing smoking by any one in the film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Success Party – Raja Rani

[nggallery id=34]

Close