சூர்யாவின் அஞ்சான் படத்தில் லிங்குசாமியும் நடிக்கிறாராம்….

ஹீரோ ஊர்ல இல்லாத சமயமா பார்த்து உள்ளே என்ட்ரி கொடுத்து, ரசிக மஹா சனங்களையெல்லாம் பீதிக்குள்ளாக்கிய பேரரசு மாதிரியில்லை லிங்குசாமி. அவரை நம்பி கால்ஷீட் கொடுக்கலாம். ஹீரோக்களின் இந்த நம்பிக்கையை எந்த காலத்திலும் சிதைத்ததில்லை அவர். பல வருடங்களாக இவரை பார்க்கும் பத்திரிகையாளர்கள் ‘நீங்களே ஹீரோவா நடிக்கலாமே?’ என்றெல்லாம் சாம்பிராணி போட்டு வந்திருக்கிறார்கள். அந்த நறுமணத்தில் மயங்கி விழாமல் இருந்த லிங்குசாமி, தன் விரதத்தை கைவிட்டுவிட்டதாக தகவல். சூர்யா சொல்லி ஆமாம் போட வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறாராம் அவர்.

சூர்யா நடிக்க லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் புதிய படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். லிங்குசாமியுடன் இணைந்து தயாரிக்கிறது UTV நிறுவனம். மும்பையில் 35 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு கோவா, மஹாராஷ்டிரா என்று அடுத்த கட்ட விளைச்சலுக்கு கிளம்பியிருக்கிறார்கள். சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கியமான ரோலில் லிங்குசாமியை நடிக்க சொல்லி கேட்டாராம் சூர்யா.

பக்கத்திலிருக்கிற படத்தில் லிங்குவின் கெட்டப்பை பார்த்தால், மதுரையில் இந்நேரம் ரசிகர் மன்றத்திற்கு பந்தல் போட்டிருப்பார்கள் போல தெரிகிறது. திறமையிருப்பவங்க நடிக்க வந்தா கடமையோட கைதட்ட வேண்டியது எங்க பொறுப்பாச்சே! எங்க பலமா ஒரு முறை கைதட்டுங்க பார்க்கலாம்…

Lingusamy to don grease paint soon

Director Lingusamy’s home production is producing two films – one with Suriya and Samantha in the lead – the film has been given the title today, Anjaan, and the other one Uthama Villain in which Kamal will play the lead directed by Ramesh Arvind. While there were unconfirmed reports suggesting that Lingusamy will be debuting in films as actor in Kamal’s film, there is a scoop now. It is heard now that Suriya has suggested to Lingusamy to don an important role in Anjaan. Which means Lingusamy would be debuting in acting in films with Suriya’s film itself. Recently he had gone for a make-over with spiked hair and shades that are making everyone to speculate that he might soon don grease paints in films. Now it appears the speculation has come true, at least according to some reports.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வீரம், ஜில்லா ரெண்டுக்குமே வரிவிலக்கு இல்ல… அரசின் முடிவும் அதிர்ச்சி திருப்பமும்!

வீரம், ஜில்லா இரண்டுக்குமே வரிவிலக்கு இல்லை என்று கூறிவிட்டது அரசு. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அதிர்ச்சியாக வேண்டியது சினிமா ரசிகர்கள் இல்லை. ஏனென்றால் வரிவிலக்கு கிடைத்தாலும்...

Close