சூர்யாவுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவா? தொடரும் வேட்டை!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்திற்கு ஹாலிவுட்டே இன்னும் பயன்படுத்தியிராத ஒரு கேமிராவை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆளுயரத்தை தாண்டிய அனகோண்டா போலிருக்கிறது அது. எல்லாரும் அண்ணாந்து பார்க்கிற அதன் உயரத்தை போலவே தரமும் இருக்கும் என்பதையெல்லாம் சொல்லவே வேண்டாம்.

சூர்யாவை நடக்க வைத்து சில காட்சிகள் எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இது டெஸ்ட் ஷுட்டிங்தானாம். நிஜ ஷுட்டிங் விரைவில். பொதுவாகவே ஒரு பெரிய ஹீரோ நடிக்க வருகிறார் என்றால், அவரை சுற்றி வளைத்து சொந்தம் கொண்டாட ஏராளமான ஹீரோயின்கள் வியூகம் வகுப்பார்கள். அடுத்த சில மாதங்களில் கல்யாணத்துக்கு காத்திருக்கும் த்ரிஷா கூட, இந்த ‘வளைப்பு’ லிஸ்ட்டில் தன்னை சேர்த்துக் கொண்டு மோதினாராம்.

ஆனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? ஒரேயடியாய் உச்சத்துக்கு போய் விட்டார்கள். இந்தியிலிருந்து தீபிகா படுகோனேவை அழைக்கிறார்களாம். பேச்சு வார்த்தை போய் கொண்டிருக்கிறது. ரஜினியுடன் ஜோடி சேர அட்வான்ஸ் வாங்கி, அது நடக்கலாமல் போன வருத்தத்திலிருக்கும் தீபிகா, இந்த அழைப்பை எப்படி டீல் பண்ணப் போகிறார் என்பதுதான் திக் திக் நிமிடங்கள். (அட… நமக்கு இல்லீங்க)

Lingusamy and team in talks with Deepika Padukone for Suriya’s film?

 

Lingusamy has made a mass announcement yesterday when he show-cased Red Dragon camera for shooting his film with Suriya in the lead. He wanted to make most capital of the incident, as this will be first time ever the camera is being used in a film, including the Hollywood. Rightly so, he is creating all sorts of hype over the film. Now the latest buzz is that Lingusamy and his team are in direct touch with Deepika to romance Suriya in the film. We heard all front line girls of Kollywood including Trisha put their best efforts to gain the space, but in vain. Deepika we are told is in a dilemma – to be or not to be – as she is a bit disappointed now, as her wish to romance Super Star Rajini has not happened fully in Kochadaiiyan. She is taking her time to decide on the offer, considering various aspects, it is heard. By the way, is it a double role for Suriya, as we also hear that Suriya will sport two looks in the film. So Samantha and Deepika may romance Suriya together, perhaps?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புனேவிலிருந்து சென்னைக்கு… அஜீத்தின் பைக் பயண புகைப்படங்கள்

[nggallery id=67]

Close