சூர்யா என்னை மிரட்டுகிறார்…. பிரஸ்மீட்டில் பொங்கிய இளம் இயக்குனர்
சூர்யா என்னை மிரட்டுகிறார்…. இப்படியொரு இயக்குனர் பிரஸ்மீட்டில் கொந்தளித்தால் எப்படியிருக்கும்? கொந்தளித்தார் ஒருவர்.
சரவணன் என்கிற சூர்யா படத்தின் இயக்குனரான எஸ்.எம்.ராஜாதான் அவர். பொதுவாக ஒரு படத்திற்கு தலைப்பு வைக்கப்படும் போது அது யாரையாவது காயப்படுத்தாமலிருக்க வேண்டுமே என்று அஞ்சுவது இயற்கைதான். அழகிரி என்ற படத்தின் தலைப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று வரை மறுக்கப்பட்டு வருகிறது. இவர்களால் பழம்பெரும் தலைவர் பட்டுக்கோட்டை அழகிரிக்கு இழுக்காகலாம். அல்லது மதுரை மாவீரனுக்கு கோபம் ஏற்படுத்தலாம். எதற்கு இந்த வம்பு என்பதால்தான் இந்த கட்டுப்பாடுகள்.
ஆனால் ‘சரவணன் என்கிற சூர்யா’ தலைப்புக்கு அனுமதி கிடைத்து படத்தையும் எடுத்துவிட்டார்கள். இந்த நேரத்தில்தான் தலைப்பை மாற்றச் சொல்லி நடிகர் சூர்யா மிரட்டுவதாக குறைபட்டுக் கொண்டார் எஸ்.எம்.ராஜா. ஆனால் ‘இவங்க பேமிலி மட்டும் அலெக்ஸ் பாண்டியன் என்று ரஜினியின் கேரக்டரை மாசு படுத்தலாம். நான் இப்படி ஒரு தலைப்பில் படம் எடுக்கக் கூடாதா?’ என்று பொங்கினார் இந்த பிரஸ்மீட்டில்.
‘எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் தலைப்பை மாற்ற மாட்டேன். நேரடியாகவும் மறைமுகமாவும் எனக்கு மிரட்டல் விடுத்த சூர்யாவுக்கு இந்த படத்தை போட்டுக் காட்டவும் நான் தயார். அவரது சொந்த விஷயங்களை நான் இதில் சொல்லியிருந்தால் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்’ என்றும் சவால் விடுகிறார் அவர்.
படம் வெளியாகிற வரைக்கும் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வராது போலிருக்கே?
Suriya is threatening me complains young director SM Raja
During the press meet of the film Saravanan Engira Suriya, the director revealed that he is being threatened by actor Suriya. Normally the Producers’ Council would not approve names that hurt those who have such names, viz. Azhagiri. This name has not been granted approval till date for obvious reasons. However director Raja has got the permission for the title Saravanan Engira Suriya from the Council.
Declaring that his film has nothing to do with Suriya or his qualities or dwells on his character, he says he is ready to show the film to Suriya and if he feels that he has tarnished his name and his reputation, “I am willing to take the responsibility and accept whatever Suriya says” said Raja in the press meet. Instead of finding a solution, he is being threatened by Suriya, lamented the director Raja.