சென்னையில் நயன்தாரா- மூணு நாள் லீவு கேட்ட சிம்பு- கிர்ராகிப் போனார் கவுதம்!

நயன்தாரா சென்னைக்கு வந்திருக்கு. மூணு நாள் எனக்கு லீவு வேணும் என்று கேட்டால் எப்படியிருக்கும்? கவுதம் மேனன் போட்டோ ஷுட்டுக்கு கேமிராவை செட் பண்ணி முழுசா எட்டு மணி நேரத்துக்குள்ளே மூணு நாள் எஸ்கேப் ஆனாராம் சிம்பு. இதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் டாப் லெவல் அக்கப்போர்.

பாண்டிராஜ் படத்தில் நயன்தாரா கால்ஷீட் எப்பவோ, அப்போது வருவார் சிம்பு. அதுவரைக்கும் கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் என்பதுதான் சமீபத்திய பேச்சு. ஆனால் முதல் இரண்டு நாட்கள் கடப்பதற்குள்ளேயே நயன்தாரா ஜுரம் அடிக்க, கவுதமுக்கு காய்ச்சலை கொடுத்துவிட்டாராம் சிம்பு. முதலில் அசத்தலாக ஒரு பேப்பர் விளம்பரம் கொடுத்துரலாம் என்று முடிவு செய்த கவுதம், சிம்புவிடம் நடுவுல கட் ஆகாம மூணு நாள் எங்கூடவே இருங்க. அசத்தலா ஒரு போட்டோஷுட் பண்ணலாம் என்று கூற, அசத்துறோம் சார்… என்று அவருக்கு கட்டைவிரலை காண்பித்திருக்கிறார் சிம்பு.

முதல் நாள் தடபுடலாக ஆரம்பித்தது ஷுட். பொதுவாகவே சிம்பு, கவுதம், எல்லாம் ராப்பறவைகள் ஆச்சே? இரவு சுமார் எட்டு மணிக்குதான் ஷுட்டிங்கை ஆரம்பித்தார்களாம். நள்ளிரவு மூணு மணிக்கு ந்தா… வந்துர்றேன் என்று கிளம்பி போனாராம் சிம்பு. போனவர் போனவர்தான். அவரிடமிருந்து ஒரு குறுந்தகவல்தான் வந்ததாம். ஒரு மூணு நாள் என்னை விட்ருங்க. அதற்கப்புறம் வந்துர்றேன். ஸாரி… என்று.

தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தேவிட்டாராம் கவுதம். அடிச்சு பிடிச்சு விசாரித்தால், சிம்பு லீவு கேட்ட அந்த மூணு நாளும் சென்னையில்தான் இருக்கிறாராம் நயன்தாரா. வரப்போற படத்துக்கு கெமிஸ்ட்ரி லேப் செட் பண்ணிகிட்டு இருக்காங்களாம் இருவரும்.


பம்பரம் சுத்த ஆரம்பிச்சா ஆணிக்கும்தானே அவஸ்தை? கவுதம் நல்லா படுவாரு போலிருக்கு!

Simbu takes 3 days off from Gautham shoot

Simbu who started shooting for Gautham Menon’s untitled film in order to complete it as scheduled for Gautham. He also promised the director to extend all possible co-operations in completing the film. However he could not continue the shooting having commenced barely 3 days before, informing the director that he could not make it for the next 3 days. The reason he was unwell with viral infection, as confirmed in one of his tweets. However it is learnt that Simbu could not attend to the shoot as he was busy with Nayan who was in Chennai. Now, we hope Gautham would bring all his patience at his command to ensure that his film with Simbu is completed on time as scheduled – a huge task indeed!

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மத யானை கூட்டத்துக்கு நடுவில் மயில் எதற்கு? ஓவியாவை மகிழ வைத்த கேள்வி

மதுரை தேனி என்று வளமான பூமியில் வாழ்ந்தாலும் அங்கு எந்த விளைச்சல் ஜாஸ்தி என்றால், அது அருவா வெட்டும் அடிதடியும்தான். அங்குள்ள மனிதர்களின் கதைகளை கடந்த இருபது...

Close