செல்வராகவனுக்கு அமெரிக்காவிலிருந்து வந்த சிக்கல்! -ஆரம்பிச்சுருப்பா ‘இரண்டாம் கலகம்!’

ஆரம்பிச்சுருப்பா இரண்டாம் கலகம்!

பெரிய டைரக்டர்கள் பலரும் செய்கிற முதல் தவறு இதுதான். ஒரு தலைப்பை கவுன்சிலில் பதிவு செய்வதற்கு முன்பாகவே படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவது. இவர்கள் ஒரு தலைப்பை முடிவு செய்து அதை நிருபர்களிடம் கசியவிட்டு அது கவுன்சில் பதிவுக்கு வருவதற்கு முன்பே அதே தலைப்பை வேறொருவர் வைத்துவிடுவார். ஆனால் இதுபோன்ற எவ்வித குறுக்கு சாலையிலும் நடக்காமல் தனக்கே தோன்றிய ஒரு தலைப்பை வைத்து அதற்கு சென்சார் சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டார் ஒருவர். அதற்கப்புறம் அதே தலைப்பை பயன்படுத்தி ஒரு படத்தை எடுத்து அதற்கு ஊரையே கூட்டி ஆடியோ வெளியீட்டு விழா நடத்துவதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்? அப்பயொரு துணிச்சலான காரியத்தை செய்திருக்கிறார் செல்வராகவன்.

அப்படின்னா இரண்டாம் உலகம் தலைப்பு அவருகிட்ட இல்லையா?

ஆமாம்… அந்த தலைப்பு தனக்கு சொந்தமானது என்கிறார் பிரபல விநியோகஸ்தரான நாக் ரவி. தற்போது அமெரிக்காவில் வசிக்கும் நாக் ரவி, இந்த தலைப்பு உங்களுக்கு சொந்தமானதல்ல என்றும் அதற்கான ஆதாரமான சென்சார் சர்டிபிகேட்டையும் செல்வராகவனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

வேற்றுமொழி படம் ஒன்றை தமிழில் டப் செய்து வெளியிட நினைத்த நாக் ரவி அப்படத்திற்கு வைத்த பெயர்தான் இரண்டாம் உலகம். அதற்குதான் சென்சார் போர்டு அனுமதியும் வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்திற்கு எப்படி ஒப்புதல் கொடுப்பார்களோ? தனது தரப்பு நியாயத்தை அவர் தயாரிப்பாளர் சங்கத்திலும் தெரிவித்திருக்கிறாராம். மெல்ல நடந்து கொண்டிருக்கிறது இது தொடர்பான மீட்பு முயற்சிகள்.

ஒருவேளை படம் வரும்போது பஞ்சாயத்தை வச்சுக்கலாம்னு இருக்காங்களோ என்னவோ?

Selvaraghavan’s Irandam Ulagam in trouble?

Director Selvaraghavan’s Irandam Ulagam has been in the making for over 2 years now. The film has been wrapped and is getting readied for submission to Censors. But Selvaraghavan is under pressure to change the title of the film, for the simple reason that the title has been awarded to a producer in US, for a dubbed version of a film in Tamil. Not only that, he had also censored the film as well. Nag Ravi, the US based producer, has sent out a communication that the title belongs to him, and to support his case, has sent the copy of the Censor Board certification as well.

Selvaraghavan is now under immense pressure as he needs to change the title or go for a conciliation with Nag Ravi, for a slight change in the title. But as of now nothing has emerged, though Selva is said to have approached the Producers’ Council as well as Directors’ Union to find a way out.

It would be better if the issue is sorted out amicably now itself, before it gets out of hand.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிரபல நட்சத்திர ஓட்டலில் ரகளை, கலாட்டா… – வெட்கத்தை தொலைத்த ‘ஹிட்’ ஹீரோ!

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கலாட்டா இது. அதுவும் சென்னையிலிருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றின் ரிசப்ஷனில். அண்மையில் உதயமான ஒரு சேனலின் சார்பாக நடத்தப்பட்ட...

Close