செல்வராகவனுக்கு கமல் ட்ரீட்மென்ட்! யாரும் அறியாத மூன்றாம் உலக அவஸ்தைகள்

 

‘விஸ்வரூபம்’ படத்திற்கு பிரச்சனை வந்தபோது கமல் பேட்டியளித்தாரல்லவா? அந்த கவலைப் பேச்சை மறுபடியும் ரீவைண்ட் செய்து பார்க்கிற அவரது ரசிகர்கள் தங்கள் கண்ணிலிருந்து ‘பிளட்’டாபிஷேகம் செய்வார்கள். ‘இதோ, இப்ப நான் நின்று பேசிக் கொண்டிருக்கிற இந்த வீட்டையும் எழுதி வாங்கிட்டாங்க. இந்த படம் வரலேன்னா இந்த வீடு என்னுது இல்ல’ என்றார் கமல் அப்போது.

ஆணானப்பட்ட கமலையே வீட்டை விட்டு அனுப்புகிற சக்தி யாருக்கு இருந்தது? ஆத்திரம் கொள்ளாமல் அனுபவ அறிவால் யோசித்தால், பணம் போட்ட மவராசன்களுக்கு இருந்தது. கொடுத்த பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு மூன்று மடங்கு அதிகமாக செலவு வைக்கும் ஒவ்வொரு இயக்குனருக்கும் கமல் ஸ்டேட்மென்ட் ஒரு எச்சரிக்கை.

சரி, விஷயத்துக்கு வருவோம். ‘இரண்டாம் உலகம்’ படத்தை இயக்கும் செல்வராகவன், படம் துவங்கும்போது கொடுத்த பட்ஜெட் வேறொன்று. இப்போது ஆகியிருக்கும் செலவு இன்னொன்று. எவ்வளவு என்கிறீர்களா? கிட்டதட்ட 62 கோடியாம். ‘ஆபரேஷனுக்கு தியேட்டரை ரெடி பண்ணு’ என்று கூறிவிட்டு க்ளவுஸ்சை மாட்ட தயாராகிவிட்டது தயாரிப்பு நிறுவனம்.

செல்வராகவனெல்லாம் ‘இந்தியாவை விட்டு போறேன்’னு பேட்டி கொடுத்தா, ‘என்னைக்கு சார் கிளம்புறீங்க?’ன்னு கேட்டல்லவா இம்சை பண்ணுவாங்க… ஜாக்ரதையா டீல் பண்ணுங்க செல்வா!

Selvaraghavan may have to see Moondram Ulagam

Yes, if what the reports we hear, are any indication, director Selvaraghavan has to deal with his producers very meticulously and carefully, as he cannot afford to take chances like that of Ulaganayagan Kamal. Else, he may have to see for a Moondram Ulagam. Selva has exceed the planned budget for his Irandam Ulagam, and as per the recent estimates, it will be about Rs.62 crores, which is very huge considering the film has only Arya in the lead. Though the film will have some exemplary technical qualities and locations, still the producers keep their fingers crossed, as they are yet to initiate the distribution talks. Selva under the circumstances will be under great pressure, not only for his film to be succeeded at the Box Office, but from his producers as well, to calm them down from bursting.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரம்யா நம்பீசனின் சேச்சி பாச பேச்சு? – திருந்துவீங்களா தமிளன்ஸ்…?

சட்டியிலிருந்து இறக்கப்பட்டு இரண்டு நாட்களாகியும் இன்னும் சூடு குறையவில்லை. எல்லாம் ரம்யா நம்பீசன் இரு தினங்களுக்கு முன் பேசிய இனப்பாச பேச்சின் உஷ்ண விவகாரம். ‘பாண்டியநாடு’ படத்தில்...

Close