செல்வராகவனுக்கே சட்டை கிழியுதுன்னா நம்ம நிலைமை? பேய் முழி முழிக்கும் சந்தானம்
எல்லாரும் மூக்கால் அழுதால், ‘இரண்டாம் உலகம்’ பட தயாரிப்பாளர் மூக்காலேயே குளிப்பார் போலிருக்கிறது. பிரச்சனை அந்தளவுக்கு முற்றிப் போயிருப்பதுதான் காரணம். இவர்கள் எடுத்த சினிமாவில் ஒன்றிரண்டை தவிர மீதி அத்தனையும் ஆடிட்டர்களின் கால்குலேட்டரே அவசியப்படாதளவுக்கு குந்தாங்குறையாக நஷ்டக்கணக்கு காண்பிப்பதால், பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது கம்பெனி. இருந்தாலும், செல்வராகவனை விடுவதில்லை என்கிற குறிக்கோளோடு அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார்கள் பட நிறுவனத்தினர். 36 கோடி நஷ்டம் என்கிறார்கள் இவர்கள் கணக்குப்படி. அதில் பாதியை செல்வராகவன் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்.
பஞ்சாயத்தில் யார் சொம்பு நசுங்குமோ? அது போக போக நாட்டுக்கு தெரியவரும். இரண்டாம் உலகம் பிரச்சனையே இப்படி இருக்க, பின்னாலேயே வரப்போகும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பட பிரச்சனையும் நிறுவனத்தின் கழுத்தை சொறிய ஆரம்பித்திருக்கிறது. எப்படி?
இந்த படத்தின் ஹீரோ சந்தானம். படத்தை இயக்குவர் ஸ்ரீநாத். தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த ஒரு படத்தைதான் இப்போது ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பட்ஜெட் பனிரெண்டு கோடியை தாண்டி போய் கொண்டு இருக்கிறதாம். சந்தானத்தை வைத்து பனிரெண்டு கோடிக்கு படம் எடுத்தால் எப்படி வியாபாரம் செய்வது? சற்றே கவலையில் ஆழ்ந்திருக்கும் பி.வி.பி தனது தெம்பை முழுவதுமாக இழந்துவிடவில்லை என்கிறது அந்த காம்பவுண்டிலிருந்து வரும் நம்பிக்கை மிகுந்த தகவல்கள்.
செல்வராகவனை வளைச்சு வளைச்சு தாக்குவதை பார்த்தால், இந்த படம் எப்படியாவது ஓடியாக வேண்டும். இல்லையென்றால் சந்தானத்திற்கு சந்தனம் கரைத்துவிடுவார்கள் போலிருக்கிறதே?
Director Selvaraghavan to share the loss of IU!
According to the contract entered into by Irandam Ulagam’s director Selvaraghavan and producers PVP Cinemas, they would be sharing the profit or loss incurred by the movie on a 50 : 50 basis. With Irandam Ulagam failing miserably at the box office, the producers have now demanded that Selva repay the loss they incurred which amounts to 18 crores. Irandam Ulagam is made on a budget of 65 crores and the producers incurred a loss of 36 crores. Following this, Selva should be paying 18 crores to the producers, say sources.
While it is so PVP, the makers of Irandam Ulagam are also producing Santhanam’s Vallavanukku Pullum Ayudham which is a remake of Telugu hit Mariyadha Ramana. The production cost of the film is said to have crossed over Rs.20 crores already. This has given butterflies in the stomach of Santhanam who is the witness to whatever is happening to director Selva. Though, the makers are not worried about the overshoot of production budget in view of the success it made in Telugu, according to sources close to production unit.