சொந்த காசில் சூனியம்… அஜீத்தின் புதுமுடிவால் அச்சம்!
தமிழ்சினிமாவில் சொந்தப்படம் எடுக்கிற நடிகர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று… நம்ம முகத்தை காமிச்சு இவன் சம்பாதிச்சுட்டு போறானே என்று தயாரிப்பாளரை சந்தேகப்படுகிற ரகம். மற்றொன்று தனக்கு யாரும் படம் கொடுக்கவில்லையே என்று வருந்தி சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்கிற ரகம். இதில் இப்போது சொந்தப்படம் எடுத்துக் கொண்டிருக்கிற சுமார் அரை டசன் நடிகர்கள் அடங்கிவிடுகிறார்கள். இவர்களை தாண்டி மூன்றாவது ரகமும் இருக்கிறார்கள். கேட்டால் பேஷன் என்பார்கள்.
‘குண்டூசிய குமிச்சு வச்சு அது மேல உட்கார்றதை போய் பேஷன்றாங்கப்பா..’ என்று பின்னாளில் அவர்கள் படப் போகும் அவஸ்தையை உணர்ந்து சிரிப்பவர்கள் பிலிம்சேம்பர் பில்டிங்கின் நான்காவது புளோர் ஆசாமிகள். போகட்டும்… நாம் சொல்ல வந்தது ஒரு பிளாஷ்பேக்கும் ஒரு பியூச்சர்பேக்கும். அஜீத்திற்கு ஆரம்பம், வீரம் என இரண்டு படங்கள் ஓடிவிட்டதல்லவா? சொந்தப்படம் எடுக்கலாமே என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.
வாலி படமே இவரது சொந்தப்படம்தான் என்பார்கள் கோடம்பாக்கத்தில். அப்போதெல்லாம் தொடர் தோல்வியில் இருந்த அஜீத், எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர சேர அந்த படத்தை வளர்த்ததாக கூறும் வரலாறு. இந்த படத்தின் தயாரிப்பாளராக கருதப்பட்டவர்தான் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. படத்தை பணம் போட்டு வளர்த்தவர் அஜீத்துதான். அதற்கப்புறம் சக்கரவர்த்தி துணையுடன் பல படங்களை எடுத்து வந்தார் அஜீத். காலக்கொடுமை, கையை கடிக்க ஆரம்பித்தது. அதற்கப்புறம் அந்த ஆசையை மெல்ல மெல்ல விடுவித்துக் கொண்டார் அஜீத்.
இப்போது அந்த பழைய ஆசை துளிர்விட ஆரம்பிக்கிறதாம். புதுசு புதுசா நிறைய திறமைசாலிகள் வர்றாங்க. அவங்களை வளர்த்துவிடுவோம். நிறைய புது ஹீரோக்களை அறிமுகம் செய்வோம் என்று திட்டமிட்டிருக்கிறாராம் அவர். எதையோ கட்டி எதையோ இழுத்த மாதிரி ஆகாமலிருக்கணுமே என்பதுதான் அவரது டென்ஷனை உணர்ந்தவர்களின் தற்போதைய நடுக்கம்!
Ajith is contemplating to venture into production (again?)
Ajith is happy that he has given back to back hits to his fans and to his producers as well. He is now contemplating to venture into production of films.
Ajith in his earlier struggling days produced the blockbuster film Vaali, though the film was officially produced by NIC Arts Chakravarthy. Subsequently he dropped the idea of production to multifarious factors. Now the idea of producing the films has come back to him. Though he is not planning to produce his own films, he thinks by introducing new faces of actors as well as upcoming actors and directors, he can bring the young and new talents to limelight. Though the idea is laudable, it also has its risks. Helping others is one thing but helping others with personal risk is another. While congratulate him for his good intention, we advice caution too in such matters. Good Luck Ajith!