சோனா மிரட்டல்… அஜீத், சூர்யா அச்சம்!

இப்படியெல்லாமா தலைப்பு வைப்பாங்க? என்று பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் அவ்விருவரது ரசிக பெருமக்களுக்கும் இந்த செய்தியை சமர்ப்பிக்கிறோம்.

கோவா ரிலீசுக்கு முன்பாக வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க ஆசைப்பட்டார் நடிகை சோனா. இதற்காக பெரும் தொகை ஒன்றை அவருக்கு அட்வான்சாகவும் கொடுத்திருந்தார். (கவர்ச்சி நடிகை சோனா என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்). தனது கவர்ச்சியால் வந்த பணத்தை அவர் சினிமாவிலேயே முதலீடு செய்ய நினைத்தது சினிமாக்காரர்கள் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். ஆனால் அது தவறு என்று அவருக்கு அதே சினிமாக்காரர்கள் உணர்த்தியதுதான் வேதனை. அவருக்கு தப்பு தப்பான வழிகாட்டிகள் வந்து சேர, பல கோடி ரூபாய் இவர்களின் சுற்றமும் நட்புகளுக்குமே போய் சேர்ந்துவிட்டது. பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் பாக்யராஜ் 2010 என்ற படத்தை தயாரித்தார் சோனா. அதில் ஒரு கோடிக்கும் மேல் போய் முடங்கிவிட்டது.

வெங்கட்பிரபுவுக்கு அவர் கொடுத்த பணத்தை கொண்டு புதுவீடு கட்டிக் கொண்டாரே தவிர, அதற்கான நன்றியை அவர் செலுத்தவேயில்லை. வேறு வேறு படங்களை இயக்க ஆரம்பித்தார். இந்த நேரத்தில்தான் வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தாவும் ஹிட்டானது. உடனடியாக அஜீத் தனது அடுத்த படத்தையும் வெங்கட்டே இயக்கட்டும் என்று நினைத்தார். இந்த நேரத்தில் குறுக்கே கட்டையை போட்ட சோனா, என் அட்வான்சை திருப்பிக்கொடுங்க. இல்லையென்றால் அஜீத் உங்களுக்கு தரும் கால்ஷீட்டை வைத்து அந்த படத்தை என் தயாரிப்பிலேயே எடுங்க என்றார் வெங்கட்பிரபுவிடம். பணத்தை திருப்பிக் கொடுக்க யாருக்குதான் மனசு வரும்? அஜீத் படத்தை சோனா தயாரிக்கிறார் என்றால், கேட்பதற்கே அந்த விஷயம் ஒரு டைப்பாக இருக்குமே என்ற அச்சத்தை விட, இதை அஜீத்திடம் சொன்னால் அவர் சும்மா விடமாட்டார் என்ற அச்சமும் இருந்தது வெங்கட்டுக்கு.

பில்லா படத்தை வெங்கட்பிரபுவே இயக்கட்டும் என்று தயாரிப்பாளரிடம் அஜீத் பேசியபோது, சோனா விவகாரம் வந்து குறுக்கே நின்றது. சோனா படத்தில் நான் நடிப்பதா என்று அஞ்சிய அஜீத் வெங்கட் பிரபுவை கழற்றிவிட்டார். வந்த அதிர்ஷ்டம் கைமாறிப் போனது வெங்கட்டுக்கு. அதற்கப்புறம் இப்போதுதான் மீண்டும் வெங்கட்பிரபு பக்கமே தன் பார்வையை திருப்பியிருக்கிறார் அஜீத். அதே நேரத்தில் சூர்யாவும் வெங்கட் பிரபுவிடம் கதை கேட்டு அதை டெவலப் செய்ய சொல்லியிருக்கிறார். இந்த நேரத்தில் மீண்டும் சோனா குண்டாந்தடியை கையில் எடுத்திருப்பதால் சூர்யாவுக்கும் கலக்கமாம். வேறொன்றுமில்லை, முன்பு அஜீத் படத்தை நான் தயாரிக்கிறேன் என்றாரல்லவா? இப்போது சூர்யா படத்தை என் பேனரில் எடு என்கிறாராம். இல்லையென்றால் அட்வான்சை திருப்பிக் கொடு என்கிறாராம்.

பொட்டப்புள்ளைகிட்ட பணத்தை வாங்கிக் கொண்டு நல்ல புள்ளையாட்டம் நாடகம் போடுறது ரொம்ப தப்புங்க!

Sona to file complaint against Venkat Prabhu

Actress Sona has now filed a complaint against her friend Venkat Prabhu and has sought a stay on the release of his film. She said Venkat Prabhu and Premji were her best friends and they save her from SPB Charan. She even filed a complaint against SPB Charan. Since then Sona and Venkat Prabhu are not talking to each other. The ‘Biriyani’ director even appeared in public events with his friend SPB Charan which was a proof of his separation with Sona. However, now after more than 2 years, Sona has filed complaint against Venkat Prabhu, claiming that he has to pay a huge amount of money to her, to produce a film on behalf of her. Venkat Prabhu despite working with Ajith in Mangatha and Karthi in Briyani, did not bother to return the money to her. When the news surfaced that Venkat Prabhu is direct a film with Suriya, she had approached him either to make her a joint producer or to return the money she had advanced few years ago. She even threatened the director that she would seek a ban on the release of Karthi starrer Briyani, if the money is not returned. With such news emanating from Venkat Prabhu side, Ajith and Suriya are said to be in dilemma about their association with Venkat Prabhu. Earlier it was SPB Charan and now it is his close buddy Venkat Prabhu.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இவன் வேற மாதிரி – விமர்சனம்

இயக்குனர்களில் ‘நான் வேற மாதிரி’ என்று இரண்டாவது முறையாக உணர்த்தியிருக்கிறார் சரவணன். ஆக்ஷன் படங்களை பார்க்க கிளம்பும்போதே, Action 500. Anacin வகையறாக்களோடு உள்ளே சென்று பழகிய...

Close