ஜன்னல் ஓரம்- பாடல் வெளியீட்டு விழாவில் மொக்கை போட்ட பிரபலங்கள்…
கரு பழனியப்பனின் ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கத்தில் நடந்தது. அன்று காலையில் இருந்தே சென்னை நகரமெங்கும் பஸ்சில் சுற்றி, பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் பொதுமக்களிடம் ஆடியோவை விநியோகம் செய்துவிட்டு வந்திருந்தார்கள் படக்குழுவினர். மாலையில் நடைபெற்ற விழாவில் நடிகர் சூர்யா, விஷால், அமீர் உள்ளிட்ட திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.
விழா துவங்கி பல மணி நேரத்திற்கு ஒரே போர். ஏன்? தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை பேச வைக்கிறேன் என்று பலரையும் மேடையில் ஏற்றினார்கள். அவர்களும் வந்த கடமைக்கு பிளேடுகளை போட்டுவிட்டு போக, சூர்யா, விஷால், அமீர் பேசுகிற வரைக்கும் பொறுமையிழந்த பிரஸ் மக்களே கூட எடுத்தார்கள் ஓட்டம்.
அதுவும் கலைப்புலி சேகரன் போன்ற ‘பேச்சாள புலிகள்’ இந்த விழாவுக்கே சம்பந்தமில்லாத கம்பன், ராமாயணம், ராமன், சீதை என்று எதையெதையோ உளறி தள்ள, பொறுமையிழந்து விசிலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். (அதுக்கெல்லாம் சாலமன் பாப்பையா, நெல்லை கண்ணன்னு தனி டிபார்ட்மென்ட் இருக்குங்கண்ணே) நல்லவேளையாக மைக்கை பிடித்த டைரக்டர் சுப்ரமணியம் சிவா, உருப்படியாக நாலு வார்த்தைகள் பேசினார்.
பார்த்திபன் சார் என்னை பொறுத்தவரை ஒரு கருப்பு கமல். அவரோட முதல் படமான புதிய பாதையில் கமல் சார்தான் நடிக்க வேண்டியிருந்தது. சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. ஆனால் படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றதும் கமல் சாரை சந்தித்து வாழ்த்து கேட்க போனார் பார்த்திபன். கமலிடம் கையெழுத்து வாங்கலாம் என்று பார்த்திபன் போனால் அந்த ஆபிசில் உள்ளவர்கள் எல்லாரும் பார்த்திபனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். கையோடு கொண்டு போயிருந்த பார்த்திபன் கனவு என்ற புத்தகத்தை கமலிடம் வழங்கினார் பார்த்திபன். அதில் தனது கையெழுத்தை போட்டு பார்த்திபனிடமே கொடுத்தார் கமல்.
அதில் என்ன எழுதியிருந்தார் தெரியுமா? ‘எல்லாருக்குள்ளும் ஒரு பார்த்திபன் கனவு இருக்கும். ஆனால் பார்த்திபனின் கனவில் நான் இருக்கிறேன். அதுதான் சந்தோஷம்’ என்று எழுதியிருந்தாராம். -இப்படி ஒரு பிளாஷ்பேக்கை சொல்லி அந்த அரங்கத்தின் வெப்பத்தை ஓரளவுக்கு தவிர்த்தார் சிவா.
பின்குறிப்பு 01- படம் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் வேஷ்டி கட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். ‘டைரக்டர் கரு.பழனியப்பனின் அன்பு வேண்டுகோளை ஏற்று’ என்று இந்த வரிக்கு முன்னால் சேர்த்துக் கொள்ளவும். ஆண்கள் இப்படி என்றால் படத்தின் நாயகி மனிஷா புடவை கட்டிக் கொண்டு வந்திருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. நேரே தெரிந்த பிரமாண்ட வொயிட் ஸ்கிரீனை விட, மனிஷாவின் ஸ்கின் ஸ்கிரீன் எக்கச்சக்க ப்யூட்டி.
பின்குறிப்பு 02- படத்தில் பாடல்கள் எப்படி? வித்யாசகரின் இசையும், படமாக்கப்பட்ட விதமும், அழகோ அழகு. அதிலும் ஒரு பொம்மலாட்ட பாடல், கரு.பழனியப்பனின் ரசனைக்கு ஒரு தேக்கரண்டி தேன்!
Suriya launched Jannal Oram Audio
The audio release of Karu Palaniappan’s Jannal Oram held at Kamala theatre, on 17th Oct., evening, after the cast and crew of the film, visited various parts of the city, travelling in a special bus, and handed over the audio to crew of MTC as well as public. The chief guest for the occasion was Suriya, with celebrities from tinsel town, viz., Vishal, Ameer, Parthiban, Samuthirakani, Cheran, Vemal, Manisha Yadav participated in the event. The disappointment of the occasion was the dull and boring speech rendered by the so-called executive member of the Producers’ Council, especially that of Kalaipuli Sekaran. However, it was director Subramanyam Siva who stemmed the rot and was eloquent in his speech. He narrated an incident happened in actor Parthiban’s life. Parthiban who was shot to fame in Puthiya Pathai, had to don the grease paint and act in his film, as Kamal who was to act in the film, could not do it for various reasons. However, when Parthiban went to Kamal’s house to celebrate the success of his film, he was in for a surprise. Parthiban who took his book Parthiban Kanavu, as a present to Kamal, received the book, back from Kamal, with Kamal’s signature, and some glittering words praising Parthiban. Kamal wrote that everyone will have Parthiban Kanavu, but I am proud and glad that I am in the dream of Parthiban. Ameer spoke praising Suriya. Vishal spoke about his film Sivapathigaram made by Karu. Pazhaniappan. Karu. Pazhaniappan in his concluding speech thanked Suriya for his presence, and also other celebrities who graced the occasion.
anna thank u..