ஜாங்கிரி… ம்ஹும், மொளகா பஜ்ஜி… ஆறடி ஒயினுக்கு அழகான பட்டப் பெயர்!

கெட்டி மேள சப்தத்ததோடு கோடம்பாக்கத்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள் பிரபல இந்தி தயாரிப்பாளரான யாஷ்சோப்ராவின் வாரிசுகள். பாலிவுட்டில் படா படா பிலிம்களையெல்லாம் எடுத்து இந்திய அரசின் கவுரவத்தையும் உலக அரங்கின் கவனத்தை ஈர்த்த நிறுவனம் ஆச்சே? சென்னையிலிருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டலின் பளபளப்பு வெளிச்சத்துக்கு நடுவில் தங்களது முதல் தமிழ் படைப்பான ‘ஆஹா கல்யாணம்’ திரைப்படத்தை அறிமுகம் செய்து வைத்தார்கள். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குனர் கோகுல்.

நான் ஈ புகழ் நானி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி என்கிற புதுமுகம் அறிமுகம். சமீபகாலத்தில் விஜய் சேதுபதியின் க்ளோஸ் பிரண்ட் ஆகியிருக்கிறார் நானி. அந்த அன்புக்கு அடிமையாகி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் விஜய்சேதுபதி. நானியை ‘என் தம்பி இவன்…’ என்று அவன் இவன் ஏக வசனத்தோடு அழைத்து (ஒரு பாசத்துலதான்) மேடை ஏறிய இன்னொரு பிரபலம் டைரக்டர் சமுத்திரக்கனி. டைரடக்டர்கள் தரணி, விஷ்ணுவர்த்தன், பாடகிகள் உஷா உதுப், சின்மயி, நடிகை சிம்ரன் என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபலங்கள் அத்தனை பேரும் கவனம் ஈர்க்க, இனிதே துவங்கியது விழா.

இப்போதெல்லாம் ‘தொகுப்பாளர்கள் அமைவதெல்லாம் தயாரிப்பாளர் கொடுத்த வரம்’ என்றாகிவிட்டது. அந்த மேடையை வரமும் சாபமுமாக அலங்கரிக்க ஆரம்பித்தார்கள் இருவர். ஒருவர் தொகுப்பாளினி ரம்யா. இவர் வரம் என்றால் இவருடன் யாரோ ஒரு சின்ன பையன். சரியான சாபம். மொக்கை மொக்கையாக கேள்வி கேட்டு, வந்திருந்த விருந்தினர்களை முகம் சுளிக்க வைத்தார் தம்பி. நானியிடம், ‘வா நீ என்று வாணியை அழைச்சிங்களா’ என்று இந்த தம்பி கேட்க, தமிழ் தெரியாத நானி பேய் முழி முழிக்க, அதையே திரும்ப திரும்ப கேட்டு தொகுப்பாள தம்பி வெறுப்பேற்ற, வந்திருந்த கூட்டம் பெருமூச்சு விடாத குறையாக அமர்ந்திருந்தது.

எப்படியோ ஆங்காங்கே சுவாரஸ்யத்தை தெளித்தது நிகழ்ச்சி. ‘தமிழ்ல புதுசா அறிமுகம் ஆகும் வாணிக்கு ஒரு செல்லப்பெயர் வைக்கலாமா?’ என்று சிம்ரனிடம் கேட்டார் ரம்யா. ‘குஷ்பு இட்லிங்கிற மாதிரி வாணிக்கு ஒரு செல்லப்பெயர் வைங்களேன்’ என்று இவர் கேட்க, சற்றே நெர்வஸ் ஆன சிம்ரன் அழகான பெயர் ஒன்றை பளிச்சென சொன்னார். ‘ஜிலேபின்னு வைக்கலாமா?’ அதற்குள் வலிய முன் வந்து தனக்கு தானே செல்லப்பெயர் வைத்துக் கொண்டார் வாணி. என்ன தெரியுமா? ‘மிளகா பஜ்ஜி…. ’

பொண்ணு அநியாயத்துக்கு உயரம். ஒருவேளை இந்த படம் ஹிட் என்றால் கூட, இந்த வாணிக்கு சரியான ஜோடியாக தேடுவது தமிழில் ரொம்ப கஷ்டம். விஷாலே இவரது கழுத்துக்குதான் வருவார் போலிருந்தது. சரி, படத்தின் கதை என்ன? கல்யாண நிகழ்ச்சிக்கு கான்ட்ராக்டாக எல்லா வேலைகளையும் செய்து முடிக்கும் ஒரு வாலிபனும் வாலிபியும் அந்த கல்யாணம் முடிவதற்குள் காதலாகி திரிவதுதானாம்.

அழகான களம். அடிச்சு கெட்டி மேளம் கொட்ட வேண்டியதான் பாக்கி.

Aaha Kalyanam audio launched

Popular Bollywood production house Yash Raj Films will be foraying in Kollywood with their maiden venture Aaha Kalyanam starring Naan Ee star Nani and Bollywood actress Vani Kapoor. The audio launch of the film was held on 21st Jan. at a Five Star Hotel, in Chennai. The film is a remake of super hit Hindi film Band Baaja Baaraat. It is a bilingual film made in Tamil and Telugu simultaneously. The music is by Dharan Kumar. The entire cast and crew of the film was present during the occasion. The chief guests include, directors Vishnuvardhan, Dharani, Samudhrakani, actors Vijay Sethupathi, Simran and playback singers Usha Uthup and Chinmayee.

3 songs were screened during the event and all seem be peppy numbers. It is heard that the film revolves around Nani and Vani who play the marriage ‘event’ contractors in the film and how they fall in love while discharging their duties as contractors, which is told in a humorous  way.

Speaking on the event Simran nicknamed Vani Kapoor as Jilebi, while Vani herself has christened ‘Milaga Bajji’ has her nickname.  Nani who spoke in Tamil and English said he had a good time while shooting for the film.

The film is scheduled to hit the screens on 21st Feb.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டி.இமான் யுகபாரதி கூட்டணி டமால்!

e அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் கூட்டணி முக்கியம். இதை வெற்றிப்படங்கள் எல்லாமே நிரூபித்திருக்கின்றன. ஒரு ஹிட்டுக்கு பிறகு இதுதான் ராசி என்று அதையே பிடித்துக் கொண்டு தொங்குகிற...

Close