ஜில்லா எடிட்டர் மாற்றம்… விஜய் போட்ட உத்தரவு!

‘தலைவா ’ சறுக்கியதிலிருந்தே தன்னை ‘ஸ்டடி’ பண்ணிக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாகிவிட்டார் விஜய். கடக ராசிக்காரரான அவருக்கு சனி இருக்கும் இடத்தில் ஒரு வண்டி களி மண்ணு இருப்பதாக ஜோதிடர்கள் அட்வைஸ் செய்ய, ஆண்டவன் சன்னிதானத்திலேயே அதற்கான நியாயம் கேட்க கிளம்பிவிட்டார் அவர். திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் சன்னதியில் அவருக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவர் திருநள்ளாறுக்கு வரும் தகவலும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாம்.

விஜய்க்கு சனி பெயர்ந்திருக்கிறார் என்றால் ஜில்லா படத்தின் எடிட்டர்களான பிரவீன் கே.எல் ஸ்ரீகாந்துக்கு சனி பிடித்திருக்கிறார் போலும். இப்படத்தின் எடிட்டிங்கை நடு நடுவே கவனித்து வந்த இயக்குனர் நேசன், ஒரு கட்டத்தில் இது சரிப்பட்டு வராது என்று நினைத்தாராம். சடக்கென நினைத்தவுடன் மாற்றிவிட முடியாதே? விஜய்யிடமும் ஆலோசனை கேட்கப்பட்டதாம். உங்களுக்கு பிடிக்கலேன்னா எனக்கும் ஓ.கே தான். உங்க இஷ்டம் எதுவோ, அதை செய்யுங்க என்று அவரும் க்ரீன் கொடியை ஆட்டியதால், இந்த ரெட்டையர்கள் படத்திலிருந்தே நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு பதிலாக டான் மாக்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் உலக பிரசித்தி பெற்ற படமான(?) ஜக்குபாய் படத்தின் எடிட்டர். முந்தைய எடிட்டர்கள் மாற்றப்பட்டதற்கும் அவர்கள் சமீபத்தில் எடிட் பண்ணிய பிரியாணி படத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நம்புவோமாக!

Vijay Okays shifting of Jilla editors

Vijay’s Jilla is under post production process and working overtime to catch the Pongal carnival at the BO. Recently, director Nesan of the film, felt that he was not happy with the editing of the film so far and wanted to shift its editors Praveen and KL Srikanth. He had sought the advice of Vijay on the shifting, who told him to change them if the director felt so. Immediately the editors have been shifting and Don Max who did editing for Jaggubai has been roped in to edit the film. It appears that Vijay is taking all care that his film should do well at the BO.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
என்றென்றும் புன்னகை விமர்சனம்

‘குடி’யிருக்கும் கோவிலாகிவிட்டது தமிழ்சினிமா. குடியில்லா படமில்லை என்ற நிகழ்மொழிக்கேற்பதான் இந்த படமும். ஆனால் கிளாஸ் முழுக்க காதலும் கலகலப்பும் நிரம்பியிருப்பதால் இரண்டரை மணி நேரம்.... நிமிஷத்தில் காலி!...

Close