‘ ஜில்லா புகழ் மோகன்லால் நடிக்கும்… ’ ஒரு அநியாய வௌம்பரம்?
எத்தனையோ ஹிட்டுகள் பார்த்திருந்தாலும், மோகன்லாலுக்கு இப்படியொரு சூழ்நிலை நேரக்கூடாதுதான். வேறொன்றுமில்லை, அவர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘வெற்றிமாறன் ஐ.பி.எஸ்’ என்ற படத்தின் விளம்பர பேனர்களிலும் போஸ்டர்களிலும் இப்படி எழுதியிருந்தார்கள். ‘ஜில்லா புகழ் மோகன்லால் நடிக்கும்…’ என்று. ஆனால் லால் சேட்டனை பற்றி அறிந்தவர்கள் புரிந்தவர்களின் அன்பு மழையில் அவர் நனைந்துதான் போயிருக்க வேண்டும். ஏனென்றால் இப்படத்தை முதலில் மலையாளத்தில் இயக்கிய மேஜர் ரவி, அதை அப்படியே தமிழில் வெளியிடுகிறார். தமிழிலும் இந்த படம் பெரிய ஹிட்டாக வேண்டும் என்று நமது தமிழிலேயே பேசி ஒரு வீடியோ ஃபுட்டேஜ் அனுப்பியிருந்தார் மோகன்லால்.
அவர் வராத ஆடியோ வெளியீட்டு விழாவில் அந்த வீடியோவை ஒளிபரப்பி, இந்த படத்திற்கு லாலாட்டனின் ஆதரவும் அன்பும் உண்டு என்று திட்டவட்டமாக தெரிவித்தார் மேஜர் ரவி. இவர் இராணுவத்தில் மேஜராக பணியாற்றிவிட்டு சுமார் இருபது வருட சர்வீசுக்கு பிறகு ஓய்வு பெற்று திரும்ப வேண்டும். அந்த நேரத்தில்தான் அவருக்கு சிக்கல். எங்கு போவதென தெரியவில்லையாம். கேரளாவுக்கு செல்வதா, சென்னைக்கு செல்வதா என்று முதலில் யோசித்தவர் சட்டென வந்து இறங்கிய இடம் சென்னை கோயம்பேடு.
கமல்சார்தான் எனக்கு சினிமா கற்றுக் கொடுத்தார். அப்புறம் மணிரத்னம் சார்ட்ட போய் சேர்ந்தேன். இந்த இருவரும் இல்லேன்னா நான் சினிமாவுல இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது என்று குருதட்சணை செய்தார் மேஜர் ரவி. விழாவில் யார் யாரோ கலந்து கொண்டிருந்தாலும், நடிகர் ரவி மரியா பேசியது மேஜரின் குணத்தை இன்னும் மேஜராக்கியது. ‘ஒருமுறை நானும் அவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு தெருவில் நடந்து கொண்டிருந்தோம். திடீர்னு அவர் பதறியடிச்சுட்டு ஓடினார். பார்த்தால் அங்கொரு குடிசை தீப்பற்றியிருந்தது. கையில் கிடைத்த வாளியை வைத்து அந்த குடிசையில் பற்றிய தீயை அணைத்துக் கொண்டிருந்தார். அவருக்குள் எந்நேரமும் ஒரு மிலிட்ரி மேன் இருக்கிறான். நாட்டுல நடக்குற அநீதிகளையும் பிரச்சனைகளை பற்றியும் படம் எடுக்க மிகவும் தகுதியானவர் அவர்’ என்றார்.
இந்த படத்தை என்எஸ்சி ஏரியாவின் விநியோகஸ்தரான நாராயணன் வாங்கி தமிழகம் முழுக்க வெளியிடுகிறாராம். முதல் முயற்சி. வெற்றி பெறட்டும்…
Mohanlal’s Vetrifmaran IPS audio launched
Mohanlal has seen hits, super hits and blockbusters in his life. So a hit or a blockbuster will be the same for him. However sadly the makers of Vetrimaran IPS has advertised in one of the banners, ‘Jilla fame’ Mohanlal, as if he is unknown to Tamil films. It is an insult for the veteran actor though he takes in good spirit.
Well. The audio of the film ‘Vetrimaran IPS’ the dubbed version of Malayalam film, in which Mohanlal plays the lead, was released in Chennai. Director ‘Major’ Ravi who has directed the film has released a video footage in which Mohanlal has appealed speaking in Tamil, to the audience to make the film a ‘hit’ like Malayalam film. Speaking on the occasion, Major Ravi recalled that after his retirement from Military he was in confused state of mind, when he met actor Kamal who guided him to film world. Later he met Manirathnam who helped him to establish himself in film industry. He considers both of them his mentors and guide for his success and standing in the industry.
Malayalam star Ravi Maria had narrated an incident which further revealed the brighter side of Major Ravi. He said when both he and Major was walking in a street, there was chaos at a distance and by the time he realised what happened, Major was throwing water on the fire and helping to contain the fire which engulfed thatched huts. He said that ‘military’ discipline is etched still in his mind and heart.
NSC area distribution Narayanan will be releasing the film in Tamil Nadu.