ஜீவாவுக்கு நோஸ்கட் கொடுத்த அழகுராஜா ராஜேஷ்!

லேசாக கல் தடுக்கினால் கூட போதும், தடுமாறும் யாரையும் தலைக்குப்புற தள்ளிவிட்டுதான் வேடிக்கை பார்க்கும் கோடம்பாக்கம். அதுவரை பழகிய நட்பெல்லாம் உடைந்து போன அப்பளமாகி பல் இளித்துக் கொண்டு நிற்கும். சமீபத்தில் அப்படியொரு அப்பளமாக நொறுங்கிப் போயிருக்கிறாராம் எம்எம்எஸ் ராஜேஷ். இவர் கொடுத்த ஹாட்ரிக்குகள் எல்லாமே மறந்து போய்விட்டது இவரால் வாழ்ந்த சிலருக்கு. அதுவும் முக்கியமாக ஜீவாவுக்கு.

ஆல் இன் ஆல் அழகுராஜா தயாரிப்பில் இருந்தபோது ராஜேஷை அணுகிய ஜீவா, அண்ணே… என்னைய வச்சுதான் நீங்க அடுத்த படம் எடுக்கணும். அதுவும் என்னோட சொந்த தயாரிப்புல என்று கேட்டுக் கொண்டாராம். சும்மா கேட்டால் ஆகாது என்று ஒரு நியாயமான தொகையை முன் பணமாகவும் கொடுத்திருந்தாராம். இந்த சந்தோஷத்தையெல்லாம் கெடுத்தார் அழகுராஜா. அப்படத்தின் தோல்விக்கப்புறம் ஜீவாவை தொடர்பு கொண்ட ராஜேஷ் படத்தை எப்போ ஆரம்பிக்கலாம் என்றாராம். சொல்றேன் என்று கூறி அவரை அனுப்பி வைத்த ஜீவா செய்ததுதான் செம காமெடி. தனக்கு தெரிந்த சினிமா தயாரிப்பாளர்கள் சிலருக்கு போன் செய்து, நான் கால்ஷீட் தர்றேன். ராஜேஷ் டைரக்ட் பண்ண வாய்ப்பு தர்றீங்களா என்றாராம். இப்படி நாலைந்து பேர்களிடம் இவர் ராஜேஷை ஏலம் போட, அந்த தகவல்கள் எல்லாமே சுட சுட ராஜேஷ் காதுகளுக்கு வந்து சேர்ந்ததாம்.

ஜீவா… நீங்க தயாரிக்கிறேன்னு சொல்லி எனக்கு அட்வான்ஸ் கொடுத்ததாலதான் நான் உங்ககிட்ட வந்து நின்னேன். ஆனால் என்னை ஊருக்கெல்லாம் ஏலம் போடுறது என்ன நியாயம்? உங்க அட்வான்சை திருப்பி வாங்கிக்கோங்க என்று கட் அண் ரைட்டாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாராம். இப்போது ஆர்யாவே ராஜேஷுக்காக படம் தயாரிக்க முன் வந்திருக்கிறார். அது மட்டுமல்ல, இந்த படத்தில் ஆர்யாதான் ஹீரோவாகவும் நடிக்கப் போகிறாராம்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி. ஆனா ராஜேஷ் ஃபீலிங் யாருக்கும் வரக் கூடாது மச்சி!

Director Rajesh’s ‘tit-for-tat’ to Jiva

When success embraces you every Tom, Tick and Harry will be your friends and boasts of your friendship. When fallen from the grace, there will be none to even listen to your feelings. This is the practical world and Kollywood is no different.

Recently director Rajesh who gave series of hits and resurrected careers of sagging actors, met with a disaster at the BO with his All in All Azhagu Raja, he learnt his lessons of finding who are his real friends.

When AAAR shoot was in progress, Jiva who starred in the director’s debut film Siva Manasula Sakthi, met Rajesh and told him that he should direct his next film with Jiva, and assured him that he would produce the film under his banner. He also gave him a token advance too. Rajesh contacted Jiva after the disastrous AAAR, to find out from him when he can commence his film with him. Jiva told him to wait for his call. Meanwhile Jiva spoke to many of his known producers to find out if they are interested to produce the film with director Rajesh and himself in the lead, the response was negative.

Having learnt the news (as is common in Kollywood these matters would spread like wild-fire) Rajesh rang up Jiva and expressed his annoyance and disappointment with his behaviour. He seems to have told Jiva, “I contacted you because you said you will produce the film, else I would not have done that. You have no business to speak to other producers on my behalf when I have not asked you to do so. You can take back the advance you have paid”, said Rajesh in his anger and disconnected the line.

His another friend Arya pacified him and gave him dates and advance and asked him to direct his next film under Arya’s home banner.

Arya having struggled to come up in his career knows the value of people, while Jiva grown up with money, knows only the value of money, perhaps!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சுசீந்திரனை போனில் பாராட்டிய விஜய்

திருட்டு கோழியோ, குருட்டு கோழியோ, கொழம்பு ருசியா இருந்தா போதும்ங்கற நினைப்புதான் எல்லா ஹீரோக்களுக்கும் இருக்கிறது. சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு படம் எல்லா ஏரியாவிலும் கலெக்ஷனை அள்ளிக்...

Close