ஜெயம் ரவி கால்ஷீட் வேண்டாம்! அமீர் அறிவிப்பு

‘நிமிர்ந்து நில்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சத்யம் காம்ப்ளக்சில் நடந்தது. மேடை கொள்ளாத கூட்டம்…. கூட்டம் கொள்ளாத பேச்சு என்று பலரையும் ‘துவண்டு நில்’லாக்கிய விழாவில், சிலரது பேச்சு வழக்கம் போல டாப்! ரொம்ப ஆச்சர்யமாக அமைந்தது கே.ரா.ஜன் பேச்சும், அதையடுத்த சேரன் பேச்சும். பொதுவாகவே கே.ராஜன் பேச ஆரம்பித்தால் சூச்சு வராதவர்கள் கூட தனக்கு தானே ஒரு விரலை நீட்டியபடி புழக்கடை ஓடுவார்கள். இன்றும் அப்படிதான் நடக்கப் போகிறது என்று நினைத்தால் அளவாய் ஆரம்பித்து நிறைவாய் முடித்தார் மனுஷன். அவர் பேசியது இதுதான். ‘திருட்டுவிசிடி.காம்னு ஒண்ணு. எல்லா புதுப்படத்தையும் அதுல போட்டு அவன் கோடி கோடியா சம்பாதிக்கிறான். படம் எடுத்த தயாரிப்பாளர்தான் தெருக்கோடியில நிக்கிறான். எது எதுக்கோ முடிவு கட்டுறீங்க. இதுக்கு ஒரு முடிவு கட்ட மாட்டீங்களா?’ என்றார் சோகத்தோடு. (ஏம்ப்பா திருட்டு வி.சி.டி, யார்றா நீ? எங்கேயிருக்க?)

பின்னாலேயே பேச வந்த சேரன், விஞ்ஞானத்தை அடக்கியாள முடியாது. கேரளாவில், மும்பையில் இருக்கிற மாதிரி படம் ரிலீசாகிற அன்னைக்கே விசிடி, டிவிடிய வெளிட்டால் என்ன? யாரோ திருட்டுப்பசங்க சம்பாதிச்சுட்டு போவதையாவது தடுக்கலாம். அந்த பணம் நமக்கு வந்து சேரும்ல? யார் என்ன நினைச்சாலும் சரி. நான் தயாரிச்சு இயக்கும் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை ரிலீஸ் அன்னைக்கே டிவிடி ரைட்ஸ் கொடுக்கப் போறேன். அதே நாள்ல இன்டர்நெட், யூ ட்யூப் எல்லாத்துலேயும் வெளியிடப் போறேன் என்றார். (வழக்கமாக புரட்சியை கமல் துவங்கி வைப்பார். இந்த முறை சேரன். வாங்க சார்…)

யுடிவி தனஞ்செயன் சாதாரணமாக தும்மினாலே அதில் ஆயிரம் அபத்தங்களை கண்டுபிடிப்பார்கள் இங்கே. சற்று தாமதமாக வந்த தனஞ்செயன், தன் பங்குக்கு தும்மிவிட்டு போக, பின்னாலேயே வந்த அமீர் பிலுபிலுவென பிடித்துக் கொண்டார். ஜெயம்ரவியை வாழ்த்திய தனஞ்செயன், நீங்க நிறைய படம் பண்ணணும். மூன்று வருஷத்து ஒரு படம் பண்றதையெல்லாம் விட்ருங்க என்றார் கேஷுவலாக. இதைதான் அமீர் பிடித்துக் கொண்டார். என் ஆதிபகவன் படத்தைதான் தனஞ்செயன் சொல்லியிருக்கார். நான் இருப்பது தெரியாமல் அவர் சொல்லிட்டாருன்னு நினைக்கிறேன். இருந்தாலும் சொல்றேன். ரவி… நீங்க பயப்பட வேண்டாம். நான் இனிமே உங்களை நடிக்க கூப்பிட மாட்டேன் என்றார். (ரவிக்கு நிஜமாகவே ஆறுதலாக இருந்திருக்குமோ?)

சரி… படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் எப்படி? இன்னொரு முறை திரையிட மாட்டார்களா என்று இருந்தது. இப்படத்திற்கு பிறகு சமுத்திரக்கனியின் சம்பளமும், ஜெயம் ரவியின் சம்பளமும் மேலும் நிமிர்ந்து நிற்கும் என்பது மட்டும் உறுதி.

Nimirndhu Nil audio launched!

Jayam Ravi starrer Nimirndhu Nil audio was launched today at Sathyam Cinemas, Chennai. Dignitaries from Kollywood film fraternity was present in full strength to greet and wish the Nimirndhu Nil team. Along with audio the trailer of the film was also released. The songs and the trailer showcased the strength of the film and it augurs well for the hero Jayam Ravi and its director Samundhrakani.

Speaking on the occasion KN Rajan lamented on the conditions of piracy of DVDs and CDs and requested the authorities to initiate action. Director Cheran said that it would be difficult to control the scientific advancement and has to go along with the flow. He said instead of giving rights after the release of the film, he said, he has now decided to give the rights DVDs and CDs of his upcoming film JK Ennum Nanbanin Vazhkai, on the day of the film release, just how Bollywood and Mollywood industries are currently doing.

While UTV Dhananjayam praised Jayam Ravi for his talents asked him to do more films, instead of doing a film for 3 years, director Ameer responded saying that he would not cast Ravi in his films in future and hence Ravi need not worry about it.

 

Nimirndhu Nil has a star cast of Jayam Ravi in dual roles with Amala Paul playing the female lead and Ranjani Dwivedhi playing an important role in the film, which has music by GV Prakash.

1 Comment
  1. Thirudaatha VCD says

    “ஏம்ப்பா திருட்டு வி.சி.டி, யார்றா நீ? எங்கேயிருக்க?”
    தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப் போரிங்க..?
    இணையத்தைப் பற்றி கொஞ்சமும் அறிவில்லாமல் அவர்கள் தான் அப்படி பேசுகிறார்கள்.. திருத்தவே முடியாது.. நீங்களுமா? நல்லா அடிக்கிறிங்க ஜால்ட்ரா..

    என்ன நடக்குது அது எப்படி நடக்குதுனு முதலில் பொது அறிவை வளர்த்துக்குங்க.. அப்புரம் மற்றவரைப் பற்றி வாய் கிளிய பேசலாம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மந்திரவாதி பிடியில் சமந்தா? சரும நோய் விலக ஒரு ஷார்ட் கட்!

சென்ட்டிமென்டுகளால் வடிவமைக்கப்பட்டதுதான் சினிமாவும். பூனையை குறுக்கே விட்ட மன்சூரலிகானை தவிர, மீதி எல்லாருமே பூசணிக்காயும், பொட்டு சூடமும் இல்லாமல் படத்தை துவங்குவதும் இல்லை. முடிப்பதும் இல்லை. இப்படிப்பட்ட...

Close