ஜெய் ஆகாஷ் முகத்தை ஒரு மணி நேரம் தொடர்ந்து பார்க்கும் தைரியம் இருக்கிறதா?

எப்படியாவது தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கிவிட வேண்டும். தனக்கிருக்கும் இரண்டுங்கெட்டான் நடிகர் என்கிற இமேஜ் பெட்டியை உடைத்துக் கொண்டாவது வெளியே வந்துவிட வேண்டும் என்கிற வெறி ஜெய் ஆகாஷுக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. கிட்டதட்ட அவரது சொந்த கதைதான் போலிருக்கிறது இந்த படம். ‘என் உயிர் என் கையில்’ என்கிற இந்த படத்தின் ‘நாட்’ என்ன தெரியுமா? மூன்று மீட்டர் உயரம், மூன்று மீட்டர் அகலமுள்ள பெட்டிக்குள் அடைக்கப்பட்ட ஹீரோ தப்பித்து வெளியே வந்தாரா? இல்லை, பெட்டிகுள்ளேயே மர்கயாவா என்பதுதான்.

நமக்கு காட்டப்பட்ட சில நிமிட காட்சிகளிலேயே நம்மை மூச்சு முட்ட வைத்தார் ஜெய் ஆகாஷ். உள்ளுக்குள்ளிருந்து செல்போன் மூலம் அவர் உயிருக்காக கெஞ்சியும் அழுதும் சாபம் கொடுக்கிற காட்சிகள், ஒண்ணாம் நம்பர் பேய் படத்தையே கூட தாண்டிய அளவுக்கு கிலி மூட்டியது. சுமார் ஒன்றரை மணி நேர படமாம் இது. ஜெய் ஆகாஷ் மட்டும்தான் ஸ்கிரீனில் தோன்றுவார். ஒருவரே நடிக்கும் காட்சியை ஒன்றரை மணி நேரம் பார்க்க முடியுமா என்கிற சந்தேகத்தையெல்லாம் தவிடு பொடியாக்குகிற அளவுக்கு படத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்களாம்.

ஆறு மொழிகளில் படத்தை வெளியிடப் போகிறார்கள். ஆறிலும் ஜெய் ஆகாஷ்தான் ஹீரோ. எந்த லாங்குவேஜில் படம் க்ளிக் ஆனாலும், அந்த லாங்குவேஜில் ஒரு பத்து படத்திற்கான பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் அவர்.

அந்த வாய்ப்பை தமிழ் தருமா? பார்க்கலாம்…

Jai Akash trying to break the shackles?

Jai Akash is one actor who will not give up easily, it appars so. He has put in lot of efforts to make himself a saleable star. Will he be able to do that? Will Akash be able to break the shackles?

Well! In his upcoming film titled En Uyir En Kaiyil, he is doing exactly the same thing. The crux of the film is that he has been dumped into 3 x 3 Mts. Box. Will he be able to break open and come out or he meets his end inside the box?

The trailer of the film shown to the reporters was stuffed with action coupled with anger, anxiety, helplessness and will power, etc. Jai Akash in those few scenes shown impressed the viewers exhibiting various emotions. He said the film will have 90 minutes running time and Jai will be the only person seen throughout the film. When eyebrows were raised if it be possible to watch a man for 90 minutes, a twist in the film will ensure that viewers are glued to their seats, said an unit member.

This film will be released in 6 languages and Jai will be the hero in all the languages.

We wish that he really breaks the shackles to be a star to reckon with!

3 Comments
  1. mannan says

    Copy of ‘Buried’. Are they paying Royalty to the original movie makers?

  2. rishi says

    Its the movie called “buried” in Hollywood.
    These people must be prosecuted for stealing others story.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விழா தொகுப்பாளினியை விரட்டி வந்த இயக்குனர்…. ஆடியோ விழாவில் ஐய்யய்யோ…

இப்போதெல்லாம் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது வெகு சாதா‘ரணமாகி’விட்டது. ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கும் யாரையாவது சற்று பவுடர் பூச்சு ஜாஸ்தியாக்கி மேடையேற்றி விட்டுவிடுகிறார்கள். ஒரு நிகழ்ச்சியில்...

Close