டாப்ஸி சம்மதித்தது எதற்காக?
அழகும் திறமையும் இருந்தும் கோடம்பாக்கத்தில் தடுக்கி விழுந்து தனக்கு பின்னால் வந்தவர்களையும் முன்னால் ஓட விட்டு வேடிக்கை பார்த்தவர் டாப்ஸி. வெள்ளாவியில் வைத்து வெளுத்த பெண்ணை, விதி வெளு வெளுவென வெளுக்க, தமிழில் சுத்தமாக மார்க்கெட்டே இல்லை அவருக்கு.
இருந்தாலும் சென்டிமென்ட் என்ற ஒன்று இருப்பதால் காய்ந்து போன டாப்ஸி செடிக்கு, கைநிறைய பூவாளி தண்ணீர். எப்படி?
ஆடுகளம் படத்தில் தனுஷுடன் இவர் ஜோடி சேர்ந்ததால்தான் அந்த படம் ஹிட் என்கிற நம்பிக்கை இப்போது ஏற்பட்டிருக்கிறதாம் ஐஸ்வர்யா தனுஷுக்கு. அந்த ஒரு காரணத்திற்காக தற்போது இவர் இயக்கிக் கொண்டிருக்கும் வை ராஜா வை படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தாராம் டாப்ஸியை. இத்தனைக்கும் இந்த படத்தில் தனுஷ் இல்லை. கவுதம் கார்த்திக்தான் ஹீரோ. இருந்தாலும் அவரை விரும்பி அழைத்து நடிக்க வைத்திருக்கிறார். வெறும் இரண்டு நாள் வொர்க்தான். ஆனால் அது முக்கியமான ரோல் என்றெல்லாம் ஐஸ் ‘ஐஸ்’ வைக்க, அதுக்கென்ன? செஞ்சுட்டா போச்சு என்று இரண்டு நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் டாப்ஸி.
Taapsee will play a cameo in Aishwarya’s film
Taapsee who rose to fame with Aadukalam with Dhanush has been roped in to play a cameo in Vai Raja Vai directed by Aishwarya Dhanush. Buoyed sentimentally, Aishwarya wanted Taapsee to play the cameo in the film as Aishwarya feels that Taapsee will bring luck to her film. She has told Taapsee that it will be an important role in the film and only two days call sheet is required, to which Taapsee obligingly agreed to do the film. Taapsee despite her good performance in Arrambam has not yet been looked upon by film makers here. Hopefully Aishwarya too will bring luck to Taapsee to make her a top heroine to reckon with in Kollywood.