டிசிப்ளின் லேடின்னா அது குஷ்புதான்… – படவிழாவில் பாராட்டு!

பாண்டியநாடு படத்தை தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பாக தயாரிக்கிறார் விஷால். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுதான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் மதகஜராஜா படத்தில் எனக்கு கிடைச்ச அனுபவம் என் மனசை போட்டு உறுத்திக்கிட்டேயிருந்துச்சு. அந்த நேரத்துலதான் சுசீந்திரன் சார் வந்து இந்த கதையை எங்கிட்ட சொன்னார். உடனே இந்த படத்தை நானே தயாரிக்கறதா முடிவு பண்ணிட்டேன் என்றார் விஷால்.

பாண்டியநாடு படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடை விஷாலை பொறுத்தவரை ரொம்பவே ஸ்பெஷல். என் அப்பாவிடம் நான் டைரக்டராகணும். அசிஸ்டென்ட் டைரக்டரா என்னை சேர்த்துவிடுங்கன்னு கேட்டேன். அவரே என்னை அழைச்சுட்டு போய் மணிக்கணக்காக ஒரு இடத்தில் வெயிட் பண்ணினார். நான் தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டின்னு போய் நின்னு பேசறது ஈஸி. பட்… ஒரு அப்பாவா நான் காத்திருக்கணும் என்று சொன்ன அந்த மனுஷனுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்லணும் என்று நெகிழ்ந்தார் விஷால்.

என்னுடைய முதல் படமான செல்லமே படத்தை பார்த்துவிட்டு கவிப்பேரரசு வைரமுத்து சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது. இந்த பையன் நல்லா வருவான். அவன்கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்குன்னு டைரக்டரை கூப்பிட்டு சொன்னதாக எங்கிட்ட சொன்னாங்க. அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி என்ற விஷால், இதையெல்லாம் நல்ல சகுனம் என்று குறிப்பிட்டார். என்னை எல்லாரும் மதுரைக்காரன்னு நினைக்கிற அளவுக்கு பாண்டியநாடு வந்திருக்கு என்று விஷால் சொன்னதை நாம் நம்பியே ஆக வேண்டும்.

ஏனென்றால் இந்த படத்தை நான் பார்த்துட்டேன். படம் ஷியூர் ஹிட் என்று சொன்னவர் சாதாரண ஆள் இல்லை. தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார். இந்த விழாவில் கேயார் சொன்ன இன்னொரு விஷயத்தை நாடே கேட்டு இன்புற வேண்டியது அவசியம். இந்த விழாவுக்கு குஷ்பு வந்திருக்காங்க. ஒரு டிசிப்ளின் லேடின்னா நான் அவங்களைதான் சொல்வேன். ஏன்னா அவங்களுக்கு லோ பிபி இருக்கு. நான் அவங்களை வச்சு நிறைய படம் இயக்கியிருக்கேன். பி பி. நேரத்தில் அவங்க சோர்வா படுத்திருப்பாங்க. பட்… ஷாட் வச்சுட்டோம்னா அவ்வளவு பிரிஸ்க்கா வந்து கேமிரா முன்னாடி நின்னுடுவாங்க. எந்த சினிமா விழாவுக்கு கூப்பிட்டாலும், நான் வர மாட்டேன்னு அவங்க சொன்னதேயில்ல என்றார்.

விழாவில் பேசிய குஷ்பு, விஷாலை விஷி விஷி என்று அழைத்ததே ஒரு அழகுதான். இதனால் விஷிக்கும் கூட கொஞ்சம் குஷி…!

Vishal’s Pandia Naadu audio launched with much fan-fare

The audio launch of Vishal’s Pandia Naadu launched today with Producers’ Council Kayaar as Chief Guest. Kushboo, Vairamuthu amongst other glittering celebrities graced the event.

Speaking on the event, Vishal recalled the days his father had helped in helping him to enter cinema as an Assistant Director, and thanked him. He also said that poet Vairamuthu prophesied when he debuted with Challame. He said Vairamuthu sir had told the Vishal duty fully thanked Vairamuthu for the encouraging words.

Kayaar while speaking referred to Kushboo as a disciplinarian to the core. Despite having a low BP, she would go the floors when the ‘ready’ announcement comes, said Kayaar. He also said that Kushboo never failed to attend any cinema related functions, if invited.

Kushboo on her part wished Vishal and his team for the success of the film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இலங்கையில் ஃபேஸ் புக்குக்கு தடை? – ராஜபக்சே எச்சரிக்கை

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்‌சே கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான் நினைத்தால் பேஸ்புக்-யை இலங்கையில் தடை செய்வேன் என கூறியுள்ளார். புதன்கிழமை அன்று மகளிர் கல்லூரியில்...

Close