டி.இமான் யுகபாரதி கூட்டணி டமால்!

e

அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் கூட்டணி முக்கியம். இதை வெற்றிப்படங்கள் எல்லாமே நிரூபித்திருக்கின்றன. ஒரு ஹிட்டுக்கு பிறகு இதுதான் ராசி என்று அதையே பிடித்துக் கொண்டு தொங்குகிற அவஸ்தையும் உண்டு என்றாலும், கூட்டணியை பிரிப்பதற்கு துணிவதில்லை எவரும். இந்த நிலையில் யுகபாரதி- இமான் கூட்டணி பிரிந்து விட்டதாக தகவல்.

மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று சுமார் நாலைந்து படங்களில் இருவரும் இணைந்து தந்த பாடல்கள் அற்ப சொற்பம் இல்லை. அத்தனையும் தேன். இந்த கூட்டணி தொடர வேண்டும் என்றுதான் விரும்பினார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் காலத்தின் அலங்கோலம் இருவரையும் பிரித்துவிட்டதாம். எழுத்தா, இசையா என்பதில்தான் ஈகோ முட்டிக் கொண்டதாம் இருவருக்கும். இப்போதெல்லாம் ஒப்புக் கொள்ளும் புதிய படங்களுக்கு பாடலாசிரியர்களை மாற்றிவிடுகிறார் டி. இமான்.

எந்த தயாரிப்பாளரும் இது குறித்து அவரிடம் கேட்கதில்லை. ஏன்? இசை என்ற குதிரைக்குதான் வலு அதிகம். அதன் மீது பயணிப்பவர் பச்சை சட்டைக்காரராக இருந்தாலென்ன, சிவப்பு சட்டைக்காரராக இருந்தால்தான் என்ன என்கிற ரசனை கோட்பாடுதான்.

D. Imman – Yugabharathi combo parted ways?

D. Imman and Yugabharathi combination have given several hits including that of the recent Varuthapadatha Valibar Sangam. However it is observed of late, the music composer has changed the lyricist for his songs which has made one to wonder if the hit combination have parted ways(?) or is D. Imman trying different style of lyricist for his tunes. But the split seems to be apparent on the eyes.

No director or the producer is interested to ask the composer why he has changed the lyricist. As long as they get the hits from the composer, why to bother who writes the lyrics, may be their thinking!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தாவணியில் ஊக்கு…. மறைக்கப்பட்ட ஹிப்…. முன் ஜாக்கிரதை நயன்தாரா

காதலர் தினத்தன்று திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது உதயநிதியும் நயன்தாராவும் ஜோடியாக நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ ஆனால் இப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு ஜோடியாக வருவார்கள் என்று எதிர்பார்த்தால்,...

Close