டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வு அடுத்த (ஏப்ரல் மாதம்) 7-ந்தேதி நடக்கிறது.

துணை கலெக்டர்-8, போலீஸ் துணை சூப்பிரண்டு-4, வணிகவரித்துறை உதவி ஆணையர்-7, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள்-5, பதிவுத்துறை பதிவாளர்-1 உள்பட 25 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு முதன்நிலை தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 75 ஆயிரத்து 704 பேர் எழுதினார்கள்.

அவர்களில் 1,381 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். முதன்மை தேர்வு கடந்த வருடம் அக்டோபர் மாதம் 25,26, 27 தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வை 1.160 பட்டதாரிகள் எழுதினார்கள்.

இந்த தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தேர்வை எழுதியவர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் குரூப்-1 தேர்வு முடிவை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

குரூப்-1 மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. 25 பேர்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட உள்ளதால் தற்போது 60 பேர்களை தேர்வு செய்து உள்ளது.

இந்த 60 பேர்களும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முகத்தேர்வு அடுத்த( ஏப்ரல்) மாதம் 7-ந்தேதி சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

நேர்முகத்தேர்வுக்கு பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாலா பட பாடல் கதறி அழுத பிரகாஷ்ராஜ்

Reea பாலா இயக்கி வரும் தாரை தப்பட்டை படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் இசை என்பதை யாவரும் அறிவர். இந்த படத்திற்காக சுமார் 12 பாடல்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறாராம்...

Close