டுவிட்டரில் வங்கிச் சேவை: கோட்டக் மகிந்திரா வங்கி அறிமுகம்
அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள பேலன்ஸை தெரிந்து கொள்ளுதல், செக் புக் பெற விண்ணப்பித்தல், கடைசி பரிமாற்றங்களை தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட 21 வங்கிச் சேவைகளை டுவிட்டர் கணக்குகளைக் கொண்டே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும், டுவிட்டர் கணக்கை பயன்படுத்தி செய்யப்படும் வணிக பரிவர்த்தனைகளுக்கு சிறப்பு வெகுமதி புள்ளிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த புள்ளிகளை நாம் பல்வேறு டிஸ்கவுண்ட் ஆஃபர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டுவிட்டர் வங்கிக் கணக்கை நாமாகவே பேஸ்புக் அல்லது ஜிமெயில் மூலம் திறந்து கொள்ள முடியும்.
மேலும், ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் வங்கிக் கணக்கை திறக்கும் ஈ- கே.ஒய்.சி முறையையும் அறிமுகப்படுத்த உள்ளது.
கடந்த சில மாதங்களாக கோட்டக் மகிந்திரா வங்கி ஆன்லைன் சேமிப்பு கணக்கு வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.