டைரக்டர் ஆகிறார் இசைஞானி இளையராஜா!

காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு கையில் நெருப்பு சட்டியையும் வைத்துக் கொண்டு திரிகிற வேலைதான் ஒரு படத்தை இயக்குகிற வேலையும். ‘பூண்டு, வெங்காயம், புளி, மொளகா எதை சேர்த்தாலும் கோவம் வருமாம்… இதெல்லாம் வேணாம் கொஞ்ச நாளைக்கு’ என்று ஒதுக்கி வைத்துவிட்டு ஸ்பாட்டுக்கு வந்தாலும், மிளகாயாய் உரைத்து அப்பளமாக பொறியாமல் ஒரு டைரக்டரும் வீட்டுக்கு போக முடியாது.

இவ்வளவு கஷ்டமான வேலையை இவரால் செய்ய முடியுமா? படப்பிடிப்பில் இவரிடம் சிக்குகிற தொழிலாளிகளின் கதி என்னாகும்? என்பது போன்ற திடுக்கிடும் கேள்விகளை எழுப்பிவிடுகிறது பின்வரும் தகவல் ஒன்று. வேறொன்றுமில்லை, இசைஞானி இளையராஜா ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்.

தமிழ்சினிமாவில் படத் தயாரிப்பாளராக இருந்திருக்கிறார் ராஜா. பாடலாசிரியராக இருந்திருக்கிறார். கதையாசிரியராகவும் இருந்திருக்கிறார். ஆனால் ஒரு படத்தை இயக்குவது இதுவே முதல் முறை. ‘உங்களுக்கு எதுக்குங்கய்யா இவ்வளவு ரிஸ்க்கான பொறுப்பு? என்று நாசுக்காக கூட அவரிடம் கேட்டுவிட முடியாது என்பதால், ராஜாவின் ‘ஷாட் கட்’ சொல்லும் அழகை காண ஒரு கும்பலே காத்திருக்கிறது.

ஆனாலும் ஆலயத்தில் ஒழுக்கம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே? இந்த கதை இசை தொடர்பான கதையாம். காதுகளை மட்டுமே தீட்டி வைத்து காத்திருந்த நாங்கள் முதன் முறையாக கண்களையும் தீட்டிக் கொண்டு காத்திருக்கிறோம்…. வந்துருங்க சீக்கிரம்!

Maestro Ilayaraja to turn to direction

 

We all know the capabilities of Maestro Ilayaraja with whom the swara and laya are always in love so deeply that they don’t leave him for a moment. While that is a great strength for a music composer, there is also a small handicap for Ialayaraja – his emotions are his villain. A director of a film needs to undergo lots of trials and turbulence, strains and pressures, till the film gets released and accepted by the critics and audience. With the sort of temperaments Isai Gnani has, one wonders how it would be possible for him to endure such pressures and strains. Of course, we have seen him as a film producer as well as a story writer. But direction demands much more than the efforts of other professions. Why this prelude is because we hear that Ilayaraja is contemplating to turn to direction this time, for music based story. We are sure he would keep his emotions away during his debutant ship of a director, and focus his attention on the subject alone, ignoring the happenings around him. We all eagerly wait to see him win this time too!

Read previous post:
ஐயோ… மெல்லிசையா? – அலறி ஓடும் விஜய் சேதுபதி

லாட்டரி சீட்டுல லட்சம் விழுந்தா ஆளுக்கு பாதி என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குதான். ‘விழுந்தால்தானே’ என்கிற அலட்சியமும் கூடவே சேர்ந்து கொண்டால், அந்த பாதியும் முக்காலாக மாறும். அப்படிதான்...

Close