டைரக்டர் ஷங்கரின் அட்ராசிட்டி… – ‘ஐ’ தயாரிப்பாளர் அழுகை!
பிள்ளையார் மட்டும் ‘பெரிசா’ கொடுக்கணும், ஆனால் கொழுக்கட்டை மட்டும் கோழி முட்டை சைஸ்ல இருந்தா போதும் என்று நினைப்பது எவ்வளவு தப்போ, அவ்வளவு தப்புன்னு ஒரு விஷயத்தை பற்றி சிரித்தும் சிலாகித்தும் வர்ணித்துக் கொண்டிருக்கிறது மரியாதைக்குரிய கோடம்பாக்கம்ஸ்…
டைரக்டர் ஷங்கர் ஐ என்ற படத்தை எடுத்து வருகிறாரல்லவா? இதற்கான செலவு உத்ரகாண்ட் வெள்ளம் போல பணத்தை அடித்துக் கொண்டு ஓடுகிறதாம். பூச்சி பொட்டுகளுக்கு அந்துருண்டை வாங்கினால் கூட, அதையும் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்கிற அளவுக்கு காஸ்ட்லி என்கிற பல்ப் வெளிச்சம் கண்ணை பறிக்கிறதாம். இந்த செலவையெல்லாம் ஷங்கர் பட பிசினசோடு ஒப்பிட்டால் எல்லாமே சாதாரணம் என்றாலும், தேவைக்கு செஞ்சா செலவு, தேவையே இல்லாம செஞ்சா வெட்டி செலவு என்கிற விமர்சனமும் கூடவே வருமல்லவா?
அப்படிதான் ஒரு விஷயத்தில் வந்திருக்கிறது. கதைப்படி ஒரு பூந்தோட்டத்தை கனவு கண்டுவிட்டாராம் ஷங்கர். இதற்காக வேறொரு தோட்டத்தை தேடி உலகம் சுற்றுவது கூட எளிது. ஆனால் அதே போன்றொரு தோட்டத்தை ஃபிரஷ்ஷாக பயிரிட்டு விடுங்கள் என்று உத்தரவே போட்டுவிட்டாராம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம். அவரே சொல்லிவிட்ட பிறகு அப்பீல் ஏது?
கொடைக்கானல் பக்கத்தில் நாலைந்து ஏக்கரை வளைத்துப் போட்டு அதில் பிரமாண்டமாக ஒரு பூந்தோட்டத்தை வளர்த்து வருகிறார்கள். அது எப்போ வயசுக்கு வந்து, இவர் எப்போது அங்கு யூனிட்டோடு போய் இறங்கி பூ-ப்பெய்தல் சடங்கு நடத்தப் போகிறாரோ, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் என்கிறார்கள்.
எல்லாத்தையும் விட பெரியதுதான் யானையோட தும்மலும்… அனுபவிங்க, ஆனந்தப்படுங்க!
Director Shankar develops ‘flower garden’ for ‘Ai’
Director Shankar known for grandeur in his films without worrying for the costs as long as the producers don’t complain. Yes, when compared to the business he would get for his film, it is pea-nuts. At the same time one should also be aware cost-cutting is the ‘ring-tone’ for Indian economy. Also, if it gets results fast, then one can see some merit in incurring a cost. But what about this one? Shankar has told Ascar Ravichandran to develop a flower garden for the film Ai. Ravichandran without hesitation has arranged developing a flower garden at Kodaikanal. But the question here is when it will grow as a colour-ful garden and when will Shankar finish off his film? Well one may say being an intelligent and smart director, Shankar may also aware of this, but what we really are puzzled at, is why he is doing such a thing?