ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் வழங்கும்  பிரேம்ஜி –  அத்வைதா  – லீமா நடிக்கும்  “ மாங்கா “

ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.கே.சக்திவேல் தயாரிக்கும் படம்   “ மாங்கா “ இந்த படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அத்வைதா, லீமா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் இளவரசு, ரேகா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், தென்னவன், ஷாம்ஸ், வெங்கல்ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  செல்வா.ஆர்.எஸ்

இசை   –   பிரேம்ஜி அமரன்

படத்தொகுப்பு   –   சுரேஷ்அர்ஸ்

கலை    –  Dr.ஸ்ரீ

நடனம்    –  அஜெய்ராஜ்

சண்டை பயிற்சி    –   மிரட்டல்செல்வா

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ஆர்.எஸ்.ராஜா.

தயாரிப்பு   –  பி.சி.கே.சக்திவேல்

படம் பற்றி இயக்குனர் ஆர்.எஸ்.ராஜாவிடம் கேட்டோம்..

இந்த படத்தில் சிவாவாக வரும் பிரேம்ஜி தன்னை ஒரு பெரிய விஞ்ஞானியாக நினைத்துக் கொண்டிருக்கும் அடி முட்டாள். இவனுடைய வாழ்நாள் குறிக்கோள் தானே சொந்தமாக ராக்கெட் தயாரித்து அதன் மூலம் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைத்து மக்களை காக்க வேண்டும் என்பதுதான்.

இவனுடைய முட்டாள் தனமான கண்டுபிடிப்புகளால் எல்லா மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இவனுடைய கண்டுபிடிப்பால்1950  காலகட்டத்தை சேர்ந்த பாகவதர் (பிரேம்ஜி) யை சந்திக்கிறான். இருவருக்குள்ளும் கடும் போட்டி ஆரம்பிக்கிறது. இருவரில் யார் ஜெயித்தார்கள், சிவா ராக்கெட் அனுப்பி ஓசோன் ஓட்டையை அடைத்தானா? என்பதே திரைக்கதை என்றார் இயக்குனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிவன் வர்றாரு. சித்தர் வர்றாரு. ஆனாலும் இது காதல் கதை! கண்ணு கட்டுதப்பா கமரகட்டு…!

‘பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை தயாரித்த சந்திரசேகரன், அதற்கப்புறம் சுமார் ஐம்பது கதைகளையாவது கேட்டிருப்பார். ஆனால் அவருக்கு பிடித்த கதை என்னுடையதுதான்...!’ இப்படி...

Close