தடபுடல் சன்னிலியோனுடன் லொட லொட பாலாஜி?
ஆர்.ஜே.பாலாஜியின் வாயில் விழுந்து நோயில் புரண்டவர்கள் கோடம்பாக்கத்தில் ஏராளம். அதுவும் இவரது சினிமா விமர்சனத்தை கேட்கிற இயக்குனர்கள், கால் கிலோ இஞ்சியை தட்டி, கடவாயில் அடக்கிக் கொண்டாலும் ஜீரணிக்க முடியாமல் அவஸ்தை படுவார்கள். அப்படிப்பட்டவருக்கு அதிர்ஷ்டத்தை பார்த்தீங்களா? சன்னிலியோனுடன் ஒரு ஆட்டம் போட்டிருக்கிறாராம். அகில உலக அரிப்பெடுத்தவர்கள் சங்கத்தின் சார்பில் சன்னி லியோனுக்கு சிலை வைத்தாலும் ஆச்சர்யப்பட தேவையில்லை. ஏனென்றால் அவரது தேவை அப்படி…
அப்படியாகப்பட்ட சன்னிலியோனுடன், தென்னகத்து லொட லொட பாலாஜியும் நடிக்கிறார் என்றால் அது எவ்வளவு முக்கியமான விஷயம்? தமிழ்நாட்டுக்கு சன்னி வந்தால், தமிழ்நாட்டுக்கே ஜன்னி பிடிக்கும் என்பதை அறிந்து அப்படியே அவரை கோவாவில் வைத்து கும்மாங்குத்து போட வைத்தார்கள் ‘வட கறி’ படத்திற்காக. இப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக தனது பட ஹீரோயின்கள் எல்லாருடனும் காதல் வயப்படும் ஜெய், சன்னியிடம் மட்டும் ஸாரிம்மா என்று நாலடி தள்ளியே இருந்தார்.
இதற்கிடையில் சன்னியின் ஆட்டத்தில் நடு நடுவே ஜெய்யும் பாலாஜியும் புகுந்து ஆடுகிற காட்சி வருகிறதாம். அதற்காக ஏகப்பட்ட மெனக்கெடல்களுடன் ஆடி முடித்த இருவரும் ஒரு விஷயத்தை ரொம்பவே மூடி மூடி வைக்கிறார்கள். ஐயய்யோ… அது இல்ல. இந்த ஆட்டத்தின் போது சன்னி தாவணி கட்டியிருந்தாராம். அந்த விஷயத்தைதான் வெளியில் சொல்லாமல் மறைக்கிறது இந்த பொல்லாத நடிகர்களின் பூட்டாத வாய்.
RJ Balaji has shaken legs with Sunny Leone
Dhayanidhi Alagiri producer of Vadacurry has made a scoop of sort by casting Bollywood star Sunny Leone for an item number in the film. They shot the dance sequence at Bangkok for which Jai and other members of the crew flew to Bangkok. It is heard that RJ Balaji is also part of the song sequence, and he has also shaken legs with Sunny Leone. It is also heard that Sunny was wearing ‘half saree’ for the song. Dhayanidhi has tweeted few days ago that the film has been wrapped up and post production work to begin soon.