தனது பிறந்தநாள் அன்று தாய்க்கு கோயில் கட்டும் ராகவா லாரன்ஸ்

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நாளை (29.10.2014) தனது பிறந்த நாள் அன்று தனது தாய் கண்மணிக்காக கோயில் கட்ட தீர்மானித்து இருக்கிறார். அதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். அவரது தாயாரின் உருவ சிலை ராஜாஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கும் பணியை துவங்கி உள்ளார்.

அதை பற்றி அவர் கூறியதாவது….

தாயின் மனதே ஒரு கோயில் தான் அந்த தாய்க்கு அந்த தாய் வாழும் போதே கோயில் கட்டி பெருமை படுத்தவேண்டும் என்பதே எனது ஆசை. என் தாய் மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ நான் இறந்த இடத்தில் புல் முளைத்திருக்கும் எல்லோருக்கும் கண்ணெதிரே தெரியும் ஒரே தெய்வம் பெற்ற தாய்தான். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற உயரிய கருத்தை மெய்ப்பிக்க வேண்டும். என்ற ஆசையால் இந்த கோயிலை கட்ட உள்ளேன்.

என் தாய்க்கு மட்டும்மல்ல உலகத்தில் உள்ள எல்லா தாய்க்கும் நான் இதை சமர்ப்பிக்கிறேன்.

ஆப்படிப்பட்ட அந்த தாய் என்னை வளர்ப்பதற்காக பட்ட கஷ்டங்களை ஒரு புத்தகமா அடுத்த வருடம் எனது பிறந்த நாளான இதே தேதியில் அந்த கோயில் திறப்பு விழாவில் வெளியிட உள்ளேன் என்றார் ராகவா லாரன்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அரசு தரும் இலவசத்தை குத்திக் காட்டுகிறாரா விஜய்?

வாய் சும்மாயிருந்தாலும், வழிமுறை சும்மா விட்டால்தானே? கத்தி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் கோவைக்கு சென்றிருந்தார் விஜய். அங்குள்ள இந்துஸ்தான் கல்லுரியில் மீட்டிங். அங்கு நலத்திட்ட உதவிகள்...

Close