தனியார் வங்கி கடன் தந்தது… தயாரிப்பாளர் ஆகிறார் விஜய் சேதுபதி

சாமானியர்கள் லோன் கேட்டால் சகட்டுமேனிக்கு அலையவிடும் வங்கி அதிகாரிகள் சினிமாக்காரர்கள் லோன் கேட்டால் மட்டும், ‘இந்தாங்க…’ என்கிறார்கள் தாராளமாக. அப்படி சொல்லி சொல்லி, சொல்லியதோடு நிறுத்திக் கொள்ளாமல் அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரமாக இருந்த ஒருவரை சிறைக்கே அனுப்பி வைத்தது சினிமாக்காரர்களின் ஒற்றுமை நாமம். ஒரு விழாவில் இவரை நினைவு கூர்ந்த தயாரிப்பாளர் கேயார், சினிமாவுலகம் அவரால் நிறைய பயன் அடைந்தது. ஆனால் அவரை இன்று சீண்டக்கூட ஆள் இல்லை என்றார் கவலையோடு. இவர் மட்டும்தான் பண்டிகை தினங்களில் மறக்காமல் அவர் வீட்டுக்கு போய் தனது நன்றியை தெரிவித்துவிட்டு வருவாராம்.

சரி… இந்த கதை நமக்கெதுக்கு?

விறுவிறுவென உச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிற விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்கிற கனவு நிறையவே இருக்கிறது. அதற்காகதான் சங்குதேவன் என்ற படத்தை இன்னொரு தயாரிப்பாளரின் உதவியோடு ஆரம்பித்தார். ஆனால் படத்தின் இயக்குனர் கொடுத்த குடைச்சலில் அந்த படத்தையே தள்ளிப் போட்ட விஜய் சேதுபதி, இப்போது ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தை துவங்கவிருக்கிறார். இதுவும் அவரது சொந்த தயாரிப்பில் உருவாகும் படம்தானாம்.

இந்த முறை அவர் வேறு யாருடைய தயவையும் நாடாமல் தனியார் வங்கி ஒன்றை நாடி ஒன்றரை கோடி கடன் கேட்டிருக்கிறாராம். பேப்பர்கள் விறுவிறுப்பாக மூவ் ஆகி கொண்டிருக்கின்றன. காகிதம் கை கூடி வரும்போது கரன்ஸியும் கை கூடும். எல்லாம் வந்ததும் படத்துவக்க விழாதான்.

இந்த முறையாவது அவரது கனவு நிறைவேறட்டும்….

Vijay Sethupathi to turn to production

Kollywood is shining now with people are overwhelmingly join films in one way or the other, more importantly in producing films. Though small budget films are having a field day, film industry will prosper further if proper guidance and counselling are given to the new producers who are new to the field. Having said that, we are glad to report that fast and upcoming hero in Kollywood, Vijay Sethupathi is drawn in to producing film again. Earlier he joined hands with another producer to begin his Sangudevan which he had abandoned mid-way for his own reasons. However the burning interest in him did not die down, as he is preparing himself to produce a film on his own without the help of others.

However this time he has opted to avail a bank loan to produce his film which is tentatively titled as ‘Orange Mittai’. The loan is under process swiftly. Once the bank passes on the cash to his account, it is learnt, Vijay Sethupathi would organize an event to launch his new film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பெருகி வரும் பவர் ஸ்டார்கள்

வட மாவட்டம் ஒன்றில் ஒரு தனியார் பேருந்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது. ‘கவனமாக இருங்கள்... உங்கள் பக்கத்திலிருப்பவர் திருடராகக்கூட இருக்கலாம்’ என்று. சினிமாவின் பிறப்பிடம் என்று கருதப்படும் கோடம்பாக்கத்திலும்...

Close