தனுஷ் சிம்பு இணைந்து நடிக்கணும்… செல்வராகவன் ஆசையில் மண்!

ஆயிரம் இருந்தாலும் நயன்தாரா விஷயத்தில் சிம்புவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தனுஷுக்கு இல்லை. இத்தனைக்கும் யாரடி நீ மோகினி படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள். அதற்கப்புறம் நயன்தாராவை தொடுவதற்கு சந்திராயன் உதவி தேவைப்படுகிற அளவுக்கு உச்சத்திற்கு போய்விட்டார் அவர். மார்க்கெட் நொண்டியடிக்கிற விஷயத்தில் தனுஷும் சிம்புவும் ஒரே லெவலில்தான் இருக்கிறார்கள். இருந்தாலும், கிசுகிசுவின் பிதாமகனானவர் சிம்புதான். இப்பவும் பாண்டிராஜ் இயக்குகிற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிற அளவுக்கு எப்படியோ இருவருக்கும் நடுவில் விட்டகுறை, தொட்டகுறை இருக்கிறது. அது தனுஷுக்கு இல்லை என்பதுதான் நாம் சொல்ல வரும் விஷயம்.

வெகு விரைவில் சுராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் தனுஷ். தனக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை கேளுங்க என்றாராம் தனுஷ். தற்போது கால்ஷீட் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்த நயன்தாரா, அதற்கான காரண காரியங்களையும் புட்டு புட்டு சொல்லிவிட்டாராம். அப்பவும் தனுஷின் மனசில் நயன்தாராவின் கால்ஷீட்டை பெறுவதற்கான குறுக்கு வழிகள் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இதற்கிடையில் செல்வராகவன் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறாரல்லவா? அதில் தனுஷையும் நடிக்க வைத்தால் மீண்டும் தனது மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு வந்துவிடலாம் என்று கணக்கு போட்டாராம். அப்படியொரு அறிவிப்பு வந்தால் அந்த படத்திற்கான வரவேற்பு எப்படியிருக்கும் என்பதை கரன்ஸி கண்களால் நோட்டமிட்ட செல்வாவுக்கு அன்பு தம்பி தனுஷ் கொடுத்தது ஆசை தோசை அப்பளம் வடையைதான்.

உங்களுக்கு வேணும்னா அப்படியொரு எண்ணம் இருக்கலாம். எனக்கு அது சுத்தமா இல்லை. சிம்புவை வெளியில் நண்பனா பார்க்க முடியும். சினிமாவில் வில்லனாகக் கூட பார்க்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதனால் செல்வா அப்செட் என்கிறது கோடம்பாக்கத்தின் சந்து பொந்து தகவல் மையம்.

Selvaa proposes, Dhanush disposes!

Dhanush and Simbu are friends, at least they claim to be so. Though their market is unsteady today, still both have their own standing in the market with Dhanush marginally high due to his Bollywood’s presence. However it cannot be said in Kollywood as Simbu still reigns with his antics and a subject for gossip mongers which always keep him in the lime light amongst his fans.

Director Selvaraghavan who is commencing his next film with Simbu from March, had an serious thought of roping in Dhanush, his younger brother in the film, so that the success percentage would be much higher, which would help him to tide over his financial mess while at the same time bring him to prominence once again after the disastrous Irandam Ulagam. He expressed his desire to Dhanush who simply walked away with a stern ‘NO’. He is reported to have told his brother that he cannot act with Simbu at any circumstances in any film. Though the response was on the expected lines, the sternness in the response disappointed his plans, say Kollywood sources.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வணங்குகிறோம் சமுத்திரக்கனி…

அண்மையில் 'ஆஹா கல்யாணம்' என்ற படத்தின் அறிமுக விழா நடந்தது. படத்தின் ஹீரோ நானியும் டைரக்டர் சமுத்திரக்கனியும் நல்ல நண்பர்கள். எனவே இந்த விழாவில் கலந்து கொண்டார்...

Close