தனுஸ்ரீ தத்தாவோட படத்தை வெளியிட விட மாட்டோம் – கோடம்பாக்கத்தில் குமுறல்!
‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்திருந்த தனுஸ்ரீ தத்தாவை யாருக்காவது நினைவிருக்கிறதா? அதற்கப்புறம் கூட அவர் சாமியாராக போய்விட்டார் என்றும் மொட்டை அடித்துக் கொண்டார் என்றும் ஏகப்பட்ட அக்கப்போர்கள் மீடியாக்களில் உலவி அவரை நிரந்தர சாமியாராகவே ஆக்கினார்களே அவரேதான்? அதே தனுஸ்ரீ தத்தா நடித்த இந்திப்படம் ஒன்றை தமிழில் டப்பிங் செய்து வெளியிடவிருக்கிறார்கள்.
ஊர்ல எவ்ளோ படம் சீண்டப் படாமலே கிடக்கிறது. இவர் நடித்த படத்தை எதற்கு வெளியிடுகிறார்களாம்? அதுவும் காவியை கட்டிக் கொண்டு கமண்டலத்தை தேடிப்போன ஒருவரின் படத்தை எதற்காக வெளியிட வேண்டும்? விஷயம் இல்லாமலா? இந்த படத்தில் தாறுமாறாக நடித்திருக்கிறாராம் அவர். ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் தியேட்டர்களில் படத்தை வெளியிட்டால், கை மேல காசு என்று முடிவு செய்தவர்களின் கால்குலேஷன் இந்த முயற்சி.
இப்போது அந்த படத்தை வெளியிட முடியாமல் குறுக்கே கட்டையை போட்டிருக்கிறார் ஒரு தயாரிப்பாளர். ஏன்? ஏன்? ஏன்? ஒரே நேரத்துல இத்தனை ஏனுக்கு காரணம், அந்த படம் வராதா என்று ஏங்குகிற லட்சக்கணக்கான ரசிகர்களின் சார்பான கேள்வி என்பதால்தான்.
விஜய் வசந்த் நடிக்கும் படத்திற்கு ‘என்னமோ நடக்குது’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. தனுஸ்ரீ நடித்திருக்கும் படத்தின் பெயர் ‘இந்த வீட்ல என்னமோ நடக்குது’. இந்த சிறு வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாத பொதுமக்கள் விஜய் வசந்த் நடிக்கும் படத்தைதானே வண்டி வண்டியாக கழுவி ஊற்றுவார்கள்? டைட்டிலை மாத்து. இல்லேன்னா வழக்கு போடுவேன் என்று இந்த வீட்ல என்னமோ நடக்குது பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்களாம்.
என்னமோ நடந்துட்டு போவட்டும்…. படத்துலேர்ந்து அந்த தனுஸ்ரீயோட விசேஷ போஸ்களை மட்டும் அனுப்பி வைங்க, பார்த்துட்டு பரவசம் எய்த இந்த ஊரே கூடி ரெடி…. ரெடி…. !
Tanushree Dutta’s dubbed film faces title clash
Tanushree Dutta who was seen in Vishal’s Theeratha Vilaiyattu Pillai has done a Bollywood film with lot of glamour quotients. Wanted to capitalize on those adventurous scenes, a producer dubbed it with a title ‘Indha Veetla Ennamo Nadakkuthu’. The title of Vijay Vasanth’s upcoming film is titled as ‘Ennamo Nadakkuthu’. Tanushree’s dubbed film will be a double edged sword, it can make or break Vijay Vasanth’s film. However the producer of Vijay Vasanth’s film has issued a notice to the producer of ‘Indha Veetla Ennamo Nadakkuthu’ to change the title of the film or they would file a case in the court.