தமன்னாவை கார்த்தியோடு சேர்க்காம விடமாட்டோம் அடம் பிடிக்கும் இயக்குனர்கள்!

அஜீத்தும் விஷ்ணுவர்த்தனும் அட்டிமேட் பிரண்ட்ஸ். ரீமேக் பில்லா, ஆரம்பம் என்று தொடர்ந்து விஷ்ணுவர்த்தனுக்கு கால்ஷீட் வழங்கி வந்த அஜீத், இப்போதெல்லாம் அவருக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டதாக தெரிகிறது. கவுதம் மேனன், சிறுத்தை சிவா என்று மீண்டும் மீண்டும் ரிப்பீட் அடிக்க விரும்பும் அஜீத், விஷ்ணுவர்த்தனை கழற்றிவிட்ட தகவல், இன்னும் கோடம்பாக்கத்தின் சந்து பொந்துகளை முழுமையாக எட்டவில்லை.

எந்த டயர் பஞ்சர் ஆனாலும் ஓடுற வண்டிய நிறுத்த முடியாது என்பதற்கேற்ப, இப்போது தனது கூட்டணியை கார்த்தியுடன் வைத்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். வெகு விரைவில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம். சமீபகால சறுக்கல்களிலிருந்து விடுபட்டேயாக வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் கார்த்தி இவரை கசக்கி பிழிந்து கதையை பட்டி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, விஷ்ணுவர்த்தன் படத்தில் கட்டாயம் இருப்பார் என்று கருதப்படும் நயன்தாராவும் இந்த புதிய படத்தில் இல்லையாம். கார்த்திக்கு ஜோடியாக நடிக்க சிறுத்தை சிவா தமன்னாவை அழைத்திருக்கிறார். நானும் தமன்னாவையே கூப்பிடட்டுமா என்று கேட்டு வருகிறாராம் விஷ்ணு. எப்படியோ… ஹிஸ்ட்ரி புக்குக்கு அட்டை போடாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.

Director Vishnuvardhan too opts for Tamannah for Karthi

It is now heard that Vishnuvardhan who teamed up with Ajith is now planning to direct a film which has Karthi as hero. Karthi in order to resurrect his sagging career graph is looking for opportunities wherever available. He saw Vishnu’s potential through Billa and Arrambam and has opted to work with him. He is presently fine tuning the script given by Vishnu.

Meanwhile, director Siva who has given block buster with Veeram is planning to rope in Tamannah for his film with Ajith again, it is heard, though there is no official word about it. Ajith’s focus however is presently on Gautham Menon’s film. Vishnu who wanted Nayan to pair with Karthi could not rope her in and now prefers to cast Tamannah opposite to Karthi.

With so many players entering the arena Tamannah seems to be happy with stars now.

Read previous post:
நயன்தாராவை கர்ப்பிணியாக பார்க்க மனசில்லாத டைரக்டர்

வாழ்க்கையில் ஒரு முறையாவது ரஜினியோட நடிச்சுரணும் என்று இளம் நடிகர்கள் விரும்புவதை போல, நயன்தாராவுடன் சேர்ந்து நடிச்சுரணும் என்று இளம் ஹீரோக்கள் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு...

Close