தமிள் ரசிகர்கள் குண்டு குண்டுன்னு கேட்குது… தளதள சஞ்சனா சிங் சந்தோஷம்

பூக்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. பொற்றாமரைக்குளம் அப்படியேதான் இருக்கிறது. நமீதா போனால் என்ன? ஒரு சஞ்சனா சிங் வந்துவிட்டு போகட்டுமே என்கிற பெரிய மனசுக்காரர்கள் இருக்கிற வரைக்கும் பூக்களுக்கும் பஞ்சமில்லை. குளமும் வற்றப் போவதில்லை. எல்லாரையும் பெரிய மனசுக்காரர் ஆக்கிக் கொண்டிருக்கும் அந்த பெரிய லிஸ்ட்டில் இப்போது வந்திருக்கும் சஞ்சனா எப்படி? அழகோ அழகு. நெடு நெடு உயரம். கொஞ்சம் தமிழ். அதில் நிறைய தப்பு என மனசை கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்.

இன்னைக்கு என்னோட பிறந்தநாள். பொதுவா நான் இந்த தினத்தை அநாதை ஆசிரமத்துல கொண்டாடுற வழக்கம். இன்னைக்கு உங்களை சந்திக்கிறேன் என்றார் வந்திருந்த பிரஸ்காரர்களுக்கு மத்தியில். குழந்தை தெரியாம சொல்லுது. விட்டு பிடிப்போம்ங்கிற மனசோடு அமர்ந்திருந்த யாரும் இந்த சொற்றொடருக்காக வருந்தவில்லை. நான் தமிழ்சினிமாவுல எப்படியாவது ஜெயிக்கணும்ங்கற வெறியோட வந்துட்டேன் ஆனால் ரெண்டு வருஷம் படாத பாடு பட்டுட்டேன். (படுத்துன பாவிங்க யார் யார்றா?) யாரை அப்ரோச் பண்றதுன்னு தெரியல. ஆளு வேற ரொம்ப ஸ்லிம்மா இருந்தேனா? ஒருத்தரும் வாய்ப்பு தரல.

அப்புறம்தான் தெரிஞ்சுது, இங்க கொஞ்சம் குண்டு குண்டுன்னு இருந்தால்தான் வாய்ப்பு தர்றாங்கன்னு. அதற்கப்புறம் நல்லா சாப்புட்டு நான் இப்படி ஆகிருச்சு. இப்ப நிறைய வாய்ப்பு வருது. நல்லவேளை ஜான் சார் கிடைச்சுது. இல்லேன்னா நான் இன்னும் சுத்திகிட்டுதான் இருந்திருக்கும் என்றார் கொஞ்சு தமிழில்.

இவ்ளோ உயரம் இருக்கீங்களே, உங்களோட ஜோடியா நடிக்கணும்னா எல்லாருக்கும் சிரமமா இருக்குமே என்ற கேள்விக்கு மட்டும் டக்கென்று உஷரானது பார்ட்டி. ஐயய்யோ… நான் நார்மல் ஹைட்டுதான். ஹீல்ஸ் போட்ருக்கு. கழட்டுனா தெரியும் உங்களுக்கு என்றவர், அப்படியே எழுந்து நின்று உயரம் காட்டியதெல்லாம் டூ மச். (நமக்கெதுக்கும்மா இந்த அளவெல்லாம்) சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் செய்யறதுக்கு ரெடி. ஆனா ஹீரோயினா நடிக்கறதுக்குதான் நான் வந்தேன். அதுக்கேற்ற மாதிரி ரெண்டு படம் வந்திருக்கு. அந்த படங்கள்ல நான் ஹீரோயினா நடிக்கிறேன். இதுதான் நான் சொல்ற பிரேக்கிங் நியூஸ். எழுதிக்கோங்க என்றார். (ரயில்ல குண்டு வெடிக்கறதும், நடுரோட்ல வெட்டிக் கொல்றதும் தானே பிரேக்கிங் நியூஸ்னு பழகியிருக்கோம். இதுவும் நல்லாதான் இருக்கு)

தமிழ்ல ஜெயிக்காம வேற லாங்குவேஜ் போறதா ஐடியா இல்ல. நல்லா எழுதுங்க, நாலு படம் கிடைக்கற மாதிரி என்றார். நமீதாவுக்கு நல்ல ரீ ப்ளேஸ்மென்ட் நீங்கதான். ஜட்ஜா மட்டும் போயிராதீங்க!

Sanjana Singh wants to be famous in Kollywood!

Sanjana Singh, the new import from north, in an interaction with the media has said that she wanted to be successful and famous in K-town. She said that since last two years she had gone round the town approaching for a chance, but was told that she looked slim. Hence she has undergone body regimen with good diet, to make her flabby. She is now acting as female lead in two films, she confided. She said that she wanted to be successful here in Tamil film industry. She would not turn to other film industry without achieving her ambition, she reiterated. Though her Tamil was not up to the mark, at least she made efforts to learn the language which needs to be appreciated.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
SOUTHERN INDIA CINEMATOGRAPHERS’ ASSOCIATION NEWS & STILLS

[nggallery id=126]

Close