தமிழ்நாட்டு நமீதாவானார் பஞ்சாப் சினேகா!
பஞ்சாப் சினேகா என்று கொண்டாடப்படும் ஒரு நடிகையை தமிழ்நாட்டு நமீதாவாக்கி திண்டாட விட்டிருக்கிறார் வெங்கட்பிரபு. அந்த ஊர்ல பல படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடிச்சிருக்கிறார் மாண்டி தாக்கர். புடவை இல்லேன்னா சுடிதார். இது தவிர வேறு காஸ்ட்யூம்ல அவர் நடிச்சதேயில்ல. பிரியாணி படத்தில் இப்படியொரு கேரக்டரை உருவாக்கினதும், அதுக்கு பொருத்தமான நடிகையை தேடினோம். அப்பதான் மாண்டியோட போட்டோ கிடைச்சுது. உடனே அழைச்சுட்டு வந்து நடிக்க வச்சோம் என்றார்.
படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அச்சம் வந்துவிட்டதாம் மாண்டிக்கு. யப்பா… தப்பி தவறி கூட இந்த படத்தை எங்க ஊர்ல ரிலீஸ் பண்ணிடாதீங்க. அங்கெல்லாம் என் மேல பெரிய மரியாதை வச்சுருக்காங்க என்று அவர் கேட்டுக் கொள்கிற அளவுக்கு உரிச்சு உப்பு கண்டம் போட்டுவிட்டார் வெங்கட். படத்தில் நடித்தவரே பஞ்சராகி நிற்கிறார் என்றால் படத்தில் வருகிற யூத் சமாச்சாரங்கள் எப்படியிருக்கும்? அதுவும் கார்த்தி வுமனைசராக நடிக்கிறாராம். இது போதாதா? சென்சாரே பேதலித்துக் கிடக்கிறதாம். ஏ – தான் தருவோம் என்று அவர்கள் அடம் பிடிக்க, யூ – கொடுக்க மாட்டீங்களா என்று இவர்கள் மன்றாட, படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பிவிட்டார்கள்.
சில பல கட்டுகளுக்கு பிறகு, லேசு பாசான புத்துர் கட்டோடு படத்திற்கு U/A கிடைக்கலாம் என்பதுதான் இப்போதைய யூகம். அதிருக்கட்டும்… நான், வெங்கட்பிரபு, பிரேம்ஜி எல்லாம் ஒண்ணா ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம். அப்ப கூட இப்படி பழகினதில்ல. இந்த படத்தில் அப்படி பழகிட்டோம். அதுவும் பிரேம்ஜி ஜோக் அடிச்சுகிட்டேயிருப்பார். நாங்க சிரிச்சுகிட்டேயிருப்போம் என்றார் கார்த்தி. மக்களையும் சிரிக்க வச்சுட்டா படம் டாப். ரிசல்டுக்கு இம்மாதம் 20 ந் தேதி வரைக்கும் வெயிட் பண்ணுங்க பிரியாணி பிரியர்களே….
Venkat Prabhu’s Briyani at Revising Committee!
Venkat Prabhu is one director who will be very explicit in conveying what he wanted to say in his films. People generally accept his style of presentation. However this time, he is facing a difficult task with censors. The reasons being he has upped the glamour quotient in the film. Perhaps it may be required for the film as we are told that Karthi dons the role of a womaniser in the film.
To give much more pep to the content, Venkat has brought in a young girl, Monty, from Punjab to don a special role in the film. She seems to have told the team not to release the film in her area in Punjab as she never used such costumes and may spoil her image there. When an actor says so, what one can expect from censors?
Censors who earlier gave the film A certificate, with much persuasion from the makers agreed for UA finally, but did not budge for U from the makers. Now the film has gone to Revising Committee for a final decision?