தமிழ்படவுலகில் வீசப்போகும் தாவணி காற்று!
தமிழ்சினிமா என்ற ஜீரா டப்பிக்குள் இன்னும் எத்தனை குளோப் ஜாமூன்களைதான் கொட்டுவார்களோ? நயன்தாரா, அசின், லட்சுமிமேனன், நஸ்ரியா என்று கொட்டிக்கிடக்கும் இனிப்பு ஜீராவுக்குள் இன்னொன்றாக விழுந்திருக்கிறார் ஆராத்யா. கொச்சின் எர்ணாகுளம் சொந்த ஊராக கொண்டிருக்கும் ஆராத்யாவை ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் போதே ‘வாங்க நடிக்கலாம்’ என்று அழைத்து வந்திருக்கிறார் வி.ஆர்.பி.மனோகர். ‘தாவணி காற்று’ படத்தின் இயக்குனர்.
பள்ளிக்கூடம் போகாமலே… பாடங்களை கேட்காமலே… பாஸ் பாஸ்சா? என்று முதல் கேள்வியிலேயே படிப்பு பற்றி கேட்டால் குழந்தை என்னதான் செய்யும்? கொஞ்சம் மிரளதான் செய்தது. இருந்தாலும் மலையாளத்தையும் தமிழையும் மிக்சியில் போட்டு கலக்கி பேச ஆரம்பித்தார்.
‘நான் படிப்புல சுட்டின்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க? இருந்தாலும் மனசுல நடிக்கணும்ங்கிற ஆசையும் இருந்திச்சு. அந்த நேரத்தில்தான் ‘தாவணி காற்று’ படத்திற்காக அழகான ஹீரோயினை தேடிக் கொண்டிருந்தாராம் மனோகர் சார். என் போட்டோ கிடைச்சு என்னை பார்க்க எர்ணா குளத்துக்கு வந்திருந்தார். சில வசனங்களை சொல்லி நடிச்சு காட்ட சொன்னார். பிடிச்சிருந்ததும், அவர் இதற்கு முன் இயக்கிய குறும்படங்களின் டி.வி.டி களை கொடுத்து ‘ஏதாவது ஒண்ணு போட்டு பாருங்க. அதுக்கு பிறகு பேசுவோம்’னு சொல்லிட்டு போய்விட்டார். அதிலிருந்து ஒரு படத்தை போட்டு பார்க்க ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்திலேயே சாருக்கு போன் பண்ணிட்டேன், ‘சார்… நான் ரெடி. எப்ப ஷுட்டிங் பேகாலாம்’னு?
அதற்கப்புறம் நேரில் வந்தார். கதையை சொன்னார். இந்த கதையில் நான் பேங்க் ஊழியரா நடிக்கிறேன். எனக்கும் போட்டோ ஸ்டுடியோ வச்சுருக்கிற பையனுக்கும் காதல்னு போகுது படம். காதல், சஸ்பென்ஸ், த்ரில்லர்னு ஒரு புது மாதிரியான கதை. பொதுவாகவே நான் நடிக்கணும்னு முடிவெடுத்ததுமே செஞ்ச காரியம், ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் ஜோதிகா நடிச்ச படங்களையும் சிம்ரன் நடிச்ச படங்களையும் பார்க்கறதுதான். என்னோட ரோல் மாடல்னா அவங்கதான். அதனால் அழகா வந்து நின்று ஆடிட்டு போறதைவிட, பர்பாஃமென்ஸ் ஆர்ட்டிஸ்டுன்னு பேர் எடுக்கணும். அதுக்கு இந்த கதை ரொம்ப பொருத்தமா இருந்திச்சு.
அதுவும் க்ளைமாக்ஸ் எடுக்கிற நாளில் நான் ரொம்பவே நெர்வசா இருந்தேன். ஏன்னா அவ்வளவு வெயிட்டான இடம் அது. ஈவினிங் கால்ஷீட் போட்ருந்தாங்க. அன்னைக்கு காலையிலேயே என்னை கூப்பிட்ட டைரக்டர், ‘மதியதுக்கு பிறகு உங்கம்மா கூட பேசாதே. ஃபுல்லா இந்த கேரக்டருக்குள்ளே வாழ ஆரம்பிச்சுரு. தனியா போய் உட்கார்ந்து அப்படியே அந்த கேரக்டருக்குள்ள கரைஞ்சு போயிரு’ன்னு சொன்னார். அது மாதிரியே தனியா போய் உட்கார்ந்துட்டேன். ரொம்ப அழுத்தமான அந்த காட்சியை நான் நடிச்சு முடிச்சதும் சுற்றியிருந்த எல்லாருமே என்னை கை தட்டி பாராட்டுனாங்க.
பேசிக்கலா நடிக்கறதுக்கு ஆசைப்படுற பெண்ணா நான் இருந்தாலும், என்னை சரியா ‘மோல்ட்’ பண்ற விஷயத்தில் வி.ஆர்.பி.மனோகர் சார் கிரேட். அவர் என்னை ‘டால்’ (பொம்மை) னுதான் கூப்பிடுவார் என்றார் ஆராத்யா. (பார்றா..)
இந்த அழகான ‘டால்’ வி.ஆர்.பி.மனோகர் அடுத்து இயக்கவிருக்கும் இன்னொரு படத்திற்காகவும் இப்பவே ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டாராம். அந்த ஷுட்டிங் மே மாசம் இருக்கு. ப்ளஸ் டூ முடிச்சாச்சு. காலேஜூக்கு போகணும். அப்படியே விடாமல் நடிக்கணும். பார்க்கலாம்… என்று இப்பவே கவலைப்படும் ஆராத்யாவிடம், லட்சுமிமேனன்ட்ட ஐடியா கேளுங்களேன் என்று சொல்லதான் ஆசை.
அழகான இரண்டு பெண்கள் அதுவும் ஒரே ஊர் பெண்கள் அவ்வளவு ஈசியாவா பேசிக்கப் போறாங்க…? விடுங்க அவங்கவங்க வேலைய பார்ப்போம்!
-ஆர்.எஸ்.ஏ
Jyothika and Simran are role models for me – Aradhya
Aradhya who is playing the lead role in Thavani Kaatru directed by VRP Manohar, is another import from Cochin/Ernakulam, Kerala. While doing her plus 2, she has been drawn to cinema, when the director was looking for a new face in his film. “Director sir came to meet me and asked me to act giving 4-5 lines of dialogues and he liked my acting. He asked me to watch his short films and told me to call him if I liked them. After watching a short film I immediately rang up him and gave me the confirmation. Once I am into the cinema I started watching Jyothika and Simran films as they are my role models in film industry. I wanted to be recognised as a talented artiste rather than a glamour artiste”, Aradhya started out narrating how she landed in the film industry.
She said that her performance during the climax scene in the film was appreciated by the unit members. “The credit of moulding me into a talented artiste should go to VRP Manohar sir” says excited Aradhya. She has been roped in to play the lead role in director Manohar’s next film as well.